கட்சியின் ரிமோட் கன்ட்ரோல் என்னிடம் : பிறந்தநாளில் பால்தாக்ரே அறிக்கை
மும்பை : சிவசேனா கட்சித்தலைவர் பால் தாக்ரேவுக்கு இன்று பிறந்தநாள். தனது 84வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அரசியலின் ரிமோட் கன்ட்ரோல் என்னிடம்தான் உள்ளது. தொடர்ந்து அது என் வசமே இருக்கும் என்று கூறியுள்ளார். சிவசேனா கட்சியின் விவகாரங்கள் அனைத்தும் எனது கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தொடர்ந்தும் என்னிடமே இருக்கும். கட்சியின் ரிமோட் கன்ட்ரோல் என்னிடம்தான் உள்ளது. அரசியல் ரிமோட் கன்ட்ரோலும் என்னிடமே உள்ளது என சாம்னா பத்திரிகையில் வெளியாகிருக்கும் கட்டுரை நீள்கிறது. 45 ஆண்டுகளுக்கு முன்பு விதைத்த விதை இன்று வளர்ந்து வேரூண்றி, டில்லியின் அதிகாரபீடம் வரை நீடித்து வளர்ந்து உறுதியாக உள்ளது என தனது மகன் உத்தவ் தாக்ரே குறித்து பெருமிதம் பொங்க தெரிவித்தார்.
கொள்கையில் தீவிரம் : மராத்தி மனுதர்மம் என்பதே எங்களது மையக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து அதுவே எங்களது கொள்கையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக பால் தாக்கரே அறிவித்தார். கட்சியின் தலைமைப் பொறுப்பை மகன் உத்தவ் தாக்கரேவிடம் ஒப்படைத்தார் தாக்கரே . இருப்பினும் தொடர்ந்து பால் தாக்கரேவே கட்சி விவகாரங்களை கட்டுப்படுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் முனுமுனுத்து வந்தது. தற்போது அதை தெளிவுபடுத்தும் வகையில் அவரது பிறந்தநாள் அறிக்கை அமைந்துள்ளது.
0 Response to "கட்சியின் ரிமோட் கன்ட்ரோல் என்னிடம் : பிறந்தநாளில் பால்தாக்ரே அறிக்கை"
แสดงความคิดเห็น