jkr
แสดงบทความที่มีป้ายกำกับ நிஷாந்த முத்துஹெட்டிகம แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ நிஷாந்த முத்துஹெட்டிகம แสดงบทความทั้งหมด

"ஜோதிடர்' முன்னிலையிலேயே முத்துஹெட்டிகம சத்தியப்பிரமாணம்


தென் மாகாண சபைத்தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் காலி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய நிஷாந்த முத்துஹெட்டிகம ஜோதிடர் ஒருவரின் முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு தென் மாகாண சபைக்கு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட போதிலும் முத்துஹெட்டிகம அதில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் காலியில் வைத்தே ஜோதிடர் சுமணதாஸ அபேகுணவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது அவர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் தென் மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள போதிலும் சபையில் அவர் சுயமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates