ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு புதிய ஆரம்பத்தை நோக்கிச் செல்ல வேண்டும் - வாசுதேவ நாணயக்கார வலியுறுத்து
ஒரு புதிய ஆரம்பத்தை நோக்கி ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசு செல்ல வேண்டுமென ஜனாதிபதி ஆலோசகரும் புதிய இடதுசாரி முன்னனியின் செயலாளருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவி வந்த ஐயப்பாடு இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்பட்டுள்ளமையால் அனைத்து இன மக்களிடையேயும் தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் அவசியமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அரசுடன் இணைந்து செயற்படும் வகையில் சிறுபான்மை மக்கள் மத்தியில் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமெனவும் இதனூடாக ஜனாதிபதி மஹிந்தவின் அரசுக்கும் தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கும் இடையிலான இடைவெளியை மட்டுப்படுத்தி இன ஐக்கியமும் புரிந்துணர்வும் ஏற்படுத்தப்படுவது அவசியமெனவும் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு உட்பட மலையகத்தின் பல பகுதிகளிலும் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதை தவிர்த்திருந்தனர்.
0 Response to "ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு புதிய ஆரம்பத்தை நோக்கிச் செல்ல வேண்டும் - வாசுதேவ நாணயக்கார வலியுறுத்து"
แสดงความคิดเห็น