jkr
แสดงบทความที่มีป้ายกำกับ Facebook แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ Facebook แสดงบทความทั้งหมด

Facebookஆல்

Facebookஆல் வந்த வினை – உண்மைச் சம்பவம்

Facebook ஆனது Social network களில் முதலிடம் வகிக்கின்றது. இதனுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது என்பதால் இதை அலுவலக நேரங்களில் அலுவலகத்தில் பயன்படுத்த பல கம்பனிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டில், படுத்துக்கொண்டு தனது iphone இல் Facebook பாவித்ததற்காக வேலையை இழந்திருக்கிறார் ஒரு பெண்.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த முனியம்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் அண்மைக் காலமாக ஒற்றைத் தலைவலியால் (migraine) அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தன்னால் கணிணியைப் பயன்படுத்த முடியாது எனக் கூறி, அலுவலகத்தில் தனது கணிணி வேலையிலிருந்து வேறு துறைக்கு மாறியதுடன், தனக்கு இருளான அறை வேண்டும் என்றும் கேட்டு வாங்கியிருக்கிறார்.
ஆனால் இவர் Facebook பாவிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை. இதை அவதானித்து வந்த இவரது நிறுவனம் இவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டது. Facebook பயன்படுத்த ஒற்றைத்தலைவலியுடன் முடியுமானால் வேலை செய்ய ஏன் முடியாது எனவும் இது கேள்வி எழுப்பியுள்ளது.
இது எவ்வாறு சாத்தியமானது தெரியுமா? போலியான பெயரில் கணக்கு ஒன்றைத் தொடங்கிய இவர் வேலைபார்க்கும் நிறுவனம் தனது ஊழியர்களை நண்பர்களாக இணைத்துள்ளது. அதன் மூலமாக Facebookஇல் அவர்களது நடவடிக்கைகளை அவதானித்தும் வந்துள்ளது.
முன்ன பின்ன தெரியாதவங்களை Facebookல Friendஆ வச்சிருக்கிறவங்க பாத்துப் பத்திரமா இருங்கப்பா!
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பேஸ் புக்' பயனர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவுரை !

வாஷிங்டன் : "பேஸ் புக்' போன்ற சோஷியல் நெட்வொர்க் வலைத்தளங்களில் சுயவிவரங்கள் பதிவதில் எச்சரிக்கை தேவை' என்று இளைஞர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவுறுத்தியுள்ளார்.
இணையத்தில் ஆர்குட், பேஸ் புக், ட்விட்டர் போன்ற சோஷியல் நெட் வொர்க் வலைத்தளங்கள் ஏராளமாக செயல்படுகின்றன. பிரிந்த நண்பர்களைத் தேடுதல்; வேலைவாய்ப்புகள்; குழு விவாதங்கள்; சுயவிவரங்கள் வெளியிடுதலுக்கு இந்த வலைத் தளங்கள் உதவுகின்றன.இவற்றில் பேஸ் புக் 2004 ல் தொடங்கியது. 25 கோடி பேர் இதைப் பயன்படுத்துகின்றனர். தினம் மூன்று கோடி பேர் தகவல் பரிமாற்றம் செய்கின்றனர். அமெரிக்க வெள்ளை மாளிகை, பத்திரிகைகளை விட பேஸ் புக், ட்விட்டர் போன்றவற்றைத்தான் மக்கள் தகவலுக்குப் பயன்படுத்துகின்றது.வெளிநாட்டவர் சிலர், இந்த வலைத்தளங்களில் தங்கள் படுக்கையறை, குளியலறைக் காட்சிகளைக் கூட வெளியிடுகின்றனர்.

இதனால் வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் 13 -18 வயதினரான வளரிளம் பருவத்தினர் பல பிரச்னைகளை எதிர் கொள்ள நேரிடுகிறது.இதை மனதில் கொண்டு, வாஷிங்டன் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஒபாமா, வளரிளம் பருவத்தினர் "பேஸ் புக்' போன்ற சோஷியல் நெட்வொர்க் வலைத்தளங்களில் தங்கள் சுயவிவரங்கள் வெளியிடுவதில் கவனம் தேவை என்று கவலையுடன் அறிவுரை கூறியுள்ளார்.
கலந்துரையாடலில் அவர் கூறுகையில்," இந்தப் பருவத்தில் நீங்கள் தவறான முடிவுகள் எடுக்கக் கூடும். பேஸ் புக் போன்ற வலைத்தளங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் உங்களைப் பற்றிய சுய விவரங்களைக் கொடுங்கள். ஏனெனில், நீங்கள் எது செய்தாலும் அது உங்களின் பிற்கால வாழ்வைப் பாதிக்கும். நம் நாட்டையும் பாதிக்கும்,' என்றார்.

ஒபாமாவின் இந்தக் கலந்துரையாடல் நாடு முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்தக் கலந்துரையாடலின் போது பல பள்ளிகளில் மாணவர்கள் தூங்கி வழிந்ததையும், வீட்டுப் பாடம் செய்ததையும் சுட்டிக்காட்டி பத்திரிகைகள் கிண்டல் செய்துள்ளன. இதேபோன்று, 1991ல் அப்போதைய அதிபர் புஷ், போதைப் பொருள் பற்றி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates