இந்த அமைதிச் சூழலை தக்க வைப்பதில் எமது பங்களிப்புக்கான தருணம் தற்போது நம் முன்னால் வந்துள்ளது - சமுர்த்தி உத்யோகத்தர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
இன்று கிடைத்துள்ள அமைதியான சூழலைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கு தமிழ்பேசும் மக்கள் தமது பங்களிப்பை வழங்குவதற்கான தருணம் தற்போது கைகூடியுள்ளதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சமுர்த்தி ஆணையாளர்களின் ஏற்பாட்டில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் இன்றைய தினம் (23) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த 6 மாதகாலத்துக்கு முன்னர் இருந்த நிலை இன்று முற்றாக மாற்றமடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்த அமைதியான சூழலை எற்படுத்துவதற்காக எமது தேசம் கொடுத்திருக்கும் அதிக விலை பற்றி மீட்டுப்பார்க்க வேண்டிய தருணத்தில் மக்கள் இருப்பதனையும் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலத்தில் எமக்கேற்பட்ட கசப்பான அனுபவங்களை சிறந்த பாடமாகக் கருத்திற்கொண்டு எதிர்கால சுபீட்சமான வாழ்வுக்காக எமக்குரிய தேசத்தில் அரசியல் தலைமையை தெரிவு செய்யும் முக்கியமான ஒரு கட்டத்திற்கு எமது மக்கள் வந்திருப்பதையும் அங்கு வருகைதந்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் அமைச்சர் எடுத்துக்கூறினார்.
இத்தகைய ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தில் இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன என்ற மனப்பாங்கில் இருப்பது எமது மக்களுக்கு எந்த முன்னேற்றத்தையும் தந்துவிடப்போவதில்லை என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் நம்முன்னால் உள்ள இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் யார் பொருத்தமானவர் என்பதைத் தெரிவு செய்வதன் மூலமே எமது எதிர்காலத்தின் தலைவிதியை தீர்மானிக்க முடியுமென்பதையும் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
சமுர்த்தி உத்தியோகத்தர்களின் தொழில் முன்னேற்றம் வருமான வாய்ப்புக்கள் மக்களுக்காக முன்னெடுக்கவேண்டிய அவசிய பணிகளை முன்கொண்டு செல்வதற்கான புதிய அரசியல் தலைமைத்துவமொன்றின் தேவை இப்போது உங்கள் முன்னால் வந்து நிற்கின்றது.
எமது தமிழ் தலைமைகளின் கடந்த கால அனுபவங்களை சரியாக செரிமானம் செய்துகொண்டு பொருத்தமான ஜனாதிபதியை தெரிவு செய்ய நீங்கள் அனைவரும் முன்வருவதன் மூலமே தமிழ்பேசும் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் எதிர்கால வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள முடியுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

0 Response to "இந்த அமைதிச் சூழலை தக்க வைப்பதில் எமது பங்களிப்புக்கான தருணம் தற்போது நம் முன்னால் வந்துள்ளது - சமுர்த்தி உத்யோகத்தர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா"
แสดงความคิดเห็น