jkr
แสดงบทความที่มีป้ายกำกับ புத்தளம் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ புத்தளம் แสดงบทความทั้งหมด

வாகன விபத்தில் இளைஞன் உயிரிழப்பு : மதுரங்குளியில் பதற்றம்


புத்தளம் மதுரங்குளியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து அங்கு ஏற்பட்ட பதற்ற நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கடற்படை, இராணுவம், பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி வந்த சொகுசு பஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் அதில் வந்த 34 வயது நிரம்பிய இளைஞர் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் பஸ்ஸின் மீது தாக்குதல் நடத்தினர். சம்பவ இடத்துக்கு விரைந்த முந்தல் பொலிஸார் ஆகாயத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக எமது பிராந்திய நிருபர் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates