இலங்கையில் மீண்டும் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்தோட இடமளிக்கப்படக் கூடாது: கோத்தபாய ராஜபக்ஷ
இலங்கையில் மீண்டும் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்தோட சந்தர்ப்பம் வழங்கப்படக் கூடாதென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழித்து ஐக்கியப்படுத்தப்பட்டுள்ள நாட்டை பிளவடையச் செய்ய சில சக்திகள் சதித் திட்டம் தீட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை பிளவுபடுத்தும் வெளிநாட்டு சக்திகளின் சதி முயற்சிகளுக்கு இடமளிக்கப்படக் கூடாதென அவர் தெரிவித்துள்ளார்.
ஹிக்கடுவ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகா மேற்குலக நாடுகளின் விருப்பு வெறுப்புக்களை பூர்த்தி செய்யும் நோக்கில் தேர்தல் களத்தில் குதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு பிரதமருக்கு நிகரான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் பல்வேறு வரப்பிரசாதங்களை வழங்கிய போதிலும், சரத் பொன்சேகா அதிகார ஆசை காரணமாக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை விமர்சித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 Response to "இலங்கையில் மீண்டும் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்தோட இடமளிக்கப்படக் கூடாது: கோத்தபாய ராஜபக்ஷ"
แสดงความคิดเห็น