jkr
แสดงบทความที่มีป้ายกำกับ பாலஸ்தீனத்தில் காஸா แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ பாலஸ்தீனத்தில் காஸா แสดงบทความทั้งหมด

இஸ்ரேலின் போர் விமானங்கள் காஸா ஸ்டிரிப்பில் தாக்குதல்


gaza-attack-1-2புத்தாண்டு தினத்தில் உலகம் முழுதும் அமைதி வேண்டி நேற்று கொண்டாட்டங்களும் பிரார்த்தனைகளும் இடம்பெற்ற வேளை உலகில் ஓயாது வன்முறை நிகழ்ந்து வரும் பாகிஸ்தான் நாட்டிலும் மத்திய கிழக்கின் காஸாவிலும் தாக்குதல் சம்பவங்கள் வழமை போல் இடம்பெற்று பல பொது மக்களின் உயிரைப் பலி வாங்கியிருக்கின்றன.

பாகிஸ்தானின் வரிசிஸ்தான் நகரில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலி எண்ணிக்கை தற்போது 90 ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப் படுகிறது.

இதேவேளை பாலஸ்தீனத்தில் காஸா சிட்டியின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலும் காஸா ஸ்டிரிப் எனும் முனைவுப் பகுதியிலும் இஸ்ரேலின் F16 ரக விமானங்கள் ஏவுகணைத் தாக்குதலையும் யுத்த டாங்கிகள் மூலம் காஸா ஸ்டிரிப்பின் தென் பகுதியில் குண்டுத் தாக்குதலையும் நேற்று நிகழ்த்தியுள்ளன. இத்தாக்குதல்களில் இதுவரை 5 பேர் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்தும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற வருடம் டிசம்பர் 27 இல் தொடர்ந்து 22 நாட்களாக இஸ்ரேல் காஸா ஸ்டிரிப்பில் நடத்திய இராணுவ முன்னெடுப்பில் 1400 பொது மக்கள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates