படையினர் நியாயமாகவே செயற்படுவதாக பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவிப்பு
மேலிருந்து கீழாக நாட்டை தாம் அபிவிருத்தி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரவிருப்பதாகவும், ஜனாதிபதி – பிரதமர் – அமைச்சரவை என்ற அடிப்படையில் நாட்டை நிர்மாணிக்கவிருப்பதாகவும் எதிர்க்கட்சி பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மதவாச்சியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதலில் ஜனாதிபதி, உதாரண புருசனாக இருக்கவேண்டும் பின்னர் பிரதமரும் உதாரணமாக திகழவேண்டும், அதேபோலவே அமைச்சரவை உறுப்பினர்களும் உதாரணமாக இருக்கவேண்டும் என பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இதன் போதே நாட்டு மக்களுக்கு சிறந்த முன்மாதிரியை தோற்றுவிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியல் தலையீடுகள் அற்ற நிர்வாகம் மேற்கொள்ளப்படுவதன் ஊடாக, ஊழலற்ற அரசியலை மேற்கொள்ளமுடியும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் தாம் மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிகள் தற்போதும் மக்களுக்கு கிடைக்கப்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளினால் தவறுகள் நிகழாமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 90 சதவீதம் அவர்கள் நியாயமாகவே செயற்படுகின்றனர்.
இராணுவ வீரர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், தவறு செய்யாமல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாம் உறுதியளித்தது போன்ற நாடு தற்போதே மக்களின் கைகளில் கிடைக்க ஆரம்பித்துள்ளதாகவும், அதன் ஆரம்பமே தற்போது வெளிக்காட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொலிஸாரின் சிறந்த நிர்வாகம், நீதியான தன்மை, நீதி காப்பாற்றப்படல் என்பன இப்போது ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Response to "படையினர் நியாயமாகவே செயற்படுவதாக பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவிப்பு"
แสดงความคิดเห็น