செய்தியறிக்கை
உணவு மற்றும் குடிநீருக்காக காத்திருக்கும் மக்கள் |
ஹெய்தி சிறையிலிருந்து தப்பியவர்களை கட்டுப்படுத்த சர்வதேச உதவிகள் கோரப்பட்டுள்ளன
ஹெய்தியில் கடந்த வாரம் பூகம்பம் ஏற்பட்டபோது மோசமாக தகர்ந்துபோன தலைநகர் போர்தோ பிரன்ஸின் முக்கிய சிறையில் இருந்து தப்பித்திருந்த ஆயுதக் கும்பல்களை சமாளித்துக் கட்டுப்படுத்துவதில் சர்வதேச உதவிகள் தேவைப்படுவதாக அங்குள்ள ஒரு வட்டாரத்தின் போலிஸ் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சூரையாடல், கொள்ளையடித்தல் போன்ற செயல்களை சிறையில் இருந்து தப்பிய இந்தக் கும்பல் செய்துவருவதாக சிதே சொலெய் என்ற சேரி வட்டாரத்தில் பொலிஸ் தலைவர் கூறியுள்ளார்.
அண்மையில் ஹெய்தி வந்திறங்கியுள்ள அமெரிக்க சிப்பாய்கள், அங்கே ஏற்கனவே நிலைகொண்டுள்ள ஐ.நா. துருப்பினர் ஆகியோரிடம் முன்வைக்கப்படும் கோரிக்கை இது எனத் தெரிவதாக போர்த்தோ பிரன்ஸில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
உடற்திறனை நிரூபிக்க நைஜீரிய அதிபருக்கு காலக்கெடு
அதிபர் உமரு யார் அடுவா |
அதிபர் யார் அடுவா மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு சவுதியரேபியா சென்றிருந்தார்.
ஆனால் அதிபர் பதவிக்கான அதிகாரங்களை அவர், உத்தியோகபூர்வமாக துணை அதிபர் குட்லக் ஜோனதனிடம் ஒப்படைத்திருந்திருக்கவில்லை.
தற்போதுள்ள நைஜீரிய அரசாங்கத்துக்கு சட்டத்தின் அங்கீகாரம் உள்ளதா என்று கேள்வியெழுப்பும் மூன்று விவகாரங்களில் இதுவும் ஒன்று.
உலக பங்குச் சந்தைகளில் வங்கிகளின் பங்குவிலைகள் வீழ்ச்சி
கோல்ட்மன் சாக்ஸ் முதலீட்டு வங்கி |
டோக்கியோ பங்கு சந்தையின் நிக்கெய் சுட்டெண் இன்றைய பங்கு வர்த்தகத்தின் நிறைவில் இரண்டரை சதவீதம் சரிந்திருந்தது. நேற்று வியாழனன்று நியூயார்க் பங்கு சந்தையும் இரண்டு சதவீதத்துக்கும் அதிகமான சரிவைக் கண்டிருந்தது. ஐரோப்பிய பங்கு சந்தைகளும் சற்றே வீழ்ச்சி கண்டுள்ளன.
உலகப் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாவதைத் தூண்டிவிடும் காரணிகளில் ஒன்றாக அமெரிக்க வங்கிகள் அமைந்திருந்தன என்றூ ஒபாமா குற்றம்சாட்டியிருந்தார்.
இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பு உசார் நிலையில்
விமான நிலையங்களில் விசேட பாதுகாப்பு |
பாதுகாப்பு அதிகாரிகள் சில விமானங்களில் பயணிப்பார்கள் என்றும் விமானப் பயணிகள் கூடுதலான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து பிற தெற்காசிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பாதுகாப்பு நோக்கில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் உளவுத் தகவல் சேகரிப்பு கட்டமைப்புகளில் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்துவருகிறது.
தேர்தல்கள் ஆணையாளர் |
"இலங்கை ஜனாதிபதி தேர்தல்களுக்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில்"- தேர்தல்கள் ஆணையாளர்
இலங்கையில் 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சகல முன்னேற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
மாவட்ட மட்டடங்களில் தேர்தல் அத்தாட்சி அலுவலர்களும் நாடாளாவிய ரீதியில் தனது உதவி ஆணையாளர்களும் தேர்தல் பணிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தயானந்த திஸாநாயக்க கொழும்பில் இன்று அறிவித்தார்.
வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்காளர்களின் பாதுகாப்புக்காக பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்தகால போரினால் இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்காக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு,புத்தளம் கொழும்பு,களுத்துறை,கம்பஹா, குருணாகல்,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் கொத்தணி வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தினத்தின் மறுநாள் காலைப் பொழுதுக்குள் இறுதி முடிவுகள் வெளியாகும் எனவும் தயானந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மனக்குமுறல்கள்
கிழக்கிலுள்ள இடைத்தங்கல் முகாம்கள் |
மூதூர் கிழக்கு, சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து கட்டைப்பறிச்சான், கிளிவெட்டி, பட்டித்திடல் ஆகிய பகுதிகளில் கடந்த நான்கு வருடங்களாக எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் தமிழோசைக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் - அரசியலமைப்புச் சட்டத்தின் பின்னணியில் சில தெளிவுகள்
வாக்குப்பதிவு- ஆவணப்படம் |
இந்த நிலையில் அந்த தெளிவின்மைகளுக்கு இலங்கையின் அரசியலமைப்புச் சட்டவிதிகளின் பிரகாரம் விளக்கமளிக்கிறார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பீடாதிபதி என்.செல்வக்குமரன்.
இந்த தேர்தலில் புதிய ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் உடனடியாக பதவியேற்க வேண்டும் எனவும் அரசியலமைப்பு சட்டவிதிகளை மேற்கோள் காட்டி அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வாக்குகள் அடிப்படையில் முன்னிலையிலுள்ள இரண்டு பிரதான வேட்பாளர்களும் 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறத்தவறினால் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் முறையே எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர் தீர்மானிக்கப்படுவார் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பீடாதிபதி என்.செல்வக்குமரன் தெரிவித்தார்.
"ஐ.பி.எல் போட்டிகளுக்கு பாகிஸ்தான் வீரர்கள் ஏலம் எடுக்கப்படாதுள்ளதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை"- ஐ.பீ.எல் ஆணையர்
பாகிஸ்தானில் வலுத்துள்ள எதிர்ப்புகள் |
இதுதொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் லலித் மோடியும், ஐபிஎல் அணி உரிமையாளர்களும் பேசினார்கள்.
லலித் மோடி கூறுகையில் "ஐபிஎல் அணி உரிமையாளர்கள், தங்களுக்கு வேண்டிய வீரர்கள் யார் என்பதை ஆய்வு செய்து, தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்" என்று கூறினார்.
திரைப்பட நடிகையும், ஐபிஎல் அணிகளில் ஒன்றின் உரிமையாளருமான ஷில்பா ஷெட்டி கூறுகையில், "இதைப்பற்றி விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த வீரரைத் தேர்வு செய்வது என்பது அணி உரிமையாளர்களின் முடிவு. தற்போதைய நிலையில், அதற்கான காரணங்கள் எல்லோருக்கும் தெரியும். அவர்களை தேர்வு செய்யக்கூடாது என்ற எண்ணம் இல்லை" என்றார்.
எட்டு அணிகளைக் கொண்ட ஐபிஎல் அணிகளுக்கு இந்தியாவின் பிரபல தொழில் நிறுவனங்களும், திரைப்பட நட்சத்திரங்களும் உரிமையாளர்களாக இருக்கிறார்கள். இந்த ஆண்டு போட்டிகளுக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தபோது, பாகிஸ்தான் வீரர்களைத் தேர்வு செய்ய எந்த அணி உரிமையாளரும் முன்வரவில்லை.
0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น