jkr
แสดงบทความที่มีป้ายกำกับ தி மு கா แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ தி மு கா แสดงบทความทั้งหมด

திமுக முப்பெரும் விழாவில் முதல்வருக்கு அண்ணா விருது


திமுக முப்பெரும் விழா இன்று காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி காஞ்சிபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. லட்சக்கணக்கான திமுகவினர் அங்கு குவிந்துள்ளனர். முதல்வர் கருணாநிதிக்கு இன்றைய விழாவில் அண்ணா விருது வழங்கப்படுகிறது.

அண்ணா நூற்றாண்டையொட்டி ஆண்டு முழுவதும் தி.மு.க. சார்பில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டன. நூற்றாண்டு நிறைவு விழாவை பிரமாண்டமாக கொண்டாடுவது எனவும், அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்திலேயே விழாவை கொண்டாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா, பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. நிறுவன நாள் விழா ஆகிய முப்பெரும் விழா இன்று காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி காஞ்சிபுரம் சென்றுள்ளார். காஞ்சிபுரம் எல்லையில், பெங்களூர் நெடுஞ்சாலையில் பொன்னேரிக்கரை அருகே அமைக்கப்பட்டுள்ள அண்ணா நினைவு தூணை காலை அவர் திறந்து வைத்தார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates