jkr
แสดงบทความที่มีป้ายกำกับ அதிசயம் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ அதிசயம் แสดงบทความทั้งหมด

வவுனியா கூமாங்குளத்தில் வீடொன்றில் மாதா உருவப்படத்தில் திடீரென இரண்டு கைகள் தோன்றியுள்ளன


வவுனியா கூமாங்குளத்தில் வீடொன்றில் மாதா உருவப்படத்தில் திடீரென இரண்டு கைகள் தோன்றியுள்ளன. மாதாவின் உருவத்தை ஏந்தியிருப்பது போன்ற வகையில் இக்கைகள் இரண்டும் காணப்படுகின்றன. இரு தினங்களுக்கு முன்னர் இந்த அதிசயம் ஏற்பட்டுள்ளதாக அந்த வீட்டுக்காரராகிய அகிலன் கவிதா என்ற குடும்பப்பெண் தெரிவித்துள்ளார். கூமாங்குளத்தில் உள்ள சாயிசிறுவர் இல்லத்திற்கருகில் இந்தப்பெண் வசித்து வருகின்றார். இரண்டு குழந்தைகளின் தாயாராகிய அவர் நேர்த்திக்கடன் ஒன்றை நிறைவேற்றுவதற்காகக் கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் மடுக்கோவிலுக்குச் சென்றபோது, மாதாவின் இரண்டு உருவப்படங்களை வாங்கி வந்ததாகவும், அவற்றில் ஒன்றிலேயே இவ்வாறு இரண்டுகைகள் தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாதா படத்தில் தோன்றியுள்ள இந்த அதிசயக் கைகளை தரிசிப்பதற்காக தினசரி பெருமளவிலான மக்கள் அவரது வீட்டிற்குச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. அதேவேளை இது போன்று மடுஅன்னையின் திருவுருவப் படத்திலிருந்து அதிசயக் கரங்கள் இம்மாதம் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியிலுள்ள ஒரு வீட்டிலும், கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ஒரு வீட்டிலும், திருமலை என்.சி.வீதியிலுள்ள ஒரு வீட்டிலும் தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வெள்ளவத்தையிலும் அன்னை மரியின் அதிசயம்


கொழும்பு வெள்ளவத்தையிலும் அன்னை மரியின் கைகள் தெரியும் அதிசயம் நிகழ்ந்துள்ளது.

அன்னை மரியின் உருவப் படத்திலிருந்து கைகள் இரண்டு வெளிப்பட்டுள்ளதை இந்தப் படத்தில் காணக்கூடியதாக இருக்கும்.

வெள்ளவத்தை, பெர்னாண்டோ வீதியில் உள்ள கணேந்திரன் என்பவரின் வீட்டில் நிகழ்ந்த அதிசயத்தினை நாம் கமராவுக்குள் அடக்கிக் கொண்டோம்.

கிறிஸ்மஸ் தினமான கடந்த 25ஆம் திகதி மாலை 3 மணியளவில் குடும்பத்தினர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த சமயம் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கையில் இந்த அதிசயம் நிகழ்ந்ததாக வீட்டார் கூறுகின்றனர்.

2006 ஆம் ஆண்டளவில் புனித மடு தேவாலயத்தில் இந்தப் பிரார்த்தனை புத்தகத்தை வாங்கியுள்ளனர். தொடர்ச்சியாக செய்துவந்த புனிதமான பிரார்த்தனையே இதற்குக் காரணம் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.

ஆணைக்கோட்டை வராளி கோவிலடியிலுள்ள வீடு ஒன்றில் இதேபோன்ற சம்பவம் அண்மையில் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மெய் சிலிர்க்க வைத்த ஊர்க்காவல் படைவீரர்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அன்னை மரியைத் தாங்கும் அதிசய கரங்கள்! : ஆனைக்கோட்டையில் சம்பவம்


ஆனைக்கோட்டை வராளி கோவிலடி அருகிலுள்ள வீடு ஒன்றில், அன்னை மரியின் படத்திலிருந்து கைகள் தெரியும் அதிசயம் நடந்துள்ளது.

ஆனைக்கோட்டை வராளி கோவிலடி வீடு ஒன்றில் அன்னை மரியின் படம் வைத்து வழிபட்டு வந்தனர். நேற்றிரவு இந்தப் படத்தில் இரண்டு கரங்கள் மாதாவைத் தாங்கியபடி நிற்கும் அதிசயம் நிகழ்ந்துள்ளது.

இந்த அற்புதத்தைக் காண்பதற்காக பலர் அவ்வீட்டுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதற்கு முன்னரும் பருத்தித்துறையில் இரு இடங்களில் மாதாவின் படத்தில் அதிசயமாகக் கரங்கள் தெரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

திருவண்ணமலையில் அந்தரத்தில் பறந்த சித்தர் வீடியோ






தமிழ்நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர ஆலயம் மிகப் பிரசித்தி பெற்றது. அங்கு அந்தரத்தில் வானத்தை நோக்கி பறந்த சித்தர் ஒருவரால் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

பஞ்சபூத சிவத்தலங்களில் அக்கினி ஸ்தலங்கமாக போற்றப்படும் இவ் ஆலயத்தில் ஏறாளமான சித்தர்களும் ஜோகிகளும் வாழ்ந்து வருவதாக கூறப்படும் இங்கு திருவண்ணமலை அடிவாரத்தை சுற்றி பக்தர்கள் கிரி வலம் வருவது வழக்கம்.

மின் ஊழியர் ஒருவர் கிரி வல பாதையில் சென்று கொண்டிருந்த ஒருவர் சாலை ஓரமாக இருந்த மரத்தடியில் சடா முடியுடன் இருந்த சித்தர் ஒருவரை கண்டார். அவர் தரையில் அந்தரத்தில் இருப்பதைக் கண்ட அவ்வூழியர் தன்னுடைய கைதொலைபேசியில் அதனை வீடியோ படமாக்கிக்கொண்டுடார். அந்த நேரத்தில் அந்த சித்தர் வானத்தை நோக்கி பறந்து சென்றதை அவர் வீடியோ படமாக்கியுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பல்கேரியாவில் 11 வயதில் தாயான சிறுமி

தனது முதல் திருமண நாளன்று அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் பல்கேரியாவைச் சேர்ந்த 11 வயது சிறுமி கோர்டெசா. பல்கேரியாவின் ஸ்லிவன் நகரில் உள்ள ரோமா ஜிப்ஜி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார் கோர்டஸா. கடந்த ஆண்டு இவர் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிலர் இவரைக் கடத்திச் செல்ல முயன்றனர். அப்போது அங்கு வந்த ஜெலியாஸ்கோ டிமிட்ரோவ் (இப்போது வயது 19) கோர்டஸாவைக் காப்பாற்றி மீட்டார். இதையடுத்து இருவருக்கும் காதல் மலர்ந்தது. கல்யாணமும் செய்து கொண்டனர். இப்போது அழகான குழந்தைக்குத் தாயாகியுள்ளார் கோர்டஸா. அக்குழந்தைக்கு வயலட்டா என்று பெயரிட்டுள்ளனர் டிமிட்ரோவ் - கோர்டஸா தம்பதி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கோர்டஸா தனது கல்யாண தினத்தன்று பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவருக்கு 2.49 கிலோ எடையுடன் கூடிய குழந்தை பிறந்தது. அன்று இரவு மருத்துவமனையில் கழித்த கோர்டஸா காலையில் தனது திருமண உடை அணிந்து கணவருடன் இணைந்து தனது முதல் திருமண நாளை கொண்டாடினார். ஸ்லிவன் நகரில் சிறு வயதில் குழந்தை பெற்றுக் கொள்வது பெரிய விஷயமில்லையாம். 13 வயதில் தாயான பல சிறுமிகள் அங்கு உள்ளனர். ஆனால் 11 வயதில் குழந்தை பெற்ற முதல் சிறுமி கோர்டஸாதானாம். தாயானது குறித்து கோர்டஸா கூறுகையில், நான் அம்மாவானதும், எனக்குக் குழந்தை பிறந்திருப்பதும் வினோதமாக உள்ளது. பொம்மைகளுடன் விளையாடும் எனக்கு இப்போது இந்தப் புதிய பொம்மை கிடைத்துள்ளது. இவள் அழகாக இருக்கிறாள், இவளை நான் நேசிக்கிறேன். வயலட்டா சிறு குழந்தை, அவளை நன்றாக வளர்க்க வேண்டும். நான் அம்மாவாகி விட்டதால் இனிமேல் பள்ளிக்குப் போக மாட்டேன் என்றார். அம்மா ஆன சந்தோஷத்தில் கோர்டஸா இருந்தாலும் அவரது கணவரான டிமிட்ரோவுக்கு ஒரு பிரச்சினை காத்திருக்கிறது. மைனர் பெண்ணுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதால் டிமிட்ரோவ் மீது வழக்கு தொடரப்படும். அந்த நாட்டுச் சட்டப்படி மைனர் வயதில் செக்ஸ் வைத்துக் கொண்டால் 6 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்குமாம். முதன் முதலில் நாங்கள் டேட்டிங் சென்றபோது கோர்டஸாவுக்கு 15 வயதாகும் என நினைத்தேன். அவளும் தனது வயது என்ன என்பதைச் சொல்லவில்லை என்கிறார் டிமிட்ரோவ். கோர்டஸா கர்ப்பம் தரித்தபோது அதுகுறித்து அவருக்குத் தெரியவில்லை. அவரது பாட்டிதான் கோர்டஸாவின் வித்தியாசமான தோற்றத்தைப் பார்த்துக் கண்டுபிடித்துக் கூறினாராம். நிறைய பர்கர் சாப்பிட்டதால் எனது உடல் பருமன் கூடியதாகத்தான் நான் நினைத்திருந்தேன். ஆனால் எனது பாட்டி தான் நீ கர்ப்பமாகியுள்ளாய் என்று தெரிவித்தார் என்கிறார் சிரித்தபடி. பர்கர் சாப்பிட்டதால் பருமனா.. கலி முத்திடுத்து..!!
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

4 அங்குல உயரமான உலகின் மிகச் சிறிய டைனோஸர் வகை


அங்குல உயரமான மிகச் சிறிய டைனோஸர் வகையொன்று ஆராய்ச்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோஸர் வகையிலேயே மிகச் சிறியதாக கருதப்படுகிறது. "புருட்டென்ஸ் ஹாகாரோரம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த டைனோசரின் எச்சமானது 1979 ஆம் ஆண்டு அமெரிக்க கொலராடோவில் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு கிலோகிராமுக்கும் குறைவான நிறையுடைய இந்த எச்சம், இதுவரை காலமும் அடையாளம் காணப்படாத நிலையிலேயே இருந்து வந்துள்ளது.

இந்த சிறிய ரக டைனோஸர்கள் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இது "ஒர்னிதிஷியன்ஸ்' என அழைக்கப்படும் டைனோஸர் வகையினைச் சேர்ந்தது என தெரிவிக்கப்படுகிறது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இரட்டை குழந்தை இல்லை; ஆனா, இரட்டை மாதிரி : அமெரிக்க பெண்ணுக்கு விசித்திரம்


ஆர்கான்சாஸ் : அமெரிக்காவில் ஒரு பெண் இரண்டு குழந்தைகளை வயிற்றில் சுமக்கிறார்; ஆனால், அவை இரட்டை குழந்தைகள் அல்ல. "அந்த இரண்டு குழந்தைகளும், இரண்டு வார கால இடைவெளியில் உருவானவை' என, டாக்டர்கள் கூறியுள்ளது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா, ஆர்கான்சாசை சேர்ந்தவர் டோட். இவரது மனைவியின் பெயர் ஜூலியா. இவர், கர்ப்பமாக இருந்தார். குழந்தையின் வளர்ச்சி குறித்து அறிந்து கொள்வதற்காக, "ஸ்கேன்' செய்தார். "ஸ்கேனை' பரிசோதித்த டாக்டர்கள், ஜூலியாவின் வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருப்பதாக தெரிவித்தனர். மேலும், அவை இரண்டும் இரட்டை குழந்தைகள் அல்ல என்பது அவர்களுக்கு தெரியவந்தது. டாக்டர்களுக்கு ஆச்சர்யம் ஏற்பட்டது. இரண்டு கருக்களும், ஒரே நேரத்தில் உருவானவை அல்ல என்பதும், இரண்டு வார இடைவெளியில் உருவானவை என்றும் தெரிய வந்தது.


டாக்டர் கரேன் பாய்ல் கூறியதாவது:


இது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு. உலகிலேயே இதுவரை பத்து பேருக்கு தான் இதுபோன்று இருந்துள்ளது. ஜூலியாவுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, ஒரு கரு உருவாகியுள்ளதும், அதன் அசைவுகளும் தெரிய வந்தன. சிறிது நேரத்தில், மற்றொரு இதய துடிப்பும் கேட்டது. எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. முதல் கரு உருவாகி, இரண்டு வாரங்கள் கழித்து இரண்டாவது கரு உருவாகியுள்ளது. இரண்டு குழந்தைகளுமே ஒரே நாளில் பிறப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.இவ்வாறு கரேன் பாய்ல் கூறினார்.


தனது வயிற்றில் இரண்டு குழந்தைகள் வளர்வதை நினைத்து ஜூலியா மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போயுள்ளார்.தன் வயிற்றில் முதலில் உருவானது பெண் குழந்தை என்றும், இரண்டு வாரங்கள் கழித்து உருவானது ஆண் குழந்தை என்றும் ஸ்கேனில் தெரியவந்துள்ளதால், அவற்றுக்கு முறையே ஜில்லியன், ஹட்சன் என, ஜூலியா தற்போதே பெயரிட்டுள்ளார்.எலி, குதிரை, கங்காரு போன்ற மிருகங்கள் தான், இது போல வினோதமாக கருத்தரிக்கும். மனிதர்களில் இந்த வினோத முறை, மிக அரிது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மட்டக்களப்பு வந்தாறுமுலையில் பூட்டப்பட்ட ஆலயத்தினுள் நிகழும் அதிசியம்!


கடந்த 26ம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு வந்தாறுமுலை கண்ணகி அம்மன் ஆலயத்தினுள் அதிசியமிக்க ஒலிஇ சலங்கை ஒலி என பல அதிசியங்கள் நிகழ்கின்றன. இந்த கண்ணகி அம்மன் ஆலயம் வருடத்திற்கு ஒருதடவையே திறக்கப்பட்டு விசேட பூசை செய்யப்படுகிறது. இவ் வருட பூசை தொடர்ந்து இவ் ஆலயக் கதவு பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது இருந்த போதிலும் கடந்த 26ம் திகதியில் இருந்து பூட்டப்பட்ட ஆலயத்தினுள் அதி சத்தம் மிக்க ஒலி கேட்டுக்கொண்ட வண்ணமே உள்ளது. கல்லை உடைப்பது போன்ற சத்தமும் சலங்கை ஒலி என தினந்தோறும் ஒலித்த வண்ணம் உள்ளது குறிப்பாக அருகிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் பூசை நடைபெறும் போதெல்லம் இவ் ஒலி கேட்ப்பதாக தெரியவருகிறது. பூட்டிய ஆலயத்தினுள் நிகழும் அதிசிய ஒலியை கேட்ப்பதற்காக பெறுந்திரளான மக்கள் ஆலயத்தை நோக்கி வந்தவண்ணமுள்ளனர். இவ் அதிசியங்களை தொடர்ந்து இவ் ஆலயத்தினுள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசேட பூசை ஆலய பரிபாலன சபையினரும் ஊர்மக்களும் ஏற்பாடுசெய்துள்ளனர். இவ்வாறு தினந்தோறும் அதிசியங்கள் நிகழ்வது எதற்க்காக ஏற்படுகிறது என்பதும் சுனாமி போன்ற அனர்த்தம் ஏற்ப்படும் வாய்ப்பு ஏற்படுவதும் எதிர்காலத்தில் என்ன நடக்கப்பபோகிறது என்பது விளங்காத புதிராக உள்ளது. (மட்டு.நகர் கதிர்.)
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இந்தோனேஷியாவில் அதிக எடையுடன் பிறந்து குழந்தை சாதனை

Photobucketஇந்தோனேஷியாவில் வடக்கு சுமத்ரா பகுதியைச் சேர்ந்தவர் அனி (வயது 41). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் அப்துல் மேனன் மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

8.7 கிலோ எடையுடனும் 24.4 அங்குல நீளத்துடனும் இக்குழந்தை கடந்த 21ஆந் திகதி அதிசயமாகப் பிறந்துள்ளது.

இக்குழந்தைக்கு முகம்மட் அக்பர் ரிசுடீன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

"இந்தோனேஷியாவில் அதிக எடையுடன் பிறந்து இக்குழந்தை சாதனை படைத்திருக்கின்றது" என்று வைத்தியசாலையைச் சேர்ந்த டாக்டர் தெரிவித்தார்.

'அக்பர்' என்றால் இந்தோனெஷியாவின் பெரியவன் என்று அர்த்தமாம்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

குருநாகலில் 4மாத காலத்தில் 250தற்கொலைச் சம்பவங்கள்குருநாகல்


குருநாகல் மாவட்டத்தில் கடந்த நான்குமாத காலப்பகுதியில் மாத்திரம் 250தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவர்கள் அனைவரும் நஞ்சு விதைகளை உட்கொண்டு மரணமாகியுள்ளதாக குருநாகல் மாவட்ட மரண விசாரணை அதிகாரி பீ.கே.அமரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் அநேகமானவர்கள் 15முதல் 25வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் இவர்களில் அதிகமானோர் காதல் மற்றும் தொழில் வாய்ப்பில் ஏற்பட்ட தோல்விகளினாலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெறும் தற்கொலைச் சம்பவங்களைக் குறைத்துக் கொள்ளும் பொருட்டு சமூக மட்டத்தில் உள ஆற்றல்கள் மற்றும் விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்களை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வேட்டை நாயின் விலை ரூ. 3 கோடி;அதை வரவேற்க 30 கார்கள் : சீனாவில் அதிசயம்


அரிய வகை வேட்டை நாய்க்கு மூன்று கோடி ரூபா செலவழித்து, அதை வரவேற்க 30 விலையுயர்ந்த கார்களையும் வாடகைக்கு எடுத்துள்ளார் ஒரு சீனப் பெண்மணி.

மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. சீனப் பொருளாதாரத்தின் அபரிமித வளர்ச்சியால் அந்நாட்டில் நிறைய கோடீஸ்வரர்கள் உருவாகி வருகின்றனர்.
2009 ஏப்ரல் வரை கணக்கிட்டதில் எட்டு லட்சத்து 25 ஆயிரம் பேர் அங்கு கோடீஸ்வரர்கள். இப்படி வகை தொகையில்லாமல் சீனாவின் வளர்ச்சி இருப்பதால் அந்நாட்டினர் பணத்தைத் தண்ணீராக செலவழிக்கவும் தயங்குவதில்லை.
'வாங்' என்ற கோடீஸ்வரி பெண்மணி, நாய் வாங்க மூன்று கோடி ரூபா செலவழித்துள்ளார். 'வாங்'கும் அவர் நண்பரும் ஒரிஜினல் திபெத்திய வேட்டை நாய்க்காக அலையோ அலை என்று அலைந்து திரிந்தார்களாம்.

கடைசியில் ஒருவழியாக திபெத்தின் 'குயிங்காய்' மாவட்டத்தில் ஒரு பெண்மணியிடம் அந்த நாய் இருப்பது அவருக்குத் தெரிந்தது. விடுவாரா 'வாங்'? வாங்' இருப்பது வடமத்திய சீனாவின் 'ஷான்க்ஸி' மாவட்டம். அங்கிருந்து பறந்தார் 'குயிங் காய்'க்கு. மூன்று கோடி ரூபா கொடுத்து அந்த நாயை வாங்கிவிட்டார். 18 மாத வயதான 'யாங்ட்ஸ்' என்ற அந்த நாயோடு திரும்பினார். அந்த நாயை வரவேற்க 'ஜியான்' ஏயார்போர்ட்டில் 30 கருப்பு நிற மெர்சிடஸ் - பென்ஸ் கார்கள் வந்து நிற்க வேண்டும் என்று உத்தரவிட்டார் வாங்.
விமானத்திலிருந்து கார் வரை 'யாங்ட்ஸ்'க்கு சிவப்புக் கம்பள வரவேற்பு( கொஞ்சம் ஓவர் தான்) வேறு.
தங்கத்துக்குக் கூட விலை உண்டு. என் செல்லத்துக்கு விலையே கிடையாது' என்று 'யாங்ட்ஸை' கொஞ்சி மகிழ்கிறார் 'வாங்'.
ஒரு குட்டி நாய் வாங்குவதென்றாலே வாயைப் பிழக்கும் நம்மவருக்கு இது ஓர் அதிசயத் தகவல் தானே?
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஒரு வயது நிரம்பிய பெண் குழந்தையின் வயிற்றில் இரட்டைக்குழந்தைகள்

சீனாவில், பிறந்தவுடன் கைவிடப்பட்ட ஒரு குழந்தையை குழந்தைகள் இல்லாத பெற்றோர் அந்த குழந்தையை எடுத்து வளர்த்து வந்தனர். ஒரு வயதுடைய காங் மெங்ரூ (Kang Mengru) என்ற அந்த பெண் குழந்தையின் வயிற்றில், இரட்டை சிசு உள்ள ஆபூர்வம் நடந்துள்ளது.

அக்குழந்தையின் வயிற்று பகுதி நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே போவதால், குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைக்கு காங் மெங்ரூவை (Kang Mengru) கொண்டு சென்றனர். மருத்துவர்கள் குழந்தை பரிசோதனை செய்த போது, குழந்தையின் வயிற்றில் இரட்டை சிசு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.




அந்த குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிடில் அக்குழந்தை இறக்க நேரிடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அக்குழந்தையின் வளர்ப்பு பெற்றோரிடம் அறுவை சிகிச்சைக்குரிய போதிய பணமில்லாததால் உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் மக்களிடமிருந்து தேவையான நிதியை வசூலித்து வருகின்றனர். காங் மெங்ரூவிற்கு விரைவில் அறுவைசிகிச்சை நடக்க உள்ளது.இது

 ஆண்டவனின் கொடுமையா?
  அரிவியலின் கொடுமையா?


இக்குழந்தைக்கு நடக்கவிருக்கும் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து அக்குழந்தை நலமுடன் வாழ ஆண்டவனை பிரார்த்திப்போமாக.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இதுவரை சுமார் 1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண்



இங்கிலாந்து பெண்ஒருவர் தான் இதுவரை சுமார் 1500 பேருடன் செக்ஸ் உறவை பகிர்ந்து கொண்டதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். அவர்களில் பெரும்பாலானவர்கள் மற்றபெண்ளின் கணவர்கள் அல்லது பாய்பிரண்ட்டுகளாம். மேற்கு லண்டனின் செல்சியா பகுதியில் வாழும் அந்தபெண்ின் பெயல் மேர் சிமோன். அவர் ஆண்கள்,பெண்கள்மற்றும் தம்பதியினரின் தாம்பத்திய வாழ்க்கையை மெருக்கேற்ற உதவும் செக்ஸ் மருத்துவராக வேலை பார்த்து வருவதாகக் கூறிக் கொள்கிறார். அதே நேரத்தி்ல் நான் விபச்சாரப் பெண் அல்ல என்கிறார். கடந்த 20 ஆண்டுகளாக இந்த வேலையை மகிழ்ச்சியுடன் செய்து வருவதாக கூறும் அவருக்கு தற்போது வயது 54. இது குறித்து அவர் கூறுகையில், அடுத்தபெண்ணிகள் கணவர் அல்லது பாய்பிரண்டுடன் உறங்கி சம்பாதித்து வருகிறேன். ஆனால், நான் ஒரு விலைமாது அல்ல. ஒருவருடைய செக்ஸ் பிரச்சனைகளை தீர்க்கும் வகையிலும், அதற்கு ஆலோசனை வழங்கும் நோக்கத்திலும் தான் இந்த சேவையை செய்து வருகிறேன். இதற்காக அவர்கள் தரும் பணத்தில் தான் என் வாழ்க்கை நடக்கிறது. சேவைக்காக செக்ஸ் வைத்து கொள்வது சட்டப்படி தவறில்லை. பிரச்சனைகள் தீர்த்து வைப்பதற்கும், நான் வழங்கும் அறிவுரைகளுக்காகவும் என்னிடம் வரும் ‘நோயாளிகள்’ காசு கொடுக்கிறார்கள். செக்ஸ் சுகத்துக்காக அல்ல. நான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை முன்னேற்றம் காண, மாறுதல் பெற உழைத்திருக்கிறேன். இதன்மூலம் அவர்களது மனைவிகள் அல்லது கேர்ள்பிரண்டுகளும் லாபம் அடைந்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. குழந்தை வேண்டும் சில பெண் களுக்கு வேறு சில பெண்கள் வாடகை தாயாக குழந்தை பெற்று தருகிறார்கள். அதேபோல் தான் செக்ஸ் விஷயத்தில் உதவ ஆளில்லாமல் தவிப்பவர்களுக்கு உதவி வருகிறேன். எனது வாடிக்கையாளர்களுக்கு தங்களது உடலமைப்பின் மீது நம்பிக்கை உண்டாக்கி வருகிறேன். அவர்கள் நம்பிக்கையுடன் திரும்பிச் செல்வதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை சந்தித்து இருக்கிறேன். அவர்களில் சுமார் 1,500க்கும் மேற்பட்டவர்களுடன் உற்சாகமாக செக்ஸ் உறவு வைத்திருக்கிறேன். சில சமயங்களில் மனைவிக்கு முன்னால் அவர்களது கணவருடன் செக்ஸ் கொண்ட அனுபவமும் உள்ளது. அதன்மூலம் அவர்கள் இல்லற வாழ்க்கையை எப்படியிருக்க வேண்டும் என்பதை அந்த தம்பதிகள் புரிந்து கொள்வார்கள். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் எனது வாடிக்கையாளர்களை சந்தித்து வருகிறேன். ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து பேருக்கு ஆலோசனை வழங்குவேன். எனது வேலை முழு திருப்தி அளிக்கிறது. இதை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். எந்தவொரு சமயத்திலும் இந்த வேலைக்கு ஏன் வந்தோம் என எண்ணியது கிடையாது. இன்னும் 10 ஆண்டுகளுக்கு இந்த சேவையை தொடரவிருக்கிறேன். செக்ஸ் பிரச்சனைகளை தீர்ப்பவர் என்ற முறையில் என்னை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கேரளா வாழைப்பழம்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates