jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. แสดงบทความทั้งหมด

பெரும்பான்மையோரின் அங்கீகாரத்துடனேயே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு


இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அனைத்து பிரஜைகளினதும் பெரும்பான்மை அங்கீகாரம் அவசியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். எதிர்வரும் ஏப்ரலுக்கு முன்னர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து அதில் தெரிவாகும் தமிழ்த் தலைமைகளுடன் கலந்துரையாடி, இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கப்போவதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழி தொடர்பாக கேட்டபோதே மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அச்செவ்வியில் அவர் மேலும் கூறுகையில்:

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு பெரும்பான்மையினர் இணக்கம் தெரிவிக்க வேண்டும். பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளாத தீர்வை நடைமுறைப்படுத்த முடி யாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தநிலையில் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியம் தமக்கு உள்ளது. ஏற்கனவே இந்தியாவின் உதவியுடன் 13 ஆவது அரசியலமைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டது. எனினும் அதற்கு மேலதிகமாக அதிகாரத்தை தமிழ் தரப்பு கோருகிறது. இதற்கு பெரும்பான் மையினரின் இணக்கம் தேவைப்படுகிறது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் இதுவரை காலமும் தமது வாக்குகளை வழங்கமுடியாத நிலையில் இருந்தனர். எனினும் தற்போது அவர்கள் எதிர்க்கட்சி வேட்பாளரான சரத் பொன் சேகாவுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர் இதிலிருந்து அவர்களின் கருத்து வெளிப்பட்டுள்ளதுதானே எனக்கேட்டமைக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு கிழக்கு மக்கள் தமது வாக்குகளை வழங்க சந்தர்ப்பம் கிடைத்தமை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் முறைகேடுகள் நடந்திருக்கிறது என்ற சரத் பொன்சேகாவின் குற்றச்சாட் டுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். "இக்குற்றச்சாட்டுக்கு அவர் நீதி மன்றத்தில் பதில் தேடிக்கொள்ள முடியும். பிரஜைகளின் 58 சதவீத வாக்குகள் கிடைத் திருப்பது போதிய ஆதாரமாகும். அந்தளவு வாக்குகள் முறைகேடுகள் மூலம் எப்படி கிடைக்கும்'' என ஜனாதிபதி கேள்வி கூறியுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜனாதிபதி இன்று கண்டிக்கு விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பின்னர் கண்டிக்கு விஜயம் செய்துள்ளார்.இதன் போது கண்டி தலதா மாளிகையில் 3000 மகாசங்க தேரர்கள் ஆசிர்வாதம் வழங்கினர்.

அதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டி செல்வ விநாயகர் ஆலயம், மற்றும் மீராம் முஸ்லிம் பள்ளிவாசல் ஆகிய சமயத் தலங்களுக்கும் விஜயம் செய்தார்.

கண்டி ஆயர் டாக்டர் வியான பர்னாண்டோவிடமும் அங்குள்ள மற்றும் பல தேரர்களிடமும் நல்லாசி பெற்றார்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

எஸ்.பி.யுடன் ஜனாதிபதி மஹிந்த சந்திப்பு ஒன்றரை மணி நேரம் விரிவான பேச்சு


ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.பி.திஸாநாயக்கவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஹங்குராங்கெத்தையிலுள்ள எஸ்.பி. திஸாநாயக்வின் வீட்டிற்கு நேற்று திடீரென ஹெலிகொப்டரில் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவருடன் ஒன்றரை மணி நேரம் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பேச்சுவார்த்தையையடுத்து ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரிப்பதற்கான முடிவினை எஸ்.பி. திஸாநாயக்க எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த முடிவு குறித்து இன்று கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்று நடத்தி எஸ்.பி. திஸாநாயக்க அறிவிப்பாரென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பௌத்த விகாரை வைபவமொன்றில் கலந்துகொள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு சென்றுள்ளார். இதன்போது எஸ்.பி. திஸநாயக்கவின் ஹங்குராங்கெத்திதையிலுள்ள வீட்டுக்கு அவர் சென்றுள்ளார். அங்கு இருவருக்குமிடையில் விரிவான பேச்சுவார்த்øத் இடம்பெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது சில கோரிக்கைகளை எஸ்.பி. திஸநாயக்க ஜனாதிபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்வைத்துள்ளார். இதற்கு ஜனாதிபதியும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் முடிவினை எஸ்,பி. திஸாநாயக்க எடுத்ததாக கூறப்படுகின்றது. இன்று காலை கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் எஸ்.பி. திஸநாயக்க செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜனாதிபதி மஹிந்த உருளைக் கிழங்குகளை பரிசோதிக்கின்றார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆசீர்வாதங்களை வேண்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச றுவன்வெலிமகாசய , ஜெயசிறிமகாபோதிய எனும் இலங்கையில் பிரசித்திபெற்ற பௌத்த ஆலயங்களுக்கு இன்று காலை விஜயம் செய்தார். ஆலயங்களுக்குச் சென்று திரும்பும் வழியில் தம்புள்ளவில் உள்ள வர்த்தக வலயத்தை பார்வையிடச் சென்ற அவர் அங்கு காணப்பட்ட உருளைக்கிழங்குகளை பாரிசோதிப்பதை படத்தில் காண்கின்றீர்கள்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வடக்கு - கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கு இனி இடமேயில்லை: தமிழர்களுக்காகவே முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுகிறது


வடக்குகிழக்கு இணைப்பு என்ற விவகாரம் காலாவதியான விடயம். அது குறித்துப் பேசுவதற்கே இனி இடமில்லை.'' இப்படித்திட்டவட்டமாகக் கூறிவிட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

நேற்றுக் காலை அலரி மாளிகையில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள் ஆகியோரைச் சந்தித்த பின்னர், "உதயன்", "சுடர்ஒளி' நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியருடன் உரையாடிய போதே அவர் இவ்விடயத்தைத் தெளிவுபடக் கூறினார். வடக்கு கிழக்குத் தமிழர்கள் தங்களது ஜனாதிபதியைத் தாங்களும் சேர்ந்து தெரிவுசெய்வதற்கான வாய்ப்பை அளிப்பதற்காகவே தாம் ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டி நடத்துகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"உதயன்", "சுடர் ஒளி" பத்திரிகைகளின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியருடனான உரையாடலின் போது ஜனாதிபதி கூறிய முக்கிய அம்சங்கள் வருமாறு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நான் பேச்சு நடத்தவேண்டும் என்பதை ஏற்கிறேன். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். அவர்களோடு பூர்வாங்கத் தொடர்பாடல்களை நான் ஆரம்பித்துள்ளேன். குறைந்த பட்சம் வடக்கு கிழக்கு இணைப்புக்கான உறுதி மொழியையாவது வழங்கும்படியான உங்களின் கருத்து ஏற்கமுடியாதது.

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது பற்றிய பேச்சுக்கே இனி இடமில்லை. அது கேள்விக்கு அப்பாற்பட்டது. காலாவதியான விவகாரம். புலிகளின் அரசியலுடன் அதுவும் செத்துவிட்டது. புலிகளின் அந்த அரசியலை மீண்டும் தோண்டி எடுத்துக்கொண்டு வராதீர்கள். கிழக்கில் இன்று பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அப்படியிருக்க அவர்களின் விருப்பை மீறி நாம் வடக்கு கிழக்கை இணைத்து, அவர்களுக்கு அநீதி இழைக்க முடியாது. நான் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது ஒரு வாக்குறுதியளித்தேன். அதன்படி, தமிழர் ஒருவரை மாகாண முதலமைச்சராக்கினேன். அதனால் நான் எதிர்கொண்ட எதிர்ப்புகள் சொல்லி மாளாதவை. முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பிக்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என்று ஒரு கூட்டமே பொங்கி எழுந்தது. எனினும், எனது முடிவில் உறுதியாக இருந்து அதனைச் செய்தேன். அப்படி எப்போதும் செயற்பட முடியாது.

ஒரு பிரதேசத்துக்கு ஒருவரும் தனியுரிமை கோர முடியாது. இன்று கொழும்பில் சிங்களவர்கள் சிறுபான்மையினர். அவர்கள் இங்கு(கொழும்பில்) இருபத்தியேழு வீதத்தினராகக் குறைந்துவிட்டனர். அதற்காக அவர்கள் இன்று ஊர்வலம் நடத்தவில்லை. போராட்டம் செய்யவில்லை. எல்லா இடத்திலும் எல்லோரும் கலந்து வாழ அனுமதிப்பதே சரியானது; முறையானது.

ஆகவே, காலாவதியாகிப்போன வடக்கு கிழக்கு இணைப்பை விடுத்து வேறு விடயங்கள் பற்றிப் பேசலாம். இப்படி ஜனாதிபதி குறிப்பிட்டார்.

முன்னதாக பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் கூறியவற்றின் சாராம்சம் வருமாறு:
இந்த ஜனாதிபதித் தேர்தலை எந்தவித வன்முறையும், குழப்பங்களுமின்றி நடத்துவதில் நாம் உறுதியாக இருக்கிறோம். பிஸ்டல் குழுக்களோ, பிற வன்முறை அணிகளோ தலைகாட்ட நாம் இடமளிக்க மாட்டோம். ஆனாலும் எந்தச் சம்பவம் நடந்தாலும் ஒரு கல்லெறி இடம்பெற்றாலும் முழுக் குற்றச்சாட்டையும் அரசுத் தலைமை மீது சுமத்துவதே இங்கு வழமையாக உள்ளது. நானும் இத்தகைய பல அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டுதான் இந்த மட்டத்துக்கு வந்துள்ளேன். 1977 இல் ஐ.தே.கட்சி அரசு ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. என்றாலும் அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளேயே புதிய தேர்தலை நடத்துவதற்குக் கோரி நாம் (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர்) வீதிக்கு இறங்கிப் போராடத் தொடங்கினோம். ஆகவே, தேர்தல்கள் அவசியமானவை. இத் தேர்தல் சாதாரணமானதாக, நீதி, நேர்மையானதாக நடக்க ஊடகவியலாளர்களான நீங்கள் உதவவேண்டும். பக்கச்சார்பாக நடக்காமல் நடுநிலையோடு செயற்படுங்கள். இங்கு நாடு ஒன்று இருந்தால்தான் நாம் அனைவரும் கௌரவமாக வாழ முடியும். எனவே வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடுகளுக்கு இடமளித்து அடங்கிப் போய்விட முடியாது.
கிழக்கில் ஜனநாயகம் துளிர்க்கத் தொடங்கியுள்ளது

கிழக்கில் இன்று ஜனநாயகம் துளிர்க்கத் தொடங்கியுள்ளது. வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த தடவை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போயிற்று எனக் குற்றம் சுமத்தி வருகின்றார்கள். அதன் காரணமாக, அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எப்போது நடத்த முடியுமோ அவ்வளவு விரைவாக அதை நடத்தி, அந்த மக்களுக்கும் அந்த வாய்ப்பை அளித்து, அவர்களும் சேர்ந்து ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு வகை செய்யும் விதத்திலேயே இத் தேர்தல் பிரகடனத்தை நான் வெளியிட்டேன். இதற்காக எனது பதவிக் கலத்தில் இரண்டு ஆண்டுகளைத் தியாகம் செய்யவும் நான் முன்வந்துள்ளேன் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டும் என்று குரல் எழுப்புகின்றார்கள். அது நான் தனித்துச் செய்யும் விடயம் அல்ல. அதுபோலவே சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவும் விவகாரமும். நாடாளுமன்றத்தில் நாம் அனைவரும் இணைந்து செயற்பட்டே இவற்றைச் செய்யமுடியும். நாடாளுமன்றுக்குப் பதில் கூறுபவராகவே அரசுத் தலைவர் இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பமுமாகும். அந்த முறைமையை ஏற்படுத்துவதில் நான் உறுதியாக உள்ளேன். அதில் மாற்றம் ஏதும் இல்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை எல்லோரும் சேர்ந்த ஒழிக்க வேண்டும். எவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வந்தாலும், வர முன்னர் கொடுத்த வாக்குறுதிப்படி, அந்த முறைமையை ஒழிப்பது என்பது கஷ்டமானதே. அடுத்த ஜனாதிபதிப் பதவிக்குப் பிறகு எனக்கும் அரசியலில் இடம் இல்லாமல் போய்விடலாம். எனவே, இந்த ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழிப்பதற்கு நான் எதிரானவன் என்று யாரும் யோசிக்காதீர்கள். இது நாம் எல்லோரும் சேர்ந்தே செய்யவேண்டிய விவகாரம். எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு, உதவி என்பனவும் இதற்கு எனக்கு அவசியம். நாம் கடந்த தேர்தலின்போது அளித்த "மஹிந்த சிந்தனை" உறுதிமொழியில் அநேகமானவற்றை நிறைவு செய்துள்ளோம். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பொன்சேகா வருவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. எதிரணி வேட்பாளராக அவர் வருவாராயின், கையை விரித்து அரவணைத்து அவரை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வெளிநாட்டில் இருக்கும் தங்களின் பிரஜைகளுக்குத் தேர்தலின்போது பங்குபற்றி வாக்களிக்கும் உரிமை சில நாடுகளில் உள்ளது. நாங்களும் அது பற்றிச் சிந்திக்கலாம். அதற்கான சட்டங்கள் ஆக்கப்படவேண்டும். இம்முறை தேர்தலுக்கு அது சரிவராது. காலம் பிந்திவிட்டது. எதிர்காலத்தில் அது குறித்துச் சிந்திக்கலாம். வெளிநாடுகளில் வதியும் சுமார் இருபது லட்சம் இலங்கையர்களும், தாம்தாம் வதியும் நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்குச் சென்று வாக்களிக்கக்கூடிய ஒரு முறைமை குறித்து நாம் ஆராயலாம். என்றார் ஜனாதிபதி
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates