jkr
แสดงบทความที่มีป้ายกำกับ புதினம் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ புதினம் แสดงบทความทั้งหมด

புதினம், தமிழ்நாதம் இணையத்தளங்கள் நிறுத்தப்பட்டதன் பின்னணி என்ன?


புதினம், தமிழ்நாதம் எனும் இரு இணையத்தளங்களும் அவுஸ்திரேலியாவில் உள்ள கரன் என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இவ் இரு இணையத்தளங்களும் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்ரரின் மேற்பார்வையில் இயங்கி வந்தன. இவ் இணையங்களுக்கான செய்திகள் வன்னியில் இருந்து நந்தவனம் எனும் பெயரில் இயங்கிவந்த புலிகளின் இளை ஒன்றில் இருந்து அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது.

அதேநேரம் இவ் இணையத்தினை நிர்வகித்து வந்த கரன் என்பவருக்கு தயா மாஸ்ரரின் சிபார்சின் பேரில் மேற்குலக நாடொன்றில் வசிக்கும் தமிழ் தொழில் அதிபர் ஒருவர் நிதி உதவி செய்து வந்துள்ளார். ஆனால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கரனுக்கான மாதாந்த வருமானம் கிடைக்காமையால் அவ்விணையம் தடைப்பட்டிருக்க வேண்டும் என கடந்த காலங்களில் புலிகள் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர்களில் ஒருவர் சந்தேகம் தெரிவித்தார்.

அத்துடன் தயா மாஸ்ரர், இலங்கை அரசாங்கத்தினால் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார் என்பது பலரினாலும் உணரப்பட்டுள்ள விடயம். அந்நிலையில் தயா மாஸ்ரரின் நம்பக்கைக்கு உரியவரான கரனால் நிர்வகிக்கப்பட்டு வந்த இணையம் தனிப்பட்ட காரணங்களுக்காக சேவையை நிறுத்தியுள்ளதாக அறிவித்ள்ளது. தனிப்பட்ட காரணங்கள் எனும்போது தயா மாஸ்ரரின் தேவைக்காக நிறுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட இணையம், பிற்காலத்தில் தயா மாஸ்ரர் கும்பல் மீண்டும் ஒரு வடிவத்தில் மக்களை ஏமாற்ற மக்கள் முன் தோன்றும்போது புதினம், தமிழ்நாதம் போண்ற இணையங்களும் தமது வடிவத்தையும் மாற்றிக்கொண்டு வெளிவருவதற்கு முன் ஏற்பாடாக நிறுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகின்றது.

புலிகள் இயக்கம் இரு பிரிவுகளாக பிரிந்துள்ளபோது, குறிப்பிட்ட இரு இணையங்களும் கே.பி தரப்பினரை ஆதரிவந்திருந்தன. கே.பி யின் கைதை தொடர்ந்து இடம்பெற்ற தொடர்கைதுகளையும், இலங்கை அரசியல் மாற்றங்களையும் வைத்து நோக்குகின்றபோது, கொழும்பில் தடுப்புக்காவலில் உள்ள கேபி யின் அழுத்தத்தில் குறிப்பிட்ட இணையங்கள் நிறுத்தப்படனவான என்கின்ற சந்தேங்களும் எழுந்துள்ளன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புதினம் இணையத்தளம் மூடல்?


விடுதலைப் புலிகள் ஆதரவு முக்கிய இணையத்தளமான புதினம் திடீரென மூடப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இனிமேல் இவ்விணையத்தளம் இயங்காது என்ற செய்தியை புதினம் வெளியிட்டுள்ளது.

விடுதலை புலிகள் சார்பான புதினம் இணையத்தளம் முல்லைத்தீவில் இறுதிக்கட்ட மோதல்களில் போது போர்க்கள நிலவரத்தை உடனுக்குடன் தரவேற்றம் செய்தது.

மேலும், போரின் கடைசி நாளில் புதினம் தளத்தின் செய்தியாளர் ராணுவத்தின் கடைசி அகோர தாக்குதலுக்கு மத்தியில் சிக்கிய நிலையிலும் கையடக்க தொலைபேசி மூலமாக கொடுத்த கடைசி செய்தி அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில் புதினம் இணையத்தள முகவரிக்கு போனால், ''தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம்'' (This is to advise due to personal reasons this website will not be functioning anymore) என்ற தகவல் மட்டுமே உள்ளது.

புதினம் இணையத்தளத்தின் திடீர் மூடல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதினம் இணைய மூடப்பட்டது ஒன்றும் புதினம் அல்ல எதிர்ப்பாக்கப்பட்ட ஒன்று ஊடகம் என்பது நடு நிலையாக ஏலுத வேண்டுமே தவிர யாருக்காகவும் எவர் சார்பாகவும் எழுதக் கூடாது இது புதினத்துக்கு மட்டும் அல்ல அனைத்து இணைய தளத்துக்கும் பொருந்தும் ஊடகம் என்பது நீதிக்குச் சமமானது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates