jkr
แสดงบทความที่มีป้ายกำกับ செல்வம் அடைக்கலநாதன் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ செல்வம் அடைக்கலநாதன் แสดงบทความทั้งหมด

செல்வம் அடைக்கலநாதனிடம் இன்று மூன்றாவது நாளாகவும் விசாரணை


வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இன்று 3 ஆவது நாளாகவும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 1.00 மணிக்கு விசாரணைக்கு வருமாறு இன்று காலை அறிவிக்கப்பட்டதையடுத்து தற்போது அவர் அங்கு சென்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியாவிலும் தங்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடந்த புதன் கிழமை இந்தியாவிலிருந்து நாடு திரும்பியிருந்தார்.

கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் சுமார் 20 மணித்தியாலத்திற்கு மேல் பயங்கரவாதத் தடுப்பி பிரிவு தலைமையகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்கு மூலமும் பதிவு செய்யப்பட்டது.

வெள்ளிக்கிழமை இரவு 9.00 மணிக்கு 2ஆம் நாள் விசாரணை முடிந்த பின்பு மறுநாள் சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. மறுநாள் சனிக்கிழமை விசாரணைக்காக அங்கு சென்றிருந்த போது அன்றைய தினம் விசாரணை நடைபெறாத நிலையில் மீண்டும் அழைக்கும் போது சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates