jkr
แสดงบทความที่มีป้ายกำกับ விளையாட்டு செய்திகள் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ விளையாட்டு செய்திகள் แสดงบทความทั้งหมด

இலங்கைக்கு முதல் தங்கப்பதக்கம்


சீனாவின் குவாங்சூ நகரத்தில் 18வது ஆசிய மெய்வல்லுனர்; போட்டிகள் கடந்த 9ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன. இதில் இலங்கையின் மஞ்சுல குமார விஜயசேகர என்பவர் நேற்று நடைபெற்ற ஆடவர்களுக்கான உயரம் பாயும் போட்டியில் இலங்கைக்கு முதன் முதலாக தங்கப் பதக்கம் ஒன்றை பெற்றுக் கொடுத்துள்ளார். 2.10 மீற்றர் உயரத்தை தெரிவு செய்து பாய்வதற்கு ஆரம்பித்த விஜயசேகர 2.26 மீற்றர் உயரத்தையும் பாய்வதற்கு முயற்சி செய்து ஒருமுறை பவுலாகியதை தொடர்ந்து, 2.23 மீற்றர் உயரத்தை பாய்ந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இது குறித்து விஜயசேகர தெரிவிக்கையில், நான் இந்த உயரத்தை பாய்ந்து வெற்றிபெற்றதில் கூடிய மனஈடுபாடு இல்லை. இருப்பினும் தங்கபதக்கத்தை வென்றதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி .எனது இலக்கு 2.27 மீற்றர் உயரம் பாய்வதாகும் என்றார். இலங்கையை சேர்ந்த விஜயகோன் ஆடவர்களுக்கான 1500 மீற்றர் ஓட்ட போட்டியில் ஏற்கனவே வெண்கல பதக்கத்தை இலங்கைக்கு பெற்றுகொடுத்துள்ளதோடு, உயரம் பாயும் போட்டியில் விஜயசேகர தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார். பதினேழு நாடுகள் பங்கேற்கும் இப்போட்டிகளில்,இரண்டு பதக்கங்களுடன் இலங்கை 11 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடதக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

'சாம்பியன்ஸ் லீக் 20-20' : முதல் அரை இறுதி நாளை


'சாம்பியன்ஸ் லீக் 20-20' போட்டித் தொடரின் முதல் அரை இறுதி ஆட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

நாளை மறுநாள் நடைபெறும் 2ஆவது அரை இறுதிப் போட்டியில், மேற்கு இந்தியத் தீவுகளின் டிரினிடாட்-டுபாகோ அணியும், தென் ஆபிரிக்காவின் கோப்ராஸ் அணியும் மோதவுள்ளன.

எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் 2ஆவது அரை இறுதியில் டிரினிடாட் மற்றும் கேப் கோப்ராஸ் அணிகள் சந்திக்கின்றன. டிரினிடாட் அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வருகிறது. சாம்பியன் பட்டத்தையும் இந்த அணியே வெல்லும் என்றும் பலரால் கணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஸ்ரீசாந்த் தனது பழக்கங்களை மாற்றிக் கொள்ளவேண்டும்

இந்தியாவிற்காக நீண்ட நாள் விளையாட வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் வேகப்பந்து வீச்சாளர் சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த் தனது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று அவருக்கு சமீபகாலத்தில் பயிற்சி அளித்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து மேதை ஆலன் டோனல்ட் கூறியுள்ளார்.

இங்கிலாந்து கவுண்டி அணியான வார்விக் ஷயருக்கு பிரட் லீ, மோர்னி மோர்கெல் போன்ற வீரர்கள் இல்லாத நிலையில் ஸ்ரீசாந்தை அழைக்கலாம் என்று வார்விக் ஷயர் அணிக்கு பரிந்துரை செய்தவர் டோனல்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்தியாவிற்காக நீண்ட காலம் விளையாட வேண்டும் என்ற ஆசை ஸ்ரீசாந்திற்கு இருந்தால் அவர் தன் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது நல்லது.

வார்விக் ஷயர் அணிக்காக சில நல்ல ஸ்பெல்களை அவர் வீசினார், போட்டியின் முடிவுகளில் அவரது பந்து வீச்சும், எடுத்த விக்கெட்டுகளும் ஒரு முக்கியப் பங்களிப்பை செய்தது.

ஆக்ரோஷமாக ஒருவர் வேண்டும் என்று நாங்கள் நினைத்த போது, ஸ்ரீசாந்த் அந்த தேவையை நிறைவேற்றுவார் என்று எனக்கு தோன்றியது. நான் அவரை கட்டுப்படுத்த முடியும் என்று எனக்கு தெரியும். நாங்கள் இருவரும் இதைப்பற்றி நிறைய பேசினோம்.

நான் அவருடன் பணியாற்றிய வரையில் அவரது பயிற்சிப் பழக்கமுறைகள் முற்றிலும் மாற வேண்டும். அவர் களத்தில் இறங்கும் முறை சரியல்ல, இது மாறவேண்டும். மேலும் சில நுணுக்கமான விஷயங்களுக்காக அவர் நேரம் ஒதுக்குவதில்லை.

அவர் ஆக்ரோஷமான வீரர், அவர் கிரிக்கெட்டை நேசிக்கிறார், ஆனால் விஷயங்கள் தனக்கு சாதகமாக இல்லையெனும்போது கொதிப்படைந்து ஏதாவது தவறு செய்து விடுகிறார். இதுதான் அவரை தளரச் செய்கிறது. அவர் தன்னை நடத்திக் கொள்ளும் விதம் சரியாக இல்லை, உடல் மொழி ஆக்ரோஷமாக இருந்தால், பந்து வீச்சில் நல்ல ஃபார்மில் இருப்பது அவசியம். களத்திற்கு வெளியே அவர் ஒரு குழந்தை போன்றவர், அவர் வெளியே சரியான முறையில் பேசுகிறார், நடந்து கொள்கிறார், ஆனால் என்னைப் பொறுத்த வரை களத்தில் செய்ததற்கு களத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும், வெளியே வந்து மன்னிப்பு கேட்பது காலங்கடந்த ஒன்று.

அவரது பந்து வீச்சில் முக்கியப் பிரச்சனை என்னவெனில் சமீப காலமாக அவர் பந்து வீசும்போது முன்னால் வரும் கை மிக சீக்கிரமாக கீழிறங்கி விடுகிறது. அந்தக் கையை அவர் சரியாக பயன்படுத்துவதில்லை. இதனை அவர் சரி செய்தால் மீண்டும் அவர் ஸ்விங் செய்ய முடியும்”.

இவ்வாறு கூறியுள்ளார் ஆலன் டோனல்ட்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சவுத் வேல்சிடம் வீழ்ந்தது ஈகிள்ஸ்

ஈகிள்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடரின் நேற்றைய போட்டியில், 53 ரன்கள் வித்தியாசத்தில் நியூ சவுத் வேல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

உள்ளூர் “டுவென்டி-20′ தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற 12 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று டில்லியில் நடந்த இரண்டாவது போட்டியில் “பி’ பிரிவில் இடம் பெற்ற நியூ சவுத் வேல்ஸ் புளூஸ், டைமண்ட் ஈகிள்ஸ் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த சவுத் வேல்ஸ் அணி கேப்டன் காடிச், பேட்டிங் தேர்வு செய்தார்.

காடிச் அதிரடி:
சவுத் வேல்ஸ் அணி, துவக்க வீரர் ஹியுஸ் விக்கெட்டை விரைவில் இழந்தது. பின்னர் வார்னர், காடிச் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வார்னர் (23) எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்க வில்லை. காடிச் அரை சதம் கடந்தார். இவர் 53 (6 பவுண்டரி 2 சிக்சர்) ரன்களுக்கு அவுட்டானர்.

ஹென்ரிக்ஸ் விளாசல்:
பின்னர் பெய்லி, சபாலாலா பந்து வீச்சில் மிரட்ட, ரன் சேர்க்க திணறியது சவுத் வேல்ஸ் அணி. 3 சிக்சர்கள் விளாசிய ஹென்ரிக்ஸ் (27) ஆறுதல் அளித்தார். ஸ்டீவன் ஸ்மித் (10), பிரட் லீ (0) ஏமாற்றினர். இறுதியில் ரோஹ்ரர் 22 ரன்கள் குவிக்க, நியூ சவுத் வேல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.

பவுலிங் மிரட்டல்:
சவாலான இலக்கை விரட்டிய ஈகிள்ஸ் அணிக்கு, பந்து வீச்சில் நெருக்கடி கொடுத்தது நியூ சவுத் வேல்ஸ். பிரட் லீ வேகத்தில் ரோசோவ் (1) சொற்ப ரன்களுக்கு வீழ்ந்தார். அட்ரியன் மெக்லேரன் (11) ரன் அவுட்டானார். வான்விக் (0), கேப்டன் திப்பென்னர் (7) கிளார்க்கிடம் சரணடைந்தனர். எல்கெர் (2), பெய்லி (8) சோபிக்க வில்லை. 36 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஈகிள்ஸ்.

ரியான் ஆறுதல்:
பின்னர் களமிறங்கிய ரியான் மெக்லேரன் தனி ஆளாகப் போராடினார். இவருக்கு சால்க்விக் (3), டூ பிரீஸ் (7) ஒத்துழைக்க தவறினர். 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார் ரியான். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ஈகிள்ஸ் அணி 91 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகனாக நியூ சவுத் வேல்ஸ் அணி கேப்டன் காடிச் தேர்வு செய்யப்பட்டார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates