jkr

இறந்தாலும் நீ வாழ்கிறாய் மைகேல்

இறந்தாலும் நீ வாழ்கிறாய் மைகேல்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இந்தியாவில் தங்கியிருந்த 500 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்.


கடந்த ஒரு மாதகாலப்பகுதியில் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் இந்தியாவில் தங்கியிருந்த 500 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீள நாடுதிரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கான தென்னிந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி ஹிந்து செய்தித்தாளுக்கு வழங்கிய பேட்டியொன்றின்; போதே மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் தனது பொறுப்புகளை கையேற்ற நிகழ்வின் பின்னரே அவர் மேற்படி பேட்டியினை வழங்கியுள்ளார். இதுதவிர இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு இலங்கை அரசாங்கம் பல நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடந்த மாதம் 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள் நாடு திரும்பியிருந்த போதிலும் அதற்கு முன்னதாக 20 குடும்பங்கள் மாத்திரமே இலங்கை திரும்பியுள்ளதாக வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கை அகதிகள் மீளவும் நாடு திரும்புவதற்கு அச்சுறுத்தல் காணப்படாமையே இந்த எண்ணிக்கை அதிகரிப்பிற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோன்று இந்தியாவில் இருந்து இலங்கை வரும் சுற்றுலா பிரயாணிகளின் எண்ணிக்கை கடந்த ஜூலை மாதமளவில் 45.2 சதவீத அதிகரிப்பை காட்டியதாக அவர் குறிப்பிட்டார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பிரச்சனையை உருவாக்கிய அதே பழைய சிந்தனை மட்டத்தால் அந்தப் பிரச்சனையை தீர்க்கமுடியாது-



யாழ்ப்பாணத்தில் தலைசிறந்த தமிழ் தலைவர்கள் இருந்தார்கள். இவர்கள் உலகமட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட திறமைசாலிகள். இவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றியும் நாம் சிந்திக்கவேண்டும். என்று இலங்கையில் யுத்த நிறுத்தம் வேண்டும் என்று தமிழ் நாடு சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானத்தின்மீது உரையாற்றிய காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர் பீற்றர் அல்போன்ஸ் கூறியிருந்தார். தமிழ் அரசியல் தலைவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், சாம் தம்பிமுத்து போன்ற பலர் புலிகளால் கொல்லப்பட்டது குறித்தே பீற்றர் அல்போன்ஸ் மேற்படி கூறியிருந்தாரா அல்லது இந்த தலைவர்கள் முதல்கொண்டு இவர்கள் வழி வந்து இன்று கட்சிகளுக்கு தலைமை தாங்கும் மாவை சேனாதிராசா, இரா.சம்பந்தன் வரையும், எவராலுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியவில்லையே என்ற ஆதங்கந்தில் கூறினாரா தெரியவில்லை. கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இந்த தலைவர்கள் பாராளுமன்றத்திற்கூடாக பெறமுடியாத உரிமைகளை இன்று வடக்கில் நடைபெறும் உள்ளுராட்சி மன்றங்களுக்கூடாக பெற்றுத் தருவோம் என மக்களிடம் வாக்கு கேட்கிறார்கள் தமிழ் தேசியக் கூட்டமைபபினர்.
இந்த உள்ளுராட்சித் தேர்தல்களில் போட்டியிடும் கட்சிகளில் தேசியக் கட்சிகளான பொதுசன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றைப்பற்றி தமிழ் மக்களுக்கு நன்கு புரியும். இனப்பிரச்சினை ஆயுதப்போராட்டமாக மாறுவதில் இக்கட்சிகள்; வகித்த பாத்திம் என்ன என்பதை தமிழ் மக்கள் நன்கறிவர். ஆனால் இனப்பிரச்சினை தீர்க்கப்படாததில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வகித்த பாத்திரம் என்ன என்பதுபற்றி தமிழ் மக்களுக்கு குறிப்பாக இன்றை சந்ததியினருக்கு தெரிந்திருக்காது. பீற்றர் அல்போன்ஸ் கூறியிருந்தபடி ஜீ.ஜீ. பொன்னம்பலம் , எஸ்.ஜே.வி.செல்வநாயகம், செனற்றர் திருச்செல்வம், வன்னியசிங்கம், கதிரவேற்பிள்ளை, சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் போன்ற பலர் இராணி வழக்கறிஞர்களாகவும் சாதாரண வழக்கறிஞர்களாகவும் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கியிருந்தனர்.
இனப்பிரச்சினைக்கு இதுவரை திர்வு காணப்படாமைக்கு அரசாங்கம்மீதே தமி;ழ் தலைவர்கள் குற்றம் சுமத்தி வந்தனர். ஆனால் இவர்கள் கூற்றின் உண்மையை அறியவேண்டுமானால் தமிழ் தலைவர்களது கடந்தகால செயற்பாடுகள் குறித்தும் திரும்பி பார்க்கவேண்டியுள்ளது. அதே நேரம் கடந்த காலங்களில் தமிழ் தலைவர்கள்மீது ஏனையோரால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களையும் இன்றுவரை நாம் பெற்ற அரசியல் அனுபவங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதும் அவசியம். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண தமிழ் தலைவர்களுக்கு கிடைத்த பல சந்தர்ப்பங்களை கோட்டைவிட அவர்களின் வர்க்க நலன்களே காரணமாக இருந்தது என்றும் சிலர் குற்றம் சாட்டி வந்தனர்.
வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் யாழ் குடாநாட்டையே மையப்படுத்தி இருந்தன என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசுகள் மேற்கொண்ட இனவாத நடவடிக்கைகளில் முக்கியமானவை இரண்டு. ஒன்று சிங்களம் அரசகரும மொழியாக்கல். இரண்டாவது கல்வியில் தரப்படுத்தல்முறை அறிமுகப்படுத்தியது. இரண்டு சட்டங்களாலும் அதிகம் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்;கள் யாழ்குடாநாட்டு மக்களே. பொதுவாக யாழ் குடாநாட்டு மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து உயர்கல்விகளை கற்று இலங்கையில் அரசநிர்வாகத் துறைகளில் ஆதிக்கம் செலுத்திவந்தனர். அரசநிர்வாகத்தில் அதிஉயர் பதவி வகித்தவர்கள் பெரும்பாலும் தமிழர்களே. குறிப்பாக யாழ் குடாநாட்டை சேர்ந்தவர்களே. சிங்களம் அரசகரும மொழியாக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களும் இவர்களே.
கல்வியில் தரப்படுத்;தல் அறிமுகப்படுத்தப்பட்டதும் யாழ் குடாநாட்டு மாணவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டனர். தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் முதல் நடவடிக்கை தமிழ் பிரதேசங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றியது. இந்த நடவடிக்கை தமிழ் மக்களை உடனடியாக பாதிக்காததால் மக்கள் அதில் பெரிதாக அக்கறைகாட்டவில்லை. சிங்கள அரசுகளின் தமிழ் மக்களுக்கெதிரான இனவாத நடவடிக்கைகளால் தமிழரசுக்கட்சிக்கும், பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் தமிழ் மக்கள் தங்கள் அமோக ஆதரவை வழங்கிவந்தனர். அரசின் நடவடிக்கைகள் குடாநாட்டை அதிகம் பாதித்ததாலும் அரசியல் தலைமை குடாநாட்டை மையப்படுத்தி இருந்ததால் அரசுக்கெதிரான சட்டமறுப்பு போராட்டங்கள் வடபகுதியில் ஆரம்பித்து கிழக்கிலும் தீவிரமடைந்தது.
இந்தப் போராட்டங்களின் விளைவாக மாறிமாறி பதவிக்கு வந்த அரசுகள் தமிழரசுக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி பல ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டன. ஆனால் அந்த ஒப்பந்தங்கள் எவையும் நடைமுறைக்கு வரவில்லை. ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வராததற்கு முழுப்பொறும் அரசாங்கமே என்ற தமிழ் தலைரவர்களின் குற்றச்சாட்டுக்கு எதிராக பலர் விமர்சனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தங்கள் தோல்வியடைய அரசுகள் மாத்திரமல்ல தமிழ் தலைவர்களின் விவேகமற்ற செயல்பாடுகளும் ஒரு காரணம் என இவர்களது தவறுகளை சுட்டிக்காட்டி வந்த இடதுசாரிகள்மீது தமிழ் மக்கள் சேறுபூசினர். ஆனாலும் தமிழ் தலைவர்கள்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் ஓரளவு நியாயம் இருப்பதாக நாம் கடந்தகால படிப்பினைகளில் இருந்து உணரமுடிகிறது. தமிழ் தலைவர்கள் இனப்பிரச்சினை தொடர்பாக ஸ்ரீலங்கா சதந்திரக் கட்சிக்; கூட்டரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது தீவிரமான போராட்டங்களை நடத்துவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியுடன் தாராள மனப்பான்மையுடன் விட்டுக்கொடுத்து போவதாகவும் கடந்த காலங்களில் விமர்சிக்கப்பட்டனர். கடந்தகால வரலாற்றை ஆராய்ந்தால் அவர்களுடைய குற்றச்சாட்டில் ஓரளவு உண்மையும் இருப்பதை காணலாம். இனப்பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற போராட்டங்கள் எல்லாம் குறிப்பாக காலிமுகத்திடலில் நடைபெற்ற சத்தியாக்கிரகம், வடக்கு கிழக்கில் அரச நிர்வாகங்களுக்கெதிராக நடைபெற்ற சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு போராட்டம், ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம் எல்லாமே சுதந்திரக்கட்சி அரசுக்கெதிராகவே நடைபெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
1956ல் பதவிக்கு வந்த பண்டாரநாயக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்காலத்தில் அரசுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று பண்டா – செல்வா ஒப்பந்தம் உருவாகிற்று. .இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக ஜே.ஆர் இனவாதப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதே நேரம் பண்டாரநாயக்கா அரசில் இருந்த வலதுசாரி சக்திகளும் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக சூழ்சிகள் செய்து பண்டாரநாயக்காவுக்கு நிர்பந்தம் ஏற்படுத்தும் விதத்தில் ஒப்பந்தத்திற்கு எதிரான பிரச்சாரம் வலுத்திருக்கும் வேளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு ~~சிங்கள ஸ்ரீ இலக்க பஸ்களை அனுப்பினர். சிங்கள ஸ்ரீ க்கு எதிரான போராட்டத்தை சி.சுந்தரலிங்கம் ஆராம்பித்தார். சுந்தரலிங்கத்துக்கு தமிழ் மக்களிடையே நல்ல பெயர்வந்துவிடும் என்பதால் தமிழரசுக்கட்சியும் ஸ்ரீ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது.
அரசுக்கு எதிரான போராட்டத்ல்ல் தமிழரசுக்கட்சி ஈடுபட்டதும் பண்டாரநாயக்காவுக்கு நெருக்கடிகள் தோன்றி ஒப்பந்தத்தை கிழித்தெறியும் நிலை ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் ஸ்ரீ பிரச்சினையே இருந்திருக்காது. (இப்போது எந்தவித போராட்டமும் இல்லாமலே ஸ்ரீ இலக்கத்தகட்டில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது) 1960 ல் சுதந்திரக் கட்சி அரசுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையே அரசகரும மொழி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பாடசாலைகளை தேசியமயமாக்கும் மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதும் தமிழ் அரசுக் கட்சி உடனே பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு அரசமொழிக் கொள்கையையும் பாடசாலைகள் தேசியமயமாக்குவதையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது.
பாடசாலை தேசியமயமாக்கப்பட்டதால் தமிழ் மக்களின் கல்வித்தரம் குறைந்துவிட்டது என கூறமுடியாது. 1964ல் சிறிமாவோ தலைமையிலான கூட்டரசாங்கம் கவிழும் நிலையில் இருந்தபோது பண்டா -செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி தமிழரசுக் கட்சியின் ஆதரவைக் கோரியபோது அதற்கு ஆதரவளித்திருந்தால் இவர்கள் தயவில் இருக்கும் அரசிடம் பண்டா செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றியிருக்கலாம். இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசை வீழ்த்தினர். கூட்டரசாங்கம் கவிழ்ந்து 65ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியமைத்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்துகொண்ட தமிழரசுக் கட்சி மாவட்ட சபையை அடிப்படையாக கொண்ட தீர்வுக்கு டட்லியுடன் ஒப்பந்தம். செய்துகொண்டது. ஒரு காலகட்டத்தில் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தமுடியாது என்று டட்லி அறிவித்த பின்னரும் தமிழரசுக் கட்சி கடைசிவரை அரசாங்கத்தை ஆதரித்தது. தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸ் ஆகியன இணைந்து தமிழர் விடுதலைக்கூட்டணி உருவான பின்னர் நடைபெற்ற கட்சியின் முதலாவது மகாநாட்டில் தனிநாட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1977ல் தனிநாட்டு கோரிக்கைக்கு மக்கள் ஆணைகேட்டு பாராளுமன்றம் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாவட்ட அபிவிருத்திச்சபை திட்டத்தை ஏற்றுக்கொண்டு மாவட்ட அபிவிருத்திச்சபை தேர்தலிலும் பங்குபற்றினர். 1983ம் ஆண்டு இனக்கலவரத்துடன் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தது. புலிகள் ஆயுதபலத்தால் போராட்டத்தில் ஈடுபட்ட ஏனைய இயக்கங்களை அழித்தனர். இன்று தமிழ்; தேசியக் கூட்டமைப்;பில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் துரோகிகளாக குற்றம் சாட்டப்பட்டு புலிகளால் கொல்லப்பட்டதும் பின்னர் கட்சியில் உள்ளவர்கள் சிலர் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்று பாராளுமன்ற பதவியை தக்கவைத்துக்கொண்டதும் இன்றைய தலைமுறையினர் அறிந்ததே. ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கிடைத்த பல சந்தர்ப்பங்களையும் தமிழ்; தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் தவறவிட்டனர். புலிகளை ஏகபிரதிநிதிகளாக இவர்கள் ஏற்று செயற்படத் தொடங்கிய பின்னர் அரசுடனான பேச்சுவார்த்தையை முற்றாக புறக்கணித்துவந்தனர். இப்போது புலிகள் இல்லாதநிலையில் மீண்டும் ஏகபிரதிநிதிகளாக தங்களை அனுப்புங்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வை வாங்கித் தருகிறோம் என்கின்றனர்.
60 ஆண்டுகளுக்கு மேலாக ஏமாற்றியது போதாதா. தமிழ் மக்களின் நெஞ்சிலேயே குத்திய சிங்கள அரசுகளைவிட தமிழ் மக்களின் முதுகிலே குத்துகிற தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆபத்தானது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

யாழ் தமிழ் இளைஞர் கொழும்பில் கடத்தல்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் சிலர் கொழும்பில் வைத்துக் கடத்தியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
அச்சுவேலியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை ரவீந்திரன் (32) என்பவர் கொழும்பிலுள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்ததாகவும், அந்த லொட்ஜுக்கு முன்னால் அமைந்துள்ள கடையொன்றுக்குச் சென்ற அவரை இனந்தெரியாத சிலர் கடந்த 23 ஆம் திகதி மாலை 5 மணியளவில் கடத்திச் சென்றுள்ளதாகவும் அவரது தாயார் தம்பிப்பிள்ளை ஆச்சியம்மா யாழ் மனித உரிமைகள் ஆணையகத்தின் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.2006 இல் அகதியாகத் தஞ்சம் கோரி மலேசியா சென்றிருந்த ரவீந்திரன் அண்மையில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதால் கொழும்பு லொட்ஜில் தங்கியிருந்ததாக தனது முறைப்பாட்டில் ஆச்சியம்மா மேலும் கூறியுள்ளார்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஷியாமல் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை - ஐ.நா


ஷியாமல் ராஜபக்ஷ கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அவரது உடல்நிலை காரணமாகவே அவர் இறந்துள்ளார் எனவும் ஐ.நா கூறியுள்ளது.இந்த மாத ஆரம்பத்தில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மருமகன் ஷியாமல் ராஜபக்ஷ தன்சானியாவில் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.
இது கொலையா அல்லது சாதாரண மரணமா என தன்சானியா மற்றும் இலங்கைப் போலீசார் துப்பறிந்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணைகளின்படி இவர் கொலை செய்யப்பட்டுளதாக கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் கூறியிருந்தது.
இப்போது அதற்கு நேர் முரணான அறிக்கையைத் தந்துள்ளது ஐ.நா.ஷியாமல் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், அவருக்கு முன்னமே இருந்த உடல் நலக்குறைவு காரணமாகவே அவர் இறந்துள்ளார் எனவும் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகையில் கூறப்பட்டுள்ளதோடு தமது புலனாய்வு இதனுடன் முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளது.இதேவேளை ஷியாமலின் உடலில் நச்சுப்பதார்த்தங்கள் ஏதும் இருந்ததா என்ற மருத்துவ சோதனை அறிக்கை இன்னமும் வரவில்லை. அந்த அறிக்கையில் தமக்கு ஒரு நகல் தருமாறும் ஐ.நா கேட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இனவாத அரசியல் நமது நாட்டுக்கு உகந்ததல்ல-அக்கரைப்பற்றில் ஜனாதிபதி மஹிந்த


தமிழ், சிங்களம், முஸ்லிம் என இனவாத அரசியல் நமது நாட்டிற்கு உகந்ததல்ல. குறுகிய தீர்மானங்களை தவிர்த்து நாட்டை முன்னேற் றக்கூடிய சிறந்த தீர்மானங்களை சிந்தித்து மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநா டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த் தும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டமும் நேற்று அக்கரைப்பற்று பொது விளையாட்ட ரங்கில் விமரிசையாக நடைபெற்றன.
நேற்றுப் பிற்பகல் 2.00 மணியளவில் தேசிய மற்றும் கட்சிக் கொடியேற்றலுடன் ஆரம்ப மான இந்நிகழ்வுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட துடன் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா, அமைச்சர்கள் மேர்வின் சில்வா, டக்ளஸ் தேவா னந்தா, பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில், நான்கு மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதத் தலைவர்கள் மத வழி பாடுகளை நிகழ்த்தினர். விழாவை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் வகையில் கட்சிப் பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்டு கட்சிக் கான நடப்பு வருட உறுப்பினர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டன. அத்துடன் அரசியல் கவுன் ஸில் உறுப்பினர்களின் பெயர்களும் வாசிக்கப்ப ட்டதுடன் இவ்வுறுப்பினர்களை அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா மேடையில் வரவேற்றார்.
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலு மிருந்து சகல இன மதங்களையும் சார்ந்த பல்லா யிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இம்மாநாட் டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதான உரைநிகழ்த்தியதுடன் தேசிய காங்கிரசின் தலை வர் ஏ. எல். எம். அதாவுல்லா சிறப்புரை நிகழ் த்தினர். மாநாட்டின் இறுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய காங்கிரஸ் சார்பில் அமைச்சர் ஏ. எல். எம். அதா வுல்லா விருது வழங்கி கெளரவித்தார்.
மாநாட்டில் கட்சியின் இதழான ‘பரிவ ட்டம்’ உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக் கப்பட்டது.
இந்த மாநாட்டில் ஜனாதிபதி தமதுரை யில் மேலும் தெரிவித்ததாவது:
2005 ஆம் ஆண்டு நான் அக்கரைப்பற் றிற்கு வருகை தந்த போது இங்கு வீசிய காற்றைப் பாரமானதாக உணர்ந்தேன். இன்று அது இலகுவாகி சுதந்திரக் காற்று வீசு வதைக் காண முடிகிறது.
இந்த நாட்டை உடன்படிக்கை மூலம் துண்டாடிய யுகம் மாறி இந்த நாட்டை எம்மால் மீள ஐக்கியப்படுத்த முடிந்துள்ளது.
தேசிய காங்கிரஸின் மாநாட்டிற்கு இன்று வருகைதந்து இங்குள்ள மக்களை சந்தி ப்பதில் பெருமையும் மகிழ்ச்சியுமடைகின் றேன்.
இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் எமது சகோதரர்கள் போல் வாழ்கின்றனர். நாம் எல்லோரும் ஒரு தாயின் மக்கள் எம்மத்தியில் எந்தவித பேதமும் இருக்க முடியாது.
முப்பது வருடகால பயங்கரவாதம் முடி வுக்குக் கொண்டுவரப்பட்டு இன்று நாட் டில் சந்தேகமின்றி அச்சமின்றி சகலரும் வாழும் நிலை உருவாகியுள்ளது. காத்தான் குடி பள்ளிவாசலில் இடம்பெற்றது போன்ற துர்ப்பாக்கிய சம்பவங்கள் இனி எங்கும் நடக்காது.
கிழக்கில் வயலுக்குத் தொழிலுக்குப் போகி ன்றவர்களும், பாடசாலைக்குப் போகின்ற மாணவர்களும் கூட அச்சத்துடனும் பயத் துடனும் வாழ்ந்த காலம் இருந்தது. இன்று அந்நிலை இல்லை.
தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற இன வாத அரசியல் இந்த நாட்டுக்கு உகந்த தல்ல. இனி இந்த நாட்டில் சிறுபான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த தேசத்தின் மீது அன்பு செலுத்தும் மக்கள் இந்த நாட்டின் பிள்ளைகளே.
நான் முதல் இரண்டாவது, மூன்றாவது என முழுமையாக நேசிப்பது இந்த நாட் டைத்தான். நாட்டு மக்களும் அப்படியே நாட்டை நேசிக்க வேண்டும். எந்தத் தீர் மானம் எடுத்தாலும் அது குறுகிய தீர் மானமாக இருக்கக் கூடாது. அத்தகைய எண்ணம் வேண்டாம்.
அமைச்சர் அதாவுல்லா ஒரு சிறந்த தலைவர். உங்கள் தலைவர் அவர் முழு நாட்டிற்கும் சேவை செய்யும் திறன் படைத்த செயல்வீரர்.
கிழக்கின் உதயம் மூலம் இப்பகுதி அபிவிருத்தி காணப்படுகிறது. உங்கள் எதிர் காலம் ஒளிமயமாவது நிச்சயம். இந்தவேளை யில் நாம் மறைந்த தலைவர் எம். எச். எம். அஷ்ரப்பை நினைவு கூருவது சிறந்தது.
முஸ்லிம் மக்கள் என்னிடம் கேட்டதை யெல்லாம் நான் நிறைவேற்றியுள்ளேன். இன்று எமது அரசில் உள்ள சகல முஸ்லி ம்களும் அமைச்சர்கள் என்பதை மறக்கக் கூடாது.
கிழக்கில் தனியான மாகாண சபையொ ன்று இப்போது இயங்குகிறது. ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இது உங்களுக்கான பெரும் வரப்பிரசாதம் ஆகும்.
நான் முஸ்லிம்களின் மத வழிபாட்டுக் குத் தடைபோடுவதாக பலர் பொய்ப் பிர சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனை நீங்கள் நம்பவேண்டாம். இலங்கை வானொலியில் ஒரு நாளைக்கு ஐந்து தட வைகள் ‘பாங்கு’ சொல்வதற்கு வழிவகை செய்தவன் நானே என்பதை மறந்துவிட வேண்டாம். நான் உங்கள் உற்றதோழன் நீங்கள் என்னை நம்பலாம்.
இந்த மாகாணம் 30 வருடங்களாக பாதிக்கப்பட்டு இன்று முழு மாகாணத்தி லும் அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. உங்கள் வெற்றி உங்கள் பிள்ளைகளின் வெற்றியும் நாட்டின் வெற்றியுமாகும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த அழகிய தேசத்தை ஒரேகொடியின் கீழ் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அவுஸ்திரேலியாவிற்குள் படகில் சட்டவிரோதமாக நுழைந்த 52 பேர் கைது

அவுஸ்திரேலியாவிற்குள் படகின் மூலம் சட்டவிரோதமான முறையில் செல்ல முனைந்த இலங்கையர்கள் என சந்தேகிக்கப்படும் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்பகுதியில் இந்த படகு பயணித்துக் கொண்டிருந்த வேளையில், அவுஸ்திரேலிய கடற்படையினரால் அஸ்மோர் தீவுகளுக்கு அருகில் தடுக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பிரடன் ஓ கொனர் தெரிவித்துள்ளார்.
இந்த படகில் 52 அரசியல் தஞ்சம் கோரியவர்களும், 3 படகு செலுத்துனர்களும் இருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கைதானவர்கள், அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய தடுப்பு முகாமான கிரிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களின் சுகாதார, பாதுகாப்பு மற்றும் அடையாள உறுதிப்படுத்தல் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்த ஆண்டில் மாத்திரம் இவ்வாறு அவுஸ்திரேலியாவிற்குள் சட்ட விரோதமான முறையில் ஊடுருவிய 18 படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்த படகுகளில், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் அரசியல் தஞ்சம் கோருபவர்கள் வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates