jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ஷில்பா ஷெட்டி แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ஷில்பா ஷெட்டி แสดงบทความทั้งหมด

திருப்பதியில் கணவருடன் ஷில்பா சாமி தரிசனம்


திருப்பதி: புதுமணத் தம்பதியான நடிகை ஷில்பா ஷெட்டி-ராஜ் குந்த்ரா இருவரும் இன்று திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

அவர்களுடன் ஷில்பாவின் சகோதரி ஷமிதா ஷெட்டி மற்றும் உறவினர்கள் வநதிருந்தனர். பொன்சிவப்பு நிறத்தில் சேலையணிந்து பளிச்சென்று காணப்பட்டார் ஷில்பா.

கணவரின் பக்கத்திலேயே நின்றுகொண்டிருந்த ஷில்பா, போஸ் கொடுக்க போட்டோகிராஃபர்கள் பக்கம் திரும்ப விரும்பினாலும், மீடியாக்காரர்களை அருகில் விடாமல் ஷமிதா ஷெட்டி தடுத்துக் கொண்டிருந்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ராஜ் குந்த்ராவை மணந்தார் ஷில்பா!

பிரபல பாலிவுட் [^] நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் தொழிலதிபர் ராஜ் குந்தாராவுக்கும் முறைப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை திருமணம் [^] நடந்தது.

மும்பையில் உள்ள ஆடம்பர பங்களா ஒன்றில் இந்தத் திருமணம் நடந்தது.

சாதாராண மாடலாக மும்பைக்கு வந்த பெங்களூர் [^] பெண் ஷில்பா, இன்று உலகின் மிகப் பிரபல நடிகைகளுள் ஒருவராக மாறிவிட்டார். எல்லாம் 'பிக் பிரதர்' என்ற ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சி செய்த மாயம்.

இந்த வெற்றிக்கு பின்னர் தான் 34 வயதான ஷில்பா ஷெட்டி, 29 வயதான லண்டன் வாழ் இந்திய தொழில் அதிபரான ராஜ் குந்த்ராவை சந்திக்க நேரிட்டது. பார்த்ததும் இருவருக்கும் பற்றிக் கொண்டது காதல்.

ராஜ் குந்த்ராவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை [^] உள்ளது. ஷில்பாவின் காதல் உறுதியானதும் தனது மனைவியை அவர் விவாகரத்து செய்துவிட்டார்.

எனவே ஷில்பா ஷெட்டி-ராஜ்குந்த்ராவுக்கு திருமணம் முடித்து வைக்க இரு தரப்பு பெற்றோரும் சம்மதித்தனர். கடந்த அக்டோபர் மாதம் 24-ந் தேதி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

நேற்று ஞாயிற்றுக் கிழமை மும்பை கண்ட்லாவில் அமைந்துள்ள ஷில்பா ஷெட்டியின் தோழி கிரண் பாவாவின் பங்களாவான 'பாவா வில்லா'வில் நேற்று மாலை ஆடம்பரமாக நடந்தது திருமணம்.

குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் மணமகன் ராஜ் குந்த்ரா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அவருடன் குடும்பத்தினரும், நண்பர்களும், நடிகர் ஜாக்கி பக்னானியும் வந்தனர்.

பாவா வில்லாவில் மாப்பிள்ளையை ஷில்பா ஷெட்டியின் பெற்றோரும், தங்கை ஷமீதா ரெட்டியும் எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் திருமணச் சடங்குகள் நடந்தன.

இந்தத் திருமணத்துக்கு ஷில்பா ஷெட்டி அணிந்திருந்த உடையை பிரபல ஆடை வடிவமைப்பு கலைஞர் தருல் தஹிலியானி டிசைன் செய்திருந்தார்.

மாப்பிள்ளை பஞ்சாபி என்பதால் முதலில் பஞ்சாபி முறைப்படி சடங்கு நடந்தது. அதைத் தொடர்ந்து ஷில்பா ஷெட்டி மங்களூரை சேர்ந்தவர் என்பதால் அங்கு பின்பற்றப்படும் கலாசாரப்படியும் திருமணம் நடந்தது.

மணவிழாவில் ஷில்பா மற்றும் ராஜ் குந்த்ரா என இரு தரப்பு குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் சன்னி தியோல், சுனில் ஷெட்டி, ஜாக்கி பக்னானி, வாசு பக்னானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளை வரவேற்பு!

நாளை செவ்வாய்க்கிழமை ஷில்பா- ராஜ் குந்த்ரா திருமண வரவேற்பு மும்பையில் நடக்கிறது. இதில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்துகின்றனர்.













  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஷில்பாஷெட்டி திருமணம் : மும்பையில் 22ம்தேதி நடக்கிறது


பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி - தொழிலதிபர் ராஜ்குந்த்ரா திருமணம் மும்பையில் வருகிற 22ம்தேதி நடக்கிறது. லண்டனில் நடந்த பிக் பிரதர் நிகழ்ச்சியின் மூலம் உலகப்புகழ் பெற்ற ஷில்பா ஷெட்டிக்கும், லண்டன் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23ம்தேதி நடந்த இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஷில்பாவின் தங்கை ஷமீரா ஷெட்டி பங்கேற்கவில்லை. அதனால் அவர் ஷமீதாக்கு ஏற்ற நாளில்தான் எனது திருமணம் நடக்கும் என்று ஏற்கனவே ஷில்பா ‌தெரிவித்திருந்தார். இந்நிலையில் வருகிற 22ம்தேதி ஷில்பா - ராஜ்குந்த்ரா திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள ஷில்பாவின் பிசினஸ் பார்ட்னர் கிரன்பாவாவின் பங்களாவில் நடைபெறவுள்ள இந்த திருமண நிகழ்ச்சியில் மணமக்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்கிறார்கள். அதனைத்தொடர்ந்து 24ம்தேதி வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இதில் ஷில்பாவில் திரையுலக நண்பர்கள், பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஷில்பா ஷெட்டி மீது லண்டன் ஓட்டல் அதிபர் வழக்கு


பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீது லண்டன் ஐகோர்ட் வழக்கு தொடர்ந்துள்ளது. சமீபத்தில் இங்கிலாந்தில் உள்ள டிபன் பைட்ஸ் என்ற பாஸ்ட் புட் உணவகத்தை, தனது காதலர் ராஜ்குந்த்ராவுடன் இணைந்து விலைக்கு வாங்கி உள்ளார் ஷில்பா. உணவகத்தின் 22 சதவீத பங்கு‌களை ரூ. 45 கோடி கொடுத்து இருவரும் வாங்கி உள்ளனர். ஷில்பா இந்த பங்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக, குறிப்பிட்ட உணவகத்தை நிறுவியவரான ஜமால் ஹிராணி என்பவரை வலுக்கட்டயமாக வெளியேற்றி உள்ளனர் அவரது பிற பங்குதாரர்கள். இதனையறித்த ஜமால் ஹிராணி, தனது கூட்டாளிகள் தன்னை ஏமாற்றி வெளியேற்றி விட்டதாகவும், இந்த உணவகத்தில் ஷில்பா ஷெட்டி முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காகவே தன்னை நீக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்காக, ரூ. 11 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி மீது தொழிற்சாலை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த ஹிராணி, தற்போது, ரூ. 45 கோடி நஷ்டஈடு கேட்டு லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு ‌தொடர்ந்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates