jkr
แสดงบทความที่มีป้ายกำกับ விஜேதாச ராஜபக்ஷ แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ விஜேதாச ராஜபக்ஷ แสดงบทความทั้งหมด

விஜேதாச ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்


பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அக்கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவினால் கட்சியின் உறுப்புரிமை விஜேதாச ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டது.

விஜேதாச ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியின் மஹரகம அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணியாகப் பணியாற்றும் விஜேதாச ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் 'கோப் என அழைக்கப்படும் பொதுமுயற்சியாண்மை நிலையியற் குழுவின் தலைவராக முன்னர் பணியாற்றியிருந்தாரென்பதும் குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates