jkr
แสดงบทความที่มีป้ายกำกับ நாகப் பாம்பு แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ நாகப் பாம்பு แสดงบทความทั้งหมด

பாய் பிரண்ட் இல்லை… பாம்பு பிரண்ட் உண்டு


பாம்பு… பயமாய், வியப்பாய், அழகாய், மிரட்சியாய் தெரியும் உயிரினம். கண்ணீர் புகை குண்டு போட்டு கலைக்க முடியாத கூட்டத்தில், ஒரு பாம்பை உள்ளே விட்டால் போதும். மொத்த கூட்டத்தையும், ஓட, ஓட விரட்டி விடும். அதனால் தான், “பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்’ என சொல்கின்றனர்.

அந்த அளவுக்கு சமுதாயத்தில் பயத்தை ஏற்படுத்தியுள்ள பாம்பை லாவகமாக பிடித்து தன் மந்திரக்கைகளால் வசமாக்கி விடுகிறார் ஒரு கல்லூரி மாணவி. எத்திராஜ் கல்லூரியில் சுற்றுலா இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி தீபிகா தேவிக்கு (21) பாம்புகள்தான் நெருங்கிய நண்பர்கள்.அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியில் கிணற்றில் கிடந்த பாம்பை பார்க்க பெரும் கூட்டம். தன் தந்தையுடன் அந்த வழியே வந்த தீபிகா உடனே களமிறங்கினார்.கிணற்றில் இறங்கி, கயிற்றின் உதவியுடன் அந்த பாம்பை பிடித்தார். நான்கடி நீளத்தில் இருந்த அந்த நல்ல பாம்பு அனைவரையும் கண்டு படமெடுத்து சீறியது. அந்த பாம்பை லாவகமாக பிடித்து தான் வைத்திருந்த கூடையில் போட்டுக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றார்.கிணற்றில் அதிக நேரம் இருந்ததால் பாம்பின் உடலில் காயங்கள் இருந்தன. அவற்றிற்கு பச்சிலை சாறு மூலம் மருந்திட்டு குணமாக்கி, பின் மக்கள் நடமாட்டம் இல்லாத கொரட்டூர் ஏரி பகுதியில் பாம்பை விட்டு விட்டு திரும்பியுள்ளார் தீபிகா.

“பாம்பு பிடிக்கும் பழக்கம் எப்படி வந்தது’ எனக் கேட்டபோது, தீபிகா கூறியதாவது: சிறு வயது முதலே எங்கள் வீட்டின் அருகில் வரும் நாய், பூனைக் குட்டிகளையும், அடிபட்டு தாயை பிரிந்த பறவை குஞ்சுகளையும் எடுத்து வந்து அவற்றிற்கு உணவளித்து பாதுகாப்பேன். பள்ளிக்கு செல்லும் போது, பல நாட்கள் நான் கொண்டு செல்லும் உணவை சாலையில் இருக்கும் விலங்குகளுக்கு இட்டுச் செல்வது வழக்கம். நான் செல்லும் வழியில் எந்தப் பிராணி அடிபட்டு கிடந்தாலும், நோய்வாய்ப் பட்டு கிடந்தாலும் அவற்றிற்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்வேன். அப்படித் தான் பாம்புகள் மேலும் எனக்கு பரிவு ஏற்பட்டது.சென்னையில் மிகப்பிரபலமான ஸ்டான்லி பெர்னாண்டசிடம் விஷம், விஷமற்ற பாம்புகளை பிடிப்பது என்பது பற்றி கடந்த ஆறு மாதமாக பயிற்சி எடுத்து வருகிறேன். இதுவரையில் நாகப்பாம்பு, கோதுமைநாகம், சாரைப்பாம்பு ஆகியவற்றை பிடித்துள்ளேன். பிடிப்பவற்றை பாதுகாப்பாக, மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விட்டுவிடுவதுதான் எனக்கு முதல் வேலை.பாம்பு பிடித்துவரும் போது, வீட்டின் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு அந்த பாம்பை பற்றிய முழுவிவரங்களையும் சொல்லித் தருவதுடன், அவர்களையும் பாம்பை நேசிக்க வைத்து வருகிறேன். தற்போது, கிண்டியில் உள்ள பாம்புப் பண்ணையின் டாக்டர் கண்ணன் எனக்கு பாம்புகளை பற்றிய புத்தகங்களை கொடுத்து உதவி வருகிறார்.அவர் உதவியுடன், பள்ளிகளில் சென்று பாம்புகள் மற்றும் உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவி வருகிறேன். கல்லூரி படிப்புடன் ஐ.எப்.எஸ்., தேர்வுக்காகவும் பயிற்சி எடுக்கிறேன். புளூ கிராஸ் போன்று விலங்குகளை பராமரிக்க தனியான அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது எனது லட்சியம். இவ்வாறு தீபிகா கூறினார்.

கல்லூரி மாணவியான தீபிகாவிற்கு, பாய் பிரண்ட் இல்லை. ஆனால், தினமும் வந்து ஹாய் சொல்லும் பாம்பு பிரண்ட் இருக்கிறதாம். இது பற்றி தீபிகா கூறுகையில், “”என் வீட்டின் அருகில் தினசரி வந்து போகும் பச்சை பாம்பு, எனக்கு நெடுநாளைய தோழியாக மாறி விட்டது. தாயிடம் இருந்து பிரிந்து வந்த அணில் குஞ்சும் என்னிடம் பல ஆண்டுகள் பாசமாக இருந்தது. நாளடைவில், என்னுடன் கல்லூரி வரைக்கும் அணில் குஞ்சு வந்து சென்றதும் உண்டு,” என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பாவம் பார்த்த பாலகியையும் விட்டு வைக்காத பாம்பு - ஆனமடுவயில் நேர்ந்த பரிதாபம்


நாகப் பாம்பு தன்னைத் தீண்டிவிட்டதை அறியாத பதினைந்து வயது பாடசாலை மாணவி, அப்பாம்பினை கொல்ல முயன்ற தகப்பனை தடுத்து பாம்பைக் காப்பாற்றினார். எனினும் சிறிது நேரத்தினுள் அப்பாம்பின் விஷம் உடலில் ஏறியதால் அம்மாணவி பரிதாபகரமாக மரணமானார். இச் சம்பவம் ஆனமடுவ தேர்தல் தொகுதியில் உள்ள ஊரியால என்னும் விவசாயக் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

நெஞ்சை உருக்கும் இச்சம்பவம் குறித்து மேலும் கூறப்படுவதாவது :- ஊரியாவ கிராமத்தில் உள்ள விவசாயியான இலங்கக்கோன் தனது குடும்பத்தாருடன் இங்கு வசித்து வருகின்றார். சம்பவம் இடம்பெற்ற தினமான செவ்வாயன்று (06.10.2009) வழக்கம் போன்று இரவு பணிகளை முடித்துக் கொண்டு படுக்கைக்குச் சென்று விட்டனர்.

இரவு சுமார் 11.30 மணியளவில் தன் மீது ஏதோ ஊர்ந்து செல்வதை அவதானித்த இலங்கக்கோன் படுக்கையை விட்டு எழுந்து பார்த்தபோது நாகப்பாம்பொன்று ஒரு மூலையில் நிற்பதை அவதானித்தார். அவ்வமயம் வீட்டிலுள்ள அனைவரும் எழுந்துவிட்டனர்.

இலங்கக்கோன் பாம்பை அடித்துக்கொல்ல முயன்ற போது அவரது மகளான சிங்கள மகா வித்தியாலயத்தில் பயிலும் 15 வயது நிரம்பிய நிரோஷா சந்திரரத்தின என்பவர் குறுக்கிட்டு பாம்பை அடிக்க வேண்டாமென்றும் அது எமக்கு எதுவிதமான தீங்கும் செய்யவில்லையே என்று கூறவும் தகப்பன் மனம் இரங்கி பாம்பை கொல்லாமல் துரத்தி விட்டார்.

இதனையடுத்து சற்று நேரத்தினுள் தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், தொண்டை அடைப்பதாகவும் மகள் நிரோஷா தெரிவித்தார். சில கைமருந்துகள் செய்தும் நிலைமை மோசமாகவே புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மரணமானார்.

பிரேத பரிசோதனையின் போது நிரோஷாவின் காலில் நாகப் பாம்பு தீண்டியதற்கான அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது. மரண விசாரணை நடத்திய புத்தளம் திடீர் மரணவிசாரணை அதிகாரி எம். எச். எம். சபீயூ பாம்பு கடித்ததால் ஏற்பட்ட விபத்து மரணம் எனத் தீர்ப்பு வழங்கினார். வைத்திய அதிகாரி ஏ. ரவீந்திரன் பிரேத பரிசோதனை நடத்தினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates