jkr
แสดงบทความที่มีป้ายกำกับ அமைச்சர் மைத்திரிபால சிறிசேன แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ அமைச்சர் மைத்திரிபால சிறிசேன แสดงบทความทั้งหมด

தமிழ்க்கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்கத் தயாராகவுள்ளனர் -ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலர்!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்பதற்குத் தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் கூட்டமைப்பின் தீர்மானத்தினால் எந்தவிதப் பாதிப்புகளும் ஏற்படப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் மேலும் கூறியதாவது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று மூன்று குழுக்களாகப் பிரிந்து காணப்படுகின்றது. பெரும் பிளவுகள் காணப்படுகின்றன. சம்பந்தன் தலைமையில் ஒருசிலர் சரத் பொன்சேகாவை ஆதரித்தபோதும் அதன் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கே ஆதரவுகளை வழங்குகின்றனர். இந்நிலையில் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜனாதிபதி 28 லட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெறுவார் : மைத்திரிபால சிறிசேன


வெகு விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 28 லட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெறுவார் என விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று காலை மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்,

"ஜனாதிபதித் தோதலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்யக்கூடிய மக்கள் பலம் கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்துள்ளன.

2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டின் தலைவரானபோது நாடு இரண்டாகப் பிரிந்து போகக்கூடிய அபாயத்திலிருந்தது.

எமது ஜனாதிபதி அந்த நிலையை வெற்றி கொண்டு நாட்டில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்தினார்.

நாடு முழுவதிலும் சுதந்திரத் தேர்தல் முதல்முறையாக நடைபெறவுள்ளது. ஜனாதிபதியின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதாக வடக்கில் உள்ள மக்கள் உறுதியளித்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன.

ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்த கிராம மட்டத்திலிருந்து நாட்டை நேசிக்கும் இடதுசாரிக் கட்சிகள்வரை ஒன்றுபட்டுள்ளன" என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates