jkr

எஸ்.பி.திசாநாயக்க கூற்றுக்கு திகாம்பரம் கண்டனம்


தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தொடர்பில் மத்திய மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் எஸ்.பி.திசாநாயக்கத்தெரிவித்த கருத்துத்தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கம் ,தொழிலாளர் தேசிய முன்னணி தனது கண்டனத்தினைத்தெரிவித்ததுக்கொண்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிய எஸ்.பி.திசாநாயக்க தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பி.திகாம்பரம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அவர் தன்னுடன் தொடர்பில் உள்ளார் எனவும் கூறியுள்ளார்.

இந்தக்கூற்றுக்கு மறுப்புத்தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து அண்மையில் வெளியேறி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட மத்திய மாகாண சபை எதிர்க்கட்சியின் முன்னாள் தலைவர் எஸ.பி. திசாநாயக்க தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது தொழிலாளர் தேசிய சங்கம் குறித்து முற்றுமுழுதான சோடிக்கப்பட்ட கதையொன்றைக் கூறியுள்ளார்.

அவரது கூற்றுக்கும் தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் அதன் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான பி. திகாம்பரம் உள்ளிட்ட எந்தவொரு உறுப்பினருக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதோடு, அவரின் இக்கூற்றக்கு தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் அதன் அரசியல் கிளையான தொழிலாளர் தேசிய முன்னணி என்பன வண்மையான கண்டனத்தைத் தெரிவித்தக் கொள்கின்றது.

எஸ.பி.திசாநாயக்கவுடன் நாங்கள் ஓரணியிலிருந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட காலமொன்றிருந்தது. தற்போது அந்த அணியில் அவர் இல்லை. அவர் தற்போது தனது அணியை மாற்றிக்கொண்டாலும் இன்னமும் தான் அணி மாறிவிட்டதனை உணராதவராக, ஞாபகம் மறந்த நிலையில் இத்தகைய கூற்றினை வெளியிட்டுள்ளார்.

இவரின் ஞாபகமறதிக்கு வேறு ஏதேனும் காரணிகள் இருக்கலாம் என நாங்கள் நினைக்கின்றோம். தொழிலாளர் தேசிய முன்னணியானது கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியோடு இணைந்து தேர்தலை சந்தித்தது முதல் தற்போது ஜனாதிபதித் தேர்தலில் புரிந்துணர்வின் அடிப்படையில் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா அவர்களை ஆதரிக்கின்றது என்பதனை சகலருக்கம் இச்சந்தர்ப்பத்தில் உறுதிபடக் கூறிக்கொள்கிறது.

இவ்வாறான கட்டுக் கதைகளுக்கம் பொய்ப்பிரசாரங்களுக்கும் எமது உறுப்பினர்களோ ஆதரவாளர்களோ செவிசாய்க்க வேண்டாமென நாங்கள் கேட்டுக் கொள்வதோடு, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரித்து அன்ன சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "எஸ்.பி.திசாநாயக்க கூற்றுக்கு திகாம்பரம் கண்டனம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates