இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகள் மேற்கத்தைய நாடுகளை தொடர்பு கொண்டனர்: பாலித கோஹன
இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது, தமிழீழ விடுதலைப்புலிகள், மேற்கத்தைய நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியதாக இலங்கைக்கான ஐ;க்கிய நாடுகள் பிரதிநிதி பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற, நிகழ்வு ஒன்றில் தகவல் அளித்த பாலித கோஹன மேலும் தெரிவிக்கையில்,
இறுதி யுத்தத்தின் போது மேற்கத்தைய நாடுகள் தம்மை பாய்ந்து வந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகள், அந்த நாடுகளை தொடர்பு கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அதற்கு பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறையினர் சரணடைந்தமை, அவர்கள் இலங்கைப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டமை போன்ற ஏற்கனவே வெளியான தகவல்கள் தொடர்பாக அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
ஜனாதிபதி, இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முனைந்த போதும் அதனை தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவேதான் அவர் மாற்று நடவடிக்கையை எடுத்ததாக பாலித கோஹன குறிப்பிட்டுள்ளார்.
செக் குடியரசில் இருந்து எறிகணைகளை எடுத்து வர மேற்கத்தையை நாடுகள், தமது துறைமுகங்களில் அனுமதி தராது பல்வேறு தடைகளையும் ஏற்படுத்தின.
இறுதியாக, போலந்து மாத்திரமே தமது துறைமுகத்தை பயன்படுத்த இலங்கைக்கு அனுமதி வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாகவே, மேற்கத்தைய நாடுகள் இலங்கையுடன் பகைமை கொண்டுள்ளதாக பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
0 Response to "இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகள் மேற்கத்தைய நாடுகளை தொடர்பு கொண்டனர்: பாலித கோஹன"
แสดงความคิดเห็น