தமிழ்க்கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்கத் தயாராகவுள்ளனர் -ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலர்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்பதற்குத் தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் கூட்டமைப்பின் தீர்மானத்தினால் எந்தவிதப் பாதிப்புகளும் ஏற்படப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் மேலும் கூறியதாவது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று மூன்று குழுக்களாகப் பிரிந்து காணப்படுகின்றது. பெரும் பிளவுகள் காணப்படுகின்றன. சம்பந்தன் தலைமையில் ஒருசிலர் சரத் பொன்சேகாவை ஆதரித்தபோதும் அதன் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கே ஆதரவுகளை வழங்குகின்றனர். இந்நிலையில் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
0 Response to "தமிழ்க்கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்கத் தயாராகவுள்ளனர் -ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலர்!"
แสดงความคิดเห็น