jkr
แสดงบทความที่มีป้ายกำกับ மலேசிய அகதிகள் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ மலேசிய அகதிகள் แสดงบทความทั้งหมด

சட்டவிரோத குடியேற்றவாசிகளை தாய்நாட்டுக்கு அனுப்புமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை


வெளிநாடுகளில் வழி மறிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சட்ட விரோத குடியேற்றவாசிகளைத் தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சு கேட்டுள்ளது.

அவுஸ்திரேலியா, இந்தோனேஷியா, கனடா ஆகிய நாடுகளின் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளினால் சட்டவிரோத குடியேற்றவாசிகள் பலர் வழி மறிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லகம தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களுள் இலங்கையைச் சேர்ந்தவர்களும் இருப்பதாக அமைச்சர் கூறினார். இவர்களில் இலங்கையர் பற்றி அறிந்து கொள்ள அந்தந்த நாட்டு இலங்கைக்கான தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மலேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்

மலேசிய அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 6 இலங்கையர்கள், அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரை சந்திக்க தமக்கு அனுமதி வழங்குமாறு கோரி 7 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண்ணொருவர் உட்பட உண்ணாவிரதம் இருக்கும் ஆறு பேரும் மலேசியாவில் ஜோஹோர் மாநிலத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 108 இலங்கை அகதிகளில் அடங்குகின்றனர். செல்லுபடியாகும் பிரயாணப் பத்திரங்களை வைத்திருக்காததால் இவர்களை ஹோட்டல் ஒன்றில் வைத்து கடந்த மாதம் கைது செய்தனர்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் 6 இலங்கையர்களுக்கும் அகதி அஸ்தஸ்த்துக்கான பத்திரங்களை வழங்கியுள்ளது என்று அவர்கள் தெரிவித்திருந்ததாக தடுப்புக் காவல் கைதிகளுக்காகப் பேசிவரும் உள்ளூர் மனித உரிமைகள் காப்பகம் ஒன்றின் ஒருங்கிணைப்பாளர் ஈ. செல்வராஜா தெரிவித்துள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates