jkr

யாழ். நவீன சந்தைத் தொகுதியின் அடிப்படை வசதிகளின் குறை நிறைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்!

யாழ். நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியில் விற்பனை நிலைய உரிமையாளர்கள் பணியாளர்கள் மற்றும் அங்கு வருகைதரும் பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகளின் குறை நிறைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நண்பகல் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

நவீன சந்தைத் தொகுதியில் பணியாற்றுபவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எனக் கட்டப்பட்ட கழிப்பிடங்களை நேரடியாகப் பார்வையிட்டதுடன் இருபாலாரும் தனித்தனியான கழிப்பிடங்களைப் பாவனைக்குட்படுத்துவது மற்றும் கழிப்பறைகள் சுகாதாரமாகப் பேணப்படுவதன் அவசியம் பற்றியும் சம்பந்தப்பட்ட மாநகர சபையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

சந்தைத் தொகுதியிலுள்ள நடைபாதை துவிச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதால் பொதுமக்களும் பாதசாரிகளும் எதிர்நோக்கும் சிரமங்களைக் கவனத்திற்கொண்டு உரிய வாகனத் தரிப்பிடத்தில் வண்டிகளை நிறுத்துவதுடன் அவற்றுக்கான கட்டண அறவீட்டை மேற்கொள்வது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

சந்தைத் தொகுதிக்கான மின்னிணைப்புகளைச் சீர்படுத்துவதுடன் அதற்கான மின்பிறப்பாக்கி இயந்திரத்தை அதற்குரிய இடத்தில் சீராகப் பராமரிப்பதும் அதற்காக மேற்கொள்ளவேண்டிய ஏற்பாடுகள் பற்றியும் அமைச்சர் விளக்கிக் கூறினார்.

இச்சந்தைத் தொகுதியில் நீண்ட காலமாக பவனைக்குட்படுத்தப்படாமல் இருக்கும் கட்டிடத் தொகுதிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்டதுடன் மாநகர சபைக்கு வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வகையில் அவற்றை வர்த்தக நடவடிக்கைகளுக்குத் திருத்தியமைத்துக் கொடுப்பதற்காக மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகள் பற்றியும் மாநகர சபை முதல்வர் மற்றும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.

நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியில் காணும் அனைத்து அடிப்படை வசதிகளுக்காக மேற்கொள்ளவேண்டிய உடனடி நடவடிக்கைகள் பற்றியும் யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் மாநகர சபை அதிகாரிகளுக்கும் உரிய ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கினார்.



























  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யாழ். நவீன சந்தைத் தொகுதியின் அடிப்படை வசதிகளின் குறை நிறைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates