jkr
แสดงบทความที่มีป้ายกำกับ நடிகை ரம்பா แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ நடிகை ரம்பா แสดงบทความทั้งหมด

திருப்பதியில் டிசம்பர் 27-ந்தேதி நடிகை ரம்பா திருமணம்


“உழவன்” படம் மூலம் 1993-ல் தமிழில் கதாநாயகியாக அறிமுக மானவர் ரம்பா. முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், பிரபு, சரத்குமார், கார்த்திக், விஜய், அஜீத், பிரபுதேவா போன்றோருடன் நடித்துள்ளார்.

“உள்ளத்தை அள்ளித்தா”, “சுந்தரபுருஷன்”, “அருணாசலம்”, “காதலா காதலா” உள்பட பல படங்கள் ரம்பா நடித்து ஹிட் ஆனவை. இந்தி, தெலுங்கு, மலை யாளம், போஜ்புரி படங்களிலும் நடித்துள்ளார்.

ரம்பாவுக்கு 33 வயதாகிறது. மீனா உள்ளிட்ட சககால கதாநாயகிகளுக்கு திருமணம் முடிந்துள்ளது. ரம்பா மட்டும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தார். செக் மோசடி வழக்கு சர்ச்சைகளிலும் சிக்கினார்.

“திரிரோசஸ்” படத்தை சொந்தமாக தயாரித்து நஷ்டமானதால் கடனிலும் மூழ்கினார். தற்போது அப்பிரச்சினைகளில் இருந்து மீண்டுள்ளார்.

இதையடுத்து ரம்பாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. பிரபல தொழில் அதிபர் ஒருவரை மணக்கிறார். அவர்தான் சமீபத்தில் ரம்பாவுக்கு வெளிநாட்டு கார் ஒன்றை வாங்கி பரிசாக அளித்தாராம்.

திருமணத்தை ரம்பா ரகசியமாக வைத்துள்ளார். அடுத்த மாதம் 27 இல் திருப்பதியில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates