jkr

தற்போதைய செய்தி

தற்போதைய செய்தி
ஜனாதிபதி வேட்பாளர்கள்
ஃபொன்சேகா - மஹிந்த ராஜபக்ஷ்

ராஜபக்ஷ வெற்றி: இலங்கை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் முக்கிய போட்டியாளரான ஜெனரல் சரத் பொன்சேகா, இந்த முடிவுகளை தான் ஏற்கவில்லை என்றும் அவற்றை தான் எதிர்க்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

பதிவான வாக்குகளில் 58 சதவீதமானவை ராஜபக்ஷவுக்கு விழுந்திருப்பதாக அரச தொலைக்காட்சி அறிவித்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை சரியானது அல்ல, இந்த முடிவுகள் ரத்துசெய்யப்படும் நோக்ககில் சட்ட நடவடிக்கைகளைத் தான் தொடுக்கவிருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு தான் எழுதிய கடிதத்தில் சரத் ஃபொன்சேகா தெரிவித்துள்ளளார்.

தமிழர்கள் உள்பட சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களமிறங்கிய ஓய்வு பெற்ற ராணுவத் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகா முன்னிலை பெற்றிருக்கிறார்.

தென் இலங்கையில் அவரது சொந்தத் தொகுதியான அம்பலாங்ககொடவில் மஹிந்த ராஜபக்ஷ அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

தற்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை ராஜபக்ஷ பெற்றிருப்பதாக தேர்தல் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆரம்பகட்ட தேர்தல் முடிவு நிலவரங்களைப் பார்க்கும்போது, எதிர்க்கட்சி வேட்பாளரான ஜெனரல் சரத் ஃபொன்சேகா, சிங்கள வாக்காளர்களின் வாக்குகளைப் பிரிக்கத் தவறிவிட்டதாகவே தெரிகிறது என கொழும்பில் உள்ள பிபிசி செய்தியாளர் சார்லஸ் ஹவிலண்ட் கூறுகிறார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தற்போது வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்த சில மணி நேரங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான் கைது செய்யப்படலாம்: சரத் ஃபொன்சேகா

விடுதியின் வெளியே இராணுவத்தினர்
கொழும்பு நகரில் தான் தங்கியுள்ள விடுதியைச் சுற்றி பெருமளவில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தன்னைக் கைதுசெய்ய அவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்றும் பிபிசியிடம் சரத் ஃபொன்சேகா அச்சம் தெரிவித்துள்ளார்.

ஃபொன்சேகா மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கியுள்ள விடுதியைச் சுற்றிலும், ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் சுமார் 100 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதுபற்றி ராணுவப் பேச்சாளர் உதய நாணயகார கூறும்போது, ஃபொன்சேகாவைக் கைதுசெய்யும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார்.

இராணுவப் பணியை பாதியில் விட்டுச் சென்றவர்கள் உள்பட சுமார் 400 பேருடன் சரத் ஃபொன்சேகா அந்த விடுதியில்ல் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் சரணடைய வேண்டும் என்று தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உதய நாணயகார தெரிவித்தார்.

"அவர்களது எண்ணம் என்ன என்பது தெரியவில்லை. பாதுகாப்புக் கருதியே அங்கு ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். விடுதிக்கு உள்ளே செல்வோரும், வெளியே வருவோரும் பரிசோதிக்கப்படுகிறார்கள்'' என்றார் உதய நாணயகார.

இதனிடையே, சற்று நேரத்துக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், ஃபொன்சேகா கைதுசெய்யப்படலாம் என்று அச்சம் வெளியிட்டதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் அன்பரசன் தெரிவிக்கிறார்.

விடுதிக்கு வெளியே இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருப்பதால், அங்கு பதற்றம் நிலவுவதாகவும், அவர்களைத் திரும்பப் பெற வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்ததாக அன்பரசன் கூறுகிறார்.


26/01/2009 செய்தியரங்கம்

பிரான்சில் முகத்திரை முக்காடு அணியத் தடை

பிரான்ஸில் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட பொதுச் சேவைகளைப் பயன்படுத்தும்போது முஸ்லிம் பெண்கள் நிகாப் எனப்படுகின்ற முகத்தை மூடும் முக்காடுகளை அணிவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என அந்நாட்டின் நாடாளுமன்ற நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

'கடும்போக்கு மதவாத பின்பற்றல்' என்று தாங்கள் கூறும் ஓர் விடயம் தொடர்பில் வெளிப்படையான சின்னங்களை அணிகிற அல்லது பயன்படுத்துகிற எவருக்கும் பிரான்ஸில் தங்குவதற்கான வதிவிட அட்டைகள், குடியுரிமை போன்றவற்றை வழங்கக்கூடாது என்றும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.

பெண்கள் முகத்திரை அணிய வேண்டும் என்று கூறுவது பிரஞ்சுக் குடியரசின் விழுமியங்களான மதச்சார்பின்மை, சமத்துவம் போன்ற கொள்கைகளுக்கு முரணாக அமைந்துள்ளது என இந்தக் குழுவின் பரிந்துரை அறிக்கை கூறுகிறது.


ஒசாமாவின் பேச்சு அல்கயீதாவின் பலவீனத்தை காட்டுகிறது -ஒபாமா

அமெரிக்க அதிபர் ஒபாமா
அமெரிக்க அதிபர் ஒபாமா

ஒசாமா பின்லாடன் கடைசியாக வழங்கிய ஒலிநாடா என்ற பெயரில் வெளியாகியிருக்கும் செய்தி அல்கயீதா வலயமைப்பு எந்த அளவுக்கு பலவீனம் ஆகிவிட்டது என்பதன் ஓர் அடையாளம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்க விமானம் ஒன்றை டெட்ராய்ட் நகரத்தின் மீது தகர்க்க சென்ற மாதம் நடந்த முறியடிக்கப்பட்ட முயற்சியைப் பாராட்டுவதாகவும், மென்மேலும் அல்கயீதா தாக்குதல்கள் நடத்தும் என்று எச்சரிப்பதாகவும், அந்த ஒலிநாடாவின் செய்தி அமைந்திருந்தது.

முறியடிக்கப்பட்ட விமான வெடிகுண்டு முயற்சி ஒசாமா பின் லாடனின் உத்தரவின் பேரில் நடந்த ஓர் விஷயம்தான் என்கிற அவசியம் இல்லை. ஆனால் அந்தத் தாக்குதலுக்கு தானே காரணம் என்பதுபோல காட்டிக்கொள்ள முயற்சி செய்வது அல்கயீதா மிகவும் பலவீனம் அடைந்துவிட்டது என்பதையே காட்டுகிறது என ஒபாமா கூறியுள்ளார்.


இராக் மீது போர் தொடுக்க சட்ட அங்கீகாரம் கிடையாது- முன்னாள் வெளியுறவுத்துறை வழக்கறிஞர்

பாஸ்ராவில் பிரிட்டிஷ் படையினர்
பாஸ்ராவில் பிரிட்டிஷ் படையினர்

பிரிட்டிஷ் அரசாங்கம் 2003 ஆம் ஆண்டு இராக் மீது தொடுத்த போருக்கு சர்வதேச சட்டத்தின்படி அங்கீகா ரம் இல்லை என்று பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு தாம் திரும்பத்திரும்ப அறிவுரை கூறியதாக பிரிட்டனின் வெளியுறவுத்துறையின் மூத்த வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இராக் மீதான போரின் ஆரம்பநாட்களில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வெளியுறவுத்துறையின் வழக்கறிஞராக பணிபுரிந்த சர் மைக்கல் உட் அவர்கள் இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

இராக் மீது பிரிட்டன் போர் தொடுத்தது சரியா என்று விசாரித்து வரும் அரசு விசாரணை ஆணையத்தில் அவர் சாட்சியமளித்தபோது இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

இராக்கில் பிரிட்டன் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை சட்டரீதியில் சரியானது என்று அந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசின் சட்டமாஅதிபராக இருந்த லார்ட் கோல்ட்ஸ்மித் அவர்கள் தெரிவித்திருந்த கருத்துடன் தாம் முரண்பட்டதாக அவர் கூறினார்.

சர் ஜான் சில்காட் அவர்கள் தலைமையில் நடந்து வரும் இந்த விசாரணையில் எலிசபத் விம்ஷர்ஸ்ட் என்கிற மற்றொரு வழக்கறிஞரும் சாட்சியமளிக்க இருக்கிறார்.

ஐநா மன்றத்தின் தீர்மானத்தின் மூலமான மேலதிக ஒப்புதல் இல்லாமல் இராக் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் அது ஆக்கிரமிப்பு குற்றச்செயலாகவே இருக்கும் என்று வாதிட்டிருந்த அந்த அம்மையார், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமது அரச பதவியி லிருந்து விலகியிருந்தார்.


பன்றிக்காய்ச்சலை கையாண்ட விதம் குறித்து உலக சுகாதார நிறுவம் மீது விமர்சனம்

பன்றிக்காய்ச்சல் பீதியால் பல நாடுகள் மருந்துகளை வாங்கிக் குவித்தன
பன்றிக்காய்ச்சல் பீதியால் பல நாடுகள் மருந்துகளை வாங்கிக் குவித்தன

கடந்த ஆண்டு உலக நாடுகளில் பரவிய பன்றிக்காய்ச்சலை, உலக சுகாதார நிறுவனமும் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களும் கையாண்ட விதம் குறித்து அவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக் கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகளுக்கான அமைப்பான ஐரோப்பிய குழுமத்தில் இது தொடர்பாக நடந்த விசாரணையின்போது, மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக பன்றிக்காய்ச்சல் வைரஸின் ஆபத்து குறித்து உலக சுகாதார நிறுவனம் மிகைப்படுத்தி காட்டியதாக அதன் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

பன்றிக்காய்ச்சல் விலங்கிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடிய ஆபத்தானதொரு நோயாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

இதன் விளைவாக, இந்த நோய் தாக்கினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக இருக்கும் என்கிற அச்சத்தில், பல ஐரோப்பிய நாடுகள் இதற்கான தடுப்பு மருந்துகளை மில்லியன் கணக்கில் வாங்கிக்குவித்தன.

பன்றிக்காய்ச்சல் காரணமாக உலகு தழுவிய அளவில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்திருந்தாலும், ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டதைப்போல இந்த வைரஸ் கடுமையானதாக இருக்கவில்லை.

செய்தியரங்கம்
இலங்கையின் தென்பகுதியில் ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்தனர்
இலங்கையின் தென்பகுதியில் ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்தனர்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்தது

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியோடு முடிவடைந்துள்ளது. தற்போது வாக்கு எண்ணும் பணி துவங்கியுள்ளது. முடிவுகள் புதன் மதியம் அளவில் தெரியவரும்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தோல்வியடைந்ததை அடுத்து இலங்கையில் 25 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துள்ளதன் பின்னர் அங்கு நடக்கும் முதல் அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக தலைநகர் கொழும்பிலும், நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் பெருமளவான மக்கள் திரண்டுவந்து வாக்களித்துள்ளனர்.

வாக்குப் பதிவை ஒட்டி தலைநகர் கொழும்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததாக அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் அன்பரசன் தெரிவிக்கிறார்.

ரத்தினபுராவில் வாக்களிக்க வந்த மக்கள் கூட்டம்
ரத்தினபுராவில் வாக்களிக்க வந்த மக்கள் கூட்டம்

தேசிய அளவில் பார்க்கையில் 71 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்றாலும் தமிழர்கள் அதிகம் வாழும் வட பகுதியில் வாக்களிப்பு மிகவும் குறைவாக இருந்தது என சுயாதீன கண்காணிப்புக் குழு ஒன்று பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

வட பகுதியில் வாக்குப் பதிவு பத்து சதவீதத்திற்கும் சற்றுக் கூடுதலாக உள்ளது. இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் பெரு எண்ணிக்கையானோர் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக வாக்களிக்க முடியாமல் போயுள்ளது .

யாழ்ப்பாணத்தில் குண்டுவெடிப்பு

யாழ்பாபாணத்தில் திங்கள் இரவும், செவ்வாய் அதிகாலையும் பல இடங்களில் குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும். இது பொதுமக்களை பெரிய அளவில் அச்சுறுத்தியதாகவும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

வடக்கே வாக்களிப்பு மந்தமாக இருந்தது
வடக்கே வாக்களிப்பு மந்தமாக இருந்தது

வட பகுதியில் வாக்குப் பதிவு பத்து சதவீதத்திற்கும் சற்றுக் கூடுதலாக உள்ளது. இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் பெரு எண்ணிக்கையானோர் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக வாக்களிக்க முடியாமல் போயுள்ளது .

யாழ்ப்பாணத்தில் இன்று குறைந்தது ஆறு வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. நாட்டின் மையப் பகுதியிலும் தெற்கிலும் சிங்கள மக்கள் அதிகம் வாழும் இடங்களிலும் சில கையெறி குண்டுத்தாக்குதல்கள் நடந்துள்ளன.

வவூனியா முகாம்களில் உள்ளவர்களில் பலர் வாக்களிக்க முடியாத நிலை இருந்ததாகவும், சரியான ஏற்பாடுகள் இல்லாததன் காரணமாக, மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பலரால் வாக்களிக்க முடியவில்லை என்று ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளரான எம் கே சிவாஜிலிங்கம் தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதிபர் தேர்தலில் 22 பேர் போட்டியிடுகின்றனர் என்றாலும் தற்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்ஷவும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படையினரை வெற்றிக்கு இட்டுச்சென்ற ஜெனரல் சரத் ஃபொன்சேகாவுமே முக்கியப் போட்டியாளர்களாக அமைந்துள்ளனர்.

சிறப்பு ஏற்பாடு

திருகோணமலை மாவட்டத்தில் சில வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் ஹெலிகாப்டர் மூலமாக கொண்டுவரப்பட்டன.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தற்போதைய செய்தி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates