தேர்தல் முறைக்கேடுகள் குறித்து விசாரிப்பது அவசியம் -ஐரோப்பிய ஒன்றியம்.
இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளில் அரசாங்கம் மாற்றம் செய்து விட்டதாகவும் இத்தேர்தல் முடிவை ஏற்க முடியாதென்றும் எதிரணி சார்பாக போட்டியிட்ட சரத்பொன்சேகா தெரிவித்திருந்தது தெரிந்ததே. தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணும்பணி ஆரம்பித்தவுடனேயே சரத்பொன்சேகா ஜனாதிபதியை கொல்லும் சதியில் ஈடபட்டுள்ளார் என அரசு ஒரு புரளியை கிளப்பிவிட்டு சரத்பொன்சேகா வெளியில் நடமாட முடியாதபடி ஹோட்டலுக்குள்ளேயே முடக்கியது இதற்காக 300-400 படையினரைக் கொண்டு சரத் பொன்சேகாவை சுற்றி வளைத்திருந்ததும் தெரிந்ததே. இவ்வாறு தம்மை முடக்கி வைத்து விட்டு தமக்கு விழுந்த வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷ தனக்காக மாற்றிக் கொண்டதாக குற்றம் சாட்டியுள்ள சரத்பொன்சேகா இத்தேர்தல் முடிவை ரத்துச் செய்ய வேண்டும் என கேட்டிருந்தார் இந்நிலையில் இலங்கை தேர்தல் முறைகேடுகள் குறி;த்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்று இலங்கை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம். ஐ.ஓ. வெளிநாட்டு கொள்கை அதிகாரி கந்தரின் ஆஷ்டன் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளதோடு தோற்கடிக்கப்பட்ட எதிர்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகாவின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கேட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகள் மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்து பணியாற்றத் தயார் என்றாலும்கூட தேர்தலின் போது தேர்தல் கண்காணிப்பாளர்களால் புகாரளிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையான நிகழ்வுகள் குறித்து தாம் கவலை கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேற்படி முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் பிரச்சார பணியாளர்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Response to "தேர்தல் முறைக்கேடுகள் குறித்து விசாரிப்பது அவசியம் -ஐரோப்பிய ஒன்றியம்."
แสดงความคิดเห็น