jkr
แสดงบทความที่มีป้ายกำกับ சோதி சாப்ட்வேர் லேபிள்கள் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ சோதி சாப்ட்வேர் லேபிள்கள் แสดงบทความทั้งหมด

புகைப்படத்தை உயிரோட்டமுள்ள புகைப்படமாக மாற்ற இணையவழி!1





உங்
கள் புகைப்படங்களை உயிரோட்டமுள்ள (
Sort-of-living)
புகைப்படமாக முப்பரிமாண தோற்றத்தில் (
Sort-of-3D) பார்க்க விரும்புகிறீர்களா? இதோ
அதற்கான
இணைய வழி மென்பொருள்.
Japanese app என்னும் மென்பொருளி
ல் உ
ங்கள் புகைப்படத்தை தரவேற்றி உ
ங்கள் புகைப்படத்தை உயிரோட்டமுள்ள ஒரு புகைப்படமா
க மாற்
றி அமையுங்
கள்.
http://labs.mppark.jp/hige/ என்ற இணையதளத்திற்கு சென்று CHANGE எ
ன்பதை அழுத்தி புகைப்படத்தை தரவேற்றி கொள்ளுங்கள்.




அதில் ஏற்கனவே உள்ள புகைப்படம் மாற்றம் பெற்று உங்கள் புகைப்படம் உயிரோட்டமுள்ள புகைப்படமாக மாற்றம் பெறுவதை நீங்கள் காணலாம்.
அத்துடன் நீங்கள் உங்கள் புகைப்படத்துக்கு அசைவியக்கங்களையும் (Animations) சேர்த்துக்கொள்ள முடியும். சுட்டியின் (mouse) அசைவுகளுக்கு ஏற்ப புகைப்படத்தின் அசைவில் மாற்றங்களை உண்டுபண்ண முடியும்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

குழந்தைகளுக்கென தனியே ஒரு தளம்


நாம் தனியாக இணையப் பக்கங்களை ஒவ்வொருவரும் அமைக்க முடியாது. இந்த நோக்கத்திற்காகவே நமக்கு இலவசமாக இணையப் பக்கங்களை அமைத்துத் தருகிறது www.totspot.com என்ற முகவரியில் உள்ள இணைய தளம். இதில் நம் குழந்தைகளில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையும் அவர்கள் சாதனை நிகழ்வுகளையும் பதித்து அவர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் காணும்படி அமைக்கலாம். இந்த தளம் சென்று முதலில் நமக்கென்று ஒரு அக்கவுண்ட் திறக்க வேண்டும். இதற்கென நாம் வைத்துள்ள இமெயில் அக்கவுண்ட்டினை இந்த தளம் கேட்கும். பின் அந்த தளத்திற்கு ஒரு மெயில் அனுப்பி நம் விருப்பத்தினை உறுதிப்படுத்தும். பின் நமக்கென ஒரு தளம் திறக்கப்படும். அதன்பின் மீண்டும் இந்த தளத்தில் நுழைந்து நம் பெயரில் லாக் இன் செய்து போட்டோக்களை அமைக்கலாம். இவற்றை எல்லாரும் பார்க்க முடியாது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பார்க்க அவர்களுக்கான அக்கவுண்ட்டை உருவாக்கி போட்டோக்களைக் காணுமாறு செய்திடலாம். வருங்காலத்தில் குழந்தைகள் இவற்றைப் பார்வையிடும்போது நிச்சயம் நம் அன்பைப் புரிந்து கொண்டு அதனை அவர்களின் குழந்தைகளிடமும் காட்டுவார்கள் அல்லவா!
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கம்ப்யூட்டரில் வேலையா கவனம் தேவை


இன்றைய அன்றாட வாழ்க்கையில் கம்ப்யூட்டர்கள் நம் பணியினைப் பங்கு கொண்டு, நம் நடவடிக்கைகளை எளிதாக்கி வருகின்றன. இதனால் அவற்றுடனே நம் முழுப்பொழுதும் செலவழிகிறது. அலுவலகம் ஒன்றின் சொகுசுப் பொருளாகக் கம்ப்யூட்டர் கருதப்பட்ட எண்ணம் மறைந்து, அடிப்படைச் சாதனமாக இது மாறிவிட்டது. எப்படி திருமணமான ஒருவர் தன் மனைவி அல்லது கணவனுடன் பல வழிகளில் அட்ஜஸ்ட் செய்து வாழப் பழகிக் கொள்கிறாரோ, அதே போல கம்ப்யூட்டர்கள், அவை அமைக்கப்பட்டுள்ள சூழ்நிலை ஆகியவற்றுடனும் நாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இல்லை என்றால் வாழ்க்கையில் பிரச்சினைகள் வருவது போல, நம் அன்றாட அலுவல் வாழ்க்கை மட்டுமின்றி, சொந்த நலனிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஒரு நாளில் பெரும்பாலான நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பணியாற்றுகிறோம். பணி முடிந்து வீட்டுக்குத் திரும்புகையில், சற்று சோர்வுடனே இருக்கிறோம். “உங்களுக்கென்ன ஏ.சி. அறையில் தானே வேலை பார்க்கிறீர்கள்’ என்று மற்றவர்கள் சொன்னாலும், நம் உடம்பில் ஏற்படும் சோர்வும் வலியும் அதனால் தான் என்று என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா! உங்கள் மணிக்கட்டு வலியும், கண்களில் எரிச்சலும், முதுகில் எங்கோ சிறிய வலியும், இடுப்பிற்குக் கீழாக, உட்காரும்போதும் எழும்போதும் ஏற்பட்டு மறையும் தீவிரமான வலியும், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால்தான் என்று உங்களுக்குத் தெரியுமா!
நாம் அமைத்துக் கொள்ளும் கம்ப்யூட்டர் அலுவலகச் சூழ்நிலைகளே இதற்குக் காரணங்கள். இவற்றைக் கொஞ்சம் இங்கு கவனிக்கலாம்.

முதலில் நாம் பார்க்க வேண்டியது, எப்போதும் நாம் உற்றுப் பார்த்துப் பணி புரியும் கம்ப்யூட்டர் மானிட்டர் தான். அது அமைக்கப்படும் விதம் தான். ஒரு மானிட்டர், அது சி.ஆர்.டியாக இருந்தாலும், எல்சிடி ஆக இருந்தாலும், உங்கள் முகத்திற்கு இணையாக அல்லது சற்றே தாழ்வாக இருக்க வேண்டும். மானிட்டரை பார்ப்பதற்காக உங்கள் தலையை சிறிது தூக்க வேண்டியதிருக்கையில் கழுத்தில் டென்ஷன் ஏற்படும்; உங்கள் முதுகுப் பகுதியின் மேல் புறத்தில் வலி உண்டாகும். இந்நிலை தொடரும் பட்சத்தில் நிச்சயமாய் இந்த வலிகள் நிலையாக இருக்கத் தொடங்கும். எனவே இதனை தவிர்ப்பதுடன் கீழ்க்காணும் நிலைகளையும் உருவாக்குங்கள். உங்கள் கண்களுக்கும் திரைக்கும் இடையேயான தூரம் 18 அங்குலமாக இருக்கட்டும். இது உங்கள் மானிட்டர் திரையின் அகலத்தைப் பொறுத்து சற்று ஏறத்தாழ இருக்கலாம்.

ஸ்கிரீனை சற்று சாய்த்துவைப்பதாக இருந்தால் அது உங்கள் கண்களின் பார்வைக் கோட்டில் இருக்க வேண்டும். திரையின் ரெசல்யூசன் உங்கள் பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். எனவே அதனை அவ்வப்போது மாற்றி எது கண்களுக்கு உகந்தது என்று தீர்மானித்து அதனையே வைத்துக் கொள்ளவும். மேலும் மானிட்டர் திரையில் எதற்காக அத்தனை ஐகான்கள். சற்று குறைக்கலாமே. அவ்வப்போது தேவைப்படாததை, பயன்படுத்தாததை நீக்கலாம்; அல்லது ஒரு போல்டரில் போட்டு வைக்கலாம். ஸ்கிரீன் மீது வைத்துப் பயன்படுத்தப்படும் ஸ்கிரீன் பில்டர் உங்கள் கண்களில் எரிச்சல் உண்டாக்குவதைத் தடுக்கும். உங்கள் சிஸ்டத்தில் நீங்கள் பயன்படுத்தும் கலர் ஸ்கீம் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பலவகையான வண்ணக் கலவைகளை அமைத்துப் பார்த்து எது உகந்ததாக உள்ளதோ அதனை அமைக்கவும். வண்ணம் மட்டுமின்றி எழுத்துவகையினையும் உறுத்தாதவகையில் அமைக்கவும்.

மானிட்டரைப் பார்த்துவிட்டோம். இனி உங்கள் கைகளுக்குள் கம்ப்யூட்டருக்கான மந்திரக் கோலாகத் தவழும் மவுஸைப் பார்க்கலாம். எளிதில் அதனை அடைந்து கைகளுக்கு வலி எடுக்காவண்ணம் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். உடம்பைச் சாய்க்காமல் அதனை சுழற்றிப் பயன்படுத்தும் வகையில் அருகே அதிக இடத்துடன் இருக்க வேண்டும். கீ போர்டு வைக்கப்பட்டிருக்கும் சிறிய இழுவை டிராவில் வைப்பதனை அறவே தவிர்க்கவும்.
மவுஸ் கையாளும் அதே அளவில், அல்லது அதற்கும் மேலாக நாம் கீ போர்டினைப் பயன்படுத்துகிறோம். உங்கள் கீ போர்டினைச் சரியாக அமைப்பது உங்கள் மணிக்கட்டு மற்றும் முழங்கை வலியை வரவிடாமல் தடுக்கும். கீ போர்டில் டைப் செய்கையில் உங்களுடைய மணிக்கட்டு நேராக இருக்க வேண்டும். முழங்கைகள் 90 டிகிரி கோணத்தில் வளைந்திருக்க வேண்டும். இது உங்கள் நாற்காலியின் நிலையைச் சார்ந்து அமைக்கப்பட வேண்டும்.

இவை எல்லாம் கம்ப்யூட்டருடன் இணைந்தவை. இவற்றை நீங்கள் எங்கிருந்து இயக்குகிறீர்கள். நிச்சயமாய் உங்கள் நாற்காலிகள் தான். பல ஆயிரம் அல்லது லட்சம் செலவழித்து கம்ப்யூட்டர்களை வாங்கி, அவற்றை ஏசி அறையில் வைத்திடும் அலுவலகங்கள், அதனை இயக்குபவர்கள் பழைய வகை நாற்காலியிலேயே அமரட்டும் என விட்டுவிடுவார்கள். அங்குதான் பிரச்சினையே தொடங்குகிறது. நீங்கள் அமரும் நாற்காலி எப்படி இருக்க வேண்டும்? உங்களுடைய பாதம் தரையில் நன்கு பதிந்திருக்கும் வகையில் நாற்காலி அமைக்கப்பட வேண்டும். இதனால் உங்கள் தொடைகளின் பின்புறத்தில் வலி ஏற்படாமல் இருக்கும். நாற்காலியின் குஷன் மிருதுவாக மட்டுமின்றி உறுதியாகவும் இருக்க வேண்டும். அமரும் சீட் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். சரியாக அமருவதற்காக முன்பக்கம் அல்லது பின்பக்கம் சாயக்கூடாது. நாற்காலி நன்றாக தரையில் அமர்ந்திட நான்கு அல்லது ஐந்து கால்களில் இருக்க வேண்டும்.

அடுத்ததாகச் சுற்றுப்புறச் சூழ்நிலை. ஒரேயடியாக வெளிச்சம் அல்லது குறைவான வெளிச்சம் என இருவகைகளில் ஒளியூட்டப்பட்ட கம்ப்யூட்டர் அறைகளே இப்போது உள்ளன. எங்கு பாய்ண்ட் இருக்கிறதோ அங்கு மின்விளக்குகளை அமைத்துவிடுகின்றனர். இது தவறு. இருக்கின்ற விளக்கு ஒளி போதும் என்ற எண்ணம் எப்போதும் ஏற்படக்கூடாது. முடிந்தால் குழல் விளக்கு ஒளி இருக்க வேண்டும். விளக்கொளி உங்கள் தோள் மற்றும் தலைக்கு மேலாக இருக்க வேண்டும்; ஆனால் சரியாக உங்கள் பின்னாலிருந்து ஒளி வரக்கூடாது. உங்கள் மானிட்டர் திரைக்குப் பின்னாலிருந்து ஒளி வரும் வகையில் அமைக்கக்கூடாது. பொதுவாக நிலையாக அமைக்கப்பட்டிருக்கும் விளக்குகளை மாற்றுவது கடினம். எனவே மானிட்டரின் நிலையை மாற்றலாம். மானிட்டரை சிறிது இறக்கி ஏற்றலாம். அல்லது விளக்கு ஒளியை வடி கட்டி கிடைக்குமாறு ஷேட்களை அமைக்கலாம். ஒளியைப் படிப்படியாகக் குறைக்கும் டிம்மர் ஸ்விட்ச் கொண்டு ஒளியைத் தேவைப்படும் அளவிற்குக் குறைத்து அமைக்கலாம். நேரடியாக ஒளி கிடைக்காமல் மறைமுகமாகக் கிடைப்பது இன்னும் நன்றாக இருக்கும்.

பொதுவாக நம்மைப் பார்க்க வருபவர்கள் இல்லாமல், பக்கத்து சீட் நண்பர்களிடம் பேசாமல் பணியாற்ற கம்ப்யூட்டர் உதவுகிறது. இருப்பினும் பல கம்ப்யூட்டர் அறைகளில் தேவையற்ற சத்தம் இருந்து கொண்டே இருக்கிறது. கம்ப்யூட்டருடன், அதன் புரோகிராமுடன் நாம் ஒரு சவாலுடன்தான் பணியாற்று வோம். அந்நிலையில் கூடுதலாகச் சத்தம் இருந்தால் நம் பணி ஒழுங்கு முறை கெட்டுவிடும். சரியான ஒலி நமக்கு பணியில் உற்சாகத்தைக் கொடுக்கும். சிறிய அளவில், மனதிற்கு அமைதி அளிக்கும் இசையை, அறையில் கசிய விடலாம். அல்லது அவை எதுவும் இல்லாமல், அமைதியைப் பேணலாம். இது அங்கு பணியாற்றுபவர்களின் விருப்பத்தைப் பொருத்து அமைக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
செலவு மிச்சம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல அலுவலகங்களில் ஏர் கண்டிஷனிங் இல்லாமல் மின்விசிறி மட்டும் கொண்டு சில கம்ப்யூட்டர் அலுவலகங்கள் இயங்குகின்றன. இந்தியாவின் நம்பர் ஒன் என்று பெயரெடுத்த சாப்ட்வேர் நிறுவனத்தில், செலவைக் குறைப்பதற்காக இன்றும் இரவில் ஏர் கண்டிஷனர் இயங்குவதை நிறுத்திவிடுவதாக என் நண்பர் ஒருவர் கூறினார். இது மோசமான ஒரு நிலையை அங்கு பணியாற்றுபவர்களுக்கு மட்டுமின்றி, மேற் கொள்ளப்படும் வேலைக்கும், அங்கு பயன் படுத்தப்படும் கம்ப்யூட்டர்களுக்கும், அதில் கையாளப்படும் டேட்டாவிற்கும் உருவாக்கும். எனவே வெப்பம் மிகுதியான நம் ஊரில் கூடுமானவரை கம்ப்யூட்டர்கள் பயன்படும் இடத்தில் குறைந்த வெப்பம், அல்லது சற்று மிதமான குளிர் சீதோஷ்ண நிலை இருப்பது உகந்தது.

அதே நேரத்தில், அறைக்குள் வெளியிடப்படும் குளிர் காற்று நேரடியாகக் கம்ப்யூட்டர்கள் மீதோ, அல்லது அவற்றை இயக்குபவர் மீதோ படுவதனையும் தவிர்க்க வேண்டும். இறுதியாகவும் மிகவும் முக்கியமானதாகவும் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், நீங்கள்தான். நேராக நிமிர்ந்து உட்காருங்கள். முதுகை வளைத்து மானிட்டரை உற்று நோக்கி உட்காராதீர்கள். சரியாக அமர்வது பின் முதுகு வலியைத் தவிர்ப்பது மட்டுமின்றி உங்கள் மூளைக்கு ஆக்ஸிஜனைச் சீராக அனுப்பும். வசதியான ஆடைகளை அணியுங்கள். உடம்பைப் பிடிக்கும் ஆடைகள் உங்கள் வேலைப் பண்பினை மாற்றி தொய்வை ஏற்படுத்தும். அதே போல உங்கள் செருப்பு மற்றும் ஷூக்கள் கால்களைக் கடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக நீங்கள் வேலை வேலை என்று அலைந்து கம்ப்யூட்டரே கதி என்று கிடப்பவரா? அப்படியானால் சற்று சோம்பேறியாக இருப்பதில் தவறில்லை. இடை இடையே நாற்காலியிலிருந்து எழுந்து வெளியே வந்து சற்று உடம்பை வளைத்து நிமிர்த்தி அதனை உற்சாகப்படுத்துங்கள். இதனால் உங்கள் மூளைச் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். உணர்ச்சிப் பாதிப்பு ஏற்படாது.

மாறிவரும் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிலவற்றை நம்மால் மாற்ற முடியாது. மின்சார ட்ரெயினில் கூட்டத்தில் பயணிப்பதைத் தவிர்க்க முடியாது. சிறிது நேரமாவது பஸ் நிறுத்தத்தில் நிற்பதை மாற்ற முடியாது. பயணம் செய்கையில் அடுத்தவர் மூச்சு நம் தோள்களிலும் கழுத்திலும் படுவதை விரட்ட முடியாது. கண் தெரியாத பிச்சைக்காரர் டப்பா மைக் வைத்துக் கொண்டு கர்ண கடூரமாக பாடுவதைத் தடுக்க முடியாது. இரு சக்கர வாகனத்தில் செல்கையில் முன் செல்லும் வாகனப் புகையை சுவாசிப்பதைத் தடுக்க முடியாது. சுட்டெரிக்கும் வெயிலில் பச்சை விளக்குக்காய் சிக்னலில் காத்திருக்கும் சிக்கலை தவிர்த்திடவே முடியாது. ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் மேலே சொன்ன அனைத்து வழிகளையும் கடைப் பிடித்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியும். செய்வோமா!
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கூகிளில் நாம் அறிய வேண்டிய வசதிகள்

நம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் தேடுபொறி " Google Search Engine ".

இதில் பொதுவாக இணையதளங்களை மட்டுமே நாம் தேடி வந்தோம்,ஆனால் கூகிள் இன்னும் பல வசதிகளை நமக்கு அளிக்கிறது. இப்பொழுது நாம் கூகிளில் மறைந்துள்ள சில வசதிகளை பார்ப்போம்.


1.நமக்கு Wipro நிறுவனத்தின் தற்போதைய பங்கு சந்தை நிலவரத்தை அறிய

என்று தட்டச்சி செய்து Enter கூடுத்தால் போதும்.



2.இந்தியாவில் உள்ள ஒரு இடத்தின் வெப்ப நிலையை அறிந்து கொள்ள


என்று தட்டச்சி செய்து Enter கூடுத்தால் போதும். அந்த இடத்தின் வெப்ப நிலையை காட்டும்.



3.ஒரு நாட்டின் தற்போதைய நேரத்தை அறிந்துகொள்ள



என்று தட்டச்சி செய்து Enter கூடுத்தால் போதும். அந்த இடத்தின் நேரத்தை அறிந்துகொள்ளலாம்.



4.ஒரு குறிபிட்ட அணியின் Score மற்றும் அட்டவனையை தெரிந்துகொள்ள

என்று தட்டச்சி செய்து Enter கூடுத்தால் போதும்.



5.Google-ல் உள்ள In-Built Calculator மூலம் நாம் விரும்பும் Equation-க்கு விடையை மிக எளிமையாக அறிந்திட முடியும்.

சான்றுக்கு 5*9+(sqrt 10)^3 என்பதின் Answer-ஐ அறிய .



என்று தட்டச்சி செய்து Enter கூடுத்தால் போதும்.Answer வந்துவிடும் .



6.ஒரு அளவினை வேறு ஒரு அளவினில் அறிந்திட,சான்றுக்கு10.5cm-ஐ Inches-ல் அறிந்துகொள்ள.

என்று தட்டச்சி செய்து Enter கூடுத்தால் போதும்




7.ஒரு குறிபிட்ட சொற்கள் பற்றி மட்டும் தேடாமல்,அந்த சொற்களுக்கு தொடர்பான சொல்லை பற்றியும் அறிந்து, ~ என்ற எழுத்தை பயன்படுத்தவும்.

சான்றுக்கு, ~ animation



8.ஒரு குறிபிட்ட சொற்களின் Definition-ஐ அறிந்துகொள்ள,

சான்றுக்கு philosophy என்பதின் Definition-ஐ அறிந்துகொள்ள




9.ஒரு குறிபிட்ட Product-ஐ பற்றி அறிந்து கொள்ளலாம் ,சான்றுக்கு Indian Idli விற்பவர்களை அறிந்து கொள்ள



என்று தட்டச்சி செய்து அழுத்தினால்,அவர்கள் விவரத்துடன் Maps,Reviews மற்றும் தொடர்பு விவரங்களுடன் தகவல்கள் நமக்கு கிடைக்கும்.




10.ஒரு திரைபடத்தின் Reviews மற்றும் Shoetimes பற்றி அறிந்து கொள்ள,

சான்றுக்கு Movie Billa என்று Type செய்து Enter Key அழுத்தவும்.



11.ஒரு இடத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் Housing பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள.
என்று கூடுத்தல் போதும்



12.ஒரு குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் விமானங்கள் குறிப்பிட்ட ஊரிற்கு வந்து செல்லும் விவரங்களை அறிய,அந்த விமானதின் என்ணை சேர்த்து குடுத்தால் போதும்.





13.ஒரு நாட்டின் நாணய மதிப்பை வேறு நாட்டின் நாணய மதிப்பிற்கு மாற்ற.
சான்றுக்கு,US டாலரை நம் இந்திய ரூபாய் மதிப்பிற்கு மாற்ற


என்று குடுத்தால் போதும்.



14.சேலத்தின் Map-ஐ நாம் பார்க்க வேண்டும் என்றால்,Salem map என்று குடுத்தால் போதும்.





15.Google Search where,the,how,and போன்ற வார்த்தைகளை ஒதுகிவிடும் ஆகையால் இந்த வார்த்தையை பயன்பதுதும் பொழுது " + " என்ற குறியை சேர்த்து குடுக்கவும்.






16.ஒரு குறிப்பிட்டவர் கண்டுபிடித்த பொருள் போன்ற விவரங்களை அறிய விரும்பினால் " * " என்ற குறியை சேர்த்து பயன்படுத்தலாம்,சான்றுக்கு isaac newton பற்றி அறிய





17.மற்றும் பேக்கேஜ் கூரியர் சர்வீஸ்களில் எதாவது பொருள்களை நீங்கள் அனுப்பி இருந்தாலோ அல்லது எதாவது பொருள் உங்களுக்கு வரவேண்டி இருந்தால்.அதனுடைய டிராக் நம்பரை Google Search Box-ல் Type செய்து Enter Key அழுத்த வேண்டும்.

சான்றுக்கு




18.US Patents பற்றி ஆறிந்துகொள்ள விரும்பினால், patent என்ற சொற்களுடன் பேடன்ட் எண்ணை Google Search Box-ல் Type செய்து Enter Key அழுத்த வேண்டும்.

சான்றுக்கு


19.குறிப்பிட்ட US Telephone Area Code-ன் Geographical Location-ஐ பார்க்க விரும்பினால்,Google Search Box-ல்,அந்த Location-ன் மூன்று இலக்க Area Code-ஐ தட்டச்சி செய்து Enter Key-ஐ அழுத்தவும் .

சான்றுக்கு



-----------------------------நன்றி -----------------------------
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

குறைந்தவிலை லேப்டாப் ஹெச்.சி.எல் அறிமுகம்

தகவல் தொழில் நுட்ப முன்னணி நிறுவனமான ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனம் ரூ.13,990 விலையில் மடிக்கணினியை (லேப் டாப்) அறிமுகம் செய்துள்ளது.அலைடு கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் 2 நாட்களுக்கு முன் ரூ.14,999-க்கு லேப்டாப்பை அறிமுகம் செய்த நிலையில், ஹெச்.சி.எல் நிறுவனத்தின் இந்த குறைந்தவிலை லேப்டாப் அறிமுகம் குறிப்பிடத்தக்கது.எக்ஸ் மற்றும் ஒய் சீரீஸ் என்று இரு வகை லேப்டாப்களை ஹெச்.சி.எல் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஒய் சீரிஸ் ரகங்கள் விலை 29,999 முதல் 39,999 ரூபாய் வரை கிடைக்கின்றன. 13,990 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள எக்ஸ் சீரீஸ் ரக லேப்டாப்களில் ஃபிளாஸ்க் மற்றும் டிஸ்க் அடிப்படையிலான சேமிப்பு முறைகள் உள்ளன. இதில் லினக்ஸ் என்ற ஆபரேட்டிங் சிஸ்டம் உள்ளது.ஒய் சீர்ஸ் லேப்டாப்களில் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ், விஸ்டா ஆபரேட்டிங் சிஸ்டம் உள்ளது. 2 மாடல்களிலும் நெட்வொர்க் போர்ட்டுகள் உள்ளன.ஒரு கிலோவிற்கும் எடை குறைவாக உள்ள இந்த மலிவு விலை லேப்டாப் 7 அங்குல திரை கொண்டது. மேலும் இன்டெல் ப்ராசஸர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஹெச்.சி.எல் நிறுவனத்தின் பாண்டிச்சேரி மற்றும் உத்தராகண்ட் தொழிற்சாலைகளில் இந்த வகை லேப்டாப்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் விற்பனைப்பிரிவு அதிகாரி ஜார்ஜ் பால் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் முதல் மைக்ரோ கம்ப்யூட்டர், முதல் டெஸ்க் டாப் கணினி, மற்றும் முதல் வீட்டு உபயோக கணினி ஆகியவற்றை அறிமுகம் செய்த வரலாறு கொண்ட ஹெச்.சி.எல் தற்போது இந்த மலிவு விலை மைலீப் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது.இந்தியாவில் லேப்டாப் சந்தை கடுமையாக வளர்ந்து வருவதையடுத்து இந்தியாவிலேயே இதனை உற்பத்தி செய்ய பன்னாட்டு நிறுவனக்கள் கடும் போட்டியில் இறங்கும் என்பது உறுதி.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

விண்டோஸ் XP இல் Start button இன் பெயரை மாற்றுவது எப்படி ?


விண்டோஸ் 7 , விண்டோஸ் Vista என Microsoft இன் புதிய பதிப்புகள் வந்தாலும் இன்றும் மிகக் கூடுதலானவர்களினால் விண்டோஸ் XP ஆனது பயன்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றது இந்த XP இல் Start என்ற பெயருக்கு ஒரு தனி இடம் உண்டு.

ஒரு மாற்றத்துக்காக Start என்ற பெயருக்கு பதிலாக Hello, Virus, Click, End, Begin போன்ற வித்தியாசமான பெயரை வைத்தால் ஒரே பெயரைப் பார்த்துப் பார்த்து சலித்துப்போன நமக்கு இவ்வாறான வித்தியாசமான பெயர்கள் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

விண்டோஸ் XP இன் Start button க்கு நாம் விரும்பிய பெயரை StartBtn Renamer என்ற இந்த இலவச மென்பொருள் மூலம் மாற்ற முடியும் கீழ் உள்ள சுட்டியில் இருந்து மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளவும்

பின் இம் மென்பொருளில் New Lable என்ற இடத்தில் மாற்ற விரும்பும் புதிய பெயரைக் கொடுத்து Rename it என்பதைக் Click செய்யவும். அவ்வளவு தான் நீங்கள் கொடுத்த பெயர் Start என்ற பெயருக்குப் பதிலாக மாறியிருக்கும்.

இது ஒரு Open Source Software என்பதால் இதன் Source file இம் மென்பொருளுடன் தரப்பட்டுள்ளது

மென்பொருளைத் தரவிறக்க: http://www.box.net/shared/36qada80p
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லையா என்று அறிவது எப்படி ?


சில சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சல் திறந்து படிக்கப்பட்டதா அல்லது படிக்கப்படவில்லையா என்று அறிய வேண்டிய அவசியத்தில் இருப்போம் அவ்வாறு அறிவதற்கு உதவுவது தான் SpyPic என்ற இந்த இணையத்தளம். இது ஒரு இலவச சேவையாகும்.

இதன் மூலம் நாம் அனுப்பும் மின்னஞ்சலை எந்த நாட்டில் இருந்து எத்தனை மணிக்குப் படிக்கிறார், எத்தனை தரம் படிக்கிறார். அவர் மின்னஞ்சலை படிக்கும் கணணியின் IP Address போன்ற தகவல்களை இந்த இணையத்தளம் உடனுக்குடன் எமக்குத் தெரியப்படுத்தும்.

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது மின்னஞ்சலை எழுதி முடிந்தவுடன் இந்த இணையத்தளத்துக்கு சென்று உங்கள் மினஞ்சல் முகவரியையும் உங்கள் மின்னஞ்சலுக்கான தலைப்பையும் கொடுக்க வேண்டும்

பின் Select your SpyPig tracking image என்ற இடத்தில் உள்ள எதாவது ஒரு படத்தினை தெரிவு செய்து Number of notifications to receive என்ற இடத்தில் உங்களுக்கு மின்னஞ்சல் பெறுபவர் எத்தனை முறை உங்கள்
மின்னஞ்சலைப் படிக்கும் போது உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதனையும் தெரிவு செய்யவும்

பின் கீழ் உள்ள click to activate my spypic என்ற Button ஐக் click செய்யவும் அப்போது கீழ் உள்ள பெடடியில் நீங்கள் தெரிவு செய்த படம் தோன்றும் அந்த படத்தினை ஒரு நிமிடத்துக்குள் Copy செய்து நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலில் ஏதாவது ஒரு இடத்தில் paste செய்து அந்த மின்னஞ்சலை சாதரண மின்னஞ்சல் போல் அனுப்பவும். அந்த மின்னஞ்சல் திறந்து படிக்கும் போது உங்களுக்கு தகவல் அனுப்பப்படும்.

தள முகவரி : http://www.spypig.com/
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates