வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்களின் சுயதொழில் ஊக்குவிப்புக்கென ஒரு தொகுதி தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன
யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்களின் சுயதொழில் ஊக்குவிப்புக்கென சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு தொகுதி தையல் இயந்திரங்களை வழங்கினார். அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் நேற்றைய தினம் (29) இடம்பெற்ற இந் நிகழ்வில் கணவனை இழந்த பெண்கள் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களுக்கென 11 தையல் இயந்திரங்களும் உள்ளக இடப்பெயர்விற்கு உள்ளானவர்களில் தையல் தொழிலை சுயமுயற்சியாக கொண்டவர்களுக்கு என இரண்டு இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை தொழில் செய்ய முடியாத நிலையிலுள்ள குடும்பத் தலைவரைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் கணவர் காணாமல் போன நிலையிலுள்ள குடும்பங்களுக்கு என 8 தையல் இயந்திரங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தையல் இயந்திரங்களை வழங்கி உரைநிகழ்த்தியபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாதிப்புக்குள்ளான மக்களின் மேம்பாட்டுக்கென வழங்கப்படும் இந்தத் தையல் இயந்திரங்களை உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ றீகன் மற்றும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும். |
0 Response to "வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்களின் சுயதொழில் ஊக்குவிப்புக்கென ஒரு தொகுதி தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன"
แสดงความคิดเห็น