jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி แสดงบทความทั้งหมด

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தேர்தல்கள் திணைக்களத்தில் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

இதனை தேர்தல்கள் திணைக்கள அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை பிரகடன மாநாடு இன்று


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19 ஆவது மாநாடு இன்று கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்கள் குறித்து இக் கொள்கை பிரகடன மாநாட்டில் ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை நடைபெறவுள்ள இம்மாநாட்டின் பொருட்டு கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கை அண்மித்த வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 35 நாடுகளில் பிரதிநிதகள் மற்றும் இராஜதந்திரிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஸ்ரீ.ல.சு.க. மாநாட்டில் ஆறு ஆண்டுக் கொள்கை அறிக்கை வெளியீடு


கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19 ஆவது தேசிய மாநாட்டில் அரசாங்கத்தின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கான கொள்கை அறிக்கை வெளியிடப்படும்.

தேர்தல்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பும் மாநாட்டில் வெளியிடப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

"சூழ்ச்சிகளை முறியடித்து நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதியுடன் கைகோர்ப்போம்" எனும் தொனிப் பொருளிலேயே இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு நடத்தப்படவிருப்பதாக மேல் மாகாண ஆளுநரும், சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவருமான அலவி மௌலான தெரிவித்தார்.

தேசிய மாநாட்டை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சி ஏற்பாட்டாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர். மூன்று மணியளவில் ஆரம்பமாகவிருக்கும் இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார்.

நாடு முழுவதிலுமிருந்து சு.க. கிளைகளின் பிரதிநிதிகள், சு.க. அமைப்பாளர்கள், ஐ.ம.சு.முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்குபற்றுவர்.

மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனா, இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் பத்துக்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆளுநர் அலவி மௌலானா தெரிவித்தார்.

சு.கவின் அழைப்பையேற்று பிரிட்டிஷ் கன்சர்வேட்டிக் கட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்குபற்றுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர் எனத் தெரியவருகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates