jkr
แสดงบทความที่มีป้ายกำกับ யாழ். แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ யாழ். แสดงบทความทั้งหมด

யாழிலிருந்து கொழும்பு செல்ல பாதுகாப்புப் பயண அனுமதி தேவையில்லை:யாழ்.அரச அதிபர்


- யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான பாதுகாப்புப் பயண அனுமதி (கிளியரன்ஸ்) இன்று முதல் தேவையில்லையென யாழ்.அரச அதிபர் கே.கணேஷ் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்காக இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த பாதுகாப்புப்பயண அனுமதி (கிளியரன்ஸ்) இன்று புதன்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளதென, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்ததாக யாழ்.அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து யாழ்.அரச அதிபர் அனுப்பிய செய்திக் குறிப்பில்,

"இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த 'கிளியரன்ஸ்' நடைமுறை இன்று புதன்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வோர் தமது அடையாள அட்டையின் மூன்று போட்டோப் பிரதியினை காண்பித்துக் கொழும்பு செல்ல முடியும்.

மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் பாரவூர்திகள் நாவற்குழி அரச களஞ்சிய சாலையில் அனுமதியினைப் பெற்று வாகனத் தொடர் அணியுடன் கொழும்பு செல்ல முடியும்" என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வவுனியாவில் இருந்து ஏ-9 வீதியூடான பஸ் வண்டி பிரயாண நடைமுறையில் இன்று முதல் தளர்வு


யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவ அனுமதி பெற்று வந்தவர்கள் மட்டுமே வவுனியாவில் இருந்து ஏ-9 வீதியூடாக பஸ் வண்டிகளில் பிரயாணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்ற நடைமுறை தளர்ததப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர்கள் மட்டுமல்லாமல், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்பவர்கள் வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச்சசாவடியில் தமது அடையாள அட்டையின் போட்டோ பிரதி ஒன்றைக் கொடுத்து, அதில் இராணுவ அதிகாரியின் கையெழுத்து இலச்சினையைப் பெற்றுக்கொண்டு பிரயாணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்புதிய நடைமுறை இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளதாக இபோசவின் யாழ் பொதுமுகாமையாளர் எஸ்.கணேசபிள்ளை தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதையடுத்து, இன்று 8 பஸ் வண்டிகளில் பயணிகள் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்குப் பயணமாகியதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் யாழ்ப்பாணத்தில் இருந்து தென்பகுதிக்குப் பயணம் செய்பவர்களுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படுமா என்பது குறித்த அறிவித்தல் தங்களுக்கு உடனடியாகக் கிடைக்கவில்லை என்றும் இபோசவின் யாழ் பொதுமுகாமையாளர் கணேசபிள்ளை தெரிவித்தார்.

இதேபோன்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்பவர்களுக்கான நடைமுறை என்ன என்பது பற்றியும் தெளிவான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

குருநகர் ஐந்துமாடி குடியிருப்பாளர்களுக்கு அப்பால் கிழக்குப்புற வீதி திறந்து விடப்பட்டதால் மக்கள் குடியேற்றம்!


யாழ். குருநகர் ஐந்துமாடிக் குடியிருப்பாளர்களுக்கு அப்பால் கிழக்குப் புறமாக உள்ள வீதி மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்ட பின்னர் இவ்வீதியின் வடக்குப் புறமாக உள்ள வீடுகளில் மக்கள் மீளவும் குடியேறி வருகின்றனர். உடைந்து சேதமடைந்த வீடுகளை குடியிருப்பாளர்கள் திருத்தியமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும் குருநகர் கடற்கரை வீதியின் பழைய பூங்கா வீதியில் (பிள்ளைத்தாச்சி வீதிச்சந்தி) இருந்து கொழும்புத்துறைக்கு செல்லும் கடற்கரை வீதி பாரியளவில் சேதமடைந்து குன்றும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இவ்வீதியினூடாக பயணிக்கும் மக்கள் மிகுந்த போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பாசையூர் புனித அந்தோனியாhர் ஆலயம் மற்றும் பாசையும+ர் மீன்சந்தை ஆகிய இடங்களுக்குச் செல்லும் மக்களும் இவ்வீதியையே தற்போது பாவித்து வருகிறார்கள். எனவே இவ்வீதி உடன் திருத்தியமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அம்மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். குருநகர் கடற்கரைவீதி திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்ட போதிலும் மீனவர்கள் குறிப்பிட்ட பாதையூடாக மட்டும் கடலில் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளபோதிலும் இப்பகுதிகளில் குடியேறி வசித்துவரும் மக்ள் எவரும் கடலில் கால் நனைக்கக்கூட அனுமதிக்காமல் படையினர் இவ்வீதியின் வடக்குப் புறத்தில் கடற்கரை வீதிக்கருகாமையில் தொடர்ந்தும் முட்கம்பி வேலிகளை அமைத்துள்ளனர். அத்துடன் அவைகளைப் புதுப்பித்து செப்பனிட்டும் வருகின்றனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் யாழ். மாணவர்களுக்கான பரீட்சை

இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் இயற்கை விஞ்ஞான பீடத்திற்கு விண்ணபித்த யாழ். மாணவர்களுக்கான ஆங்கில பாட நெறி மதிப்பீட்டுப் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பல்கலைகழக யாழ் பிராந்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.

அதேவேளை இலங்கை திறந்த பல்கலைக் கழக யாழ். பிராந்திய நிலையத்தில் 2009/2010 ஆம் கல்வி ஆண்டுக்கான சமூக விஞ்ஞான சான்றிதழ் கற்கைநெறி மற்றும் சமூக விஞ்ஞான கலைப் பட்டத்திற்கான நெறிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கே மேற்படி பரீட்சை நடைபெறவுள்ளதாக அதன் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates