வவுனியா பாரதிபுரம் விளையாட்டு மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பெரும் ஆரவாரத்துடன் வரவேற்பு!
இன்றைய தினம் (19) பிற்பகல் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பாரதிபுரம் விளையாட்டு மைதானத்திற்குச் சென்ற சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பான்ட் வார்த்திய இசையுடன் வரவேற்று கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு உரைநிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ மீண்டும் வெற்றி பெற்று பதவிக்கு வந்ததும் தான் புதிய அமைச்சுப் பொறுப்பை ஏற்று மீண்டும் பாரதி புரத்திற்கு வருகை தருவேன் என தெரிவித்ததுடன் மக்களின் நலன்களை பேணும் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அடுத்த பொதுத்தேர்தலில் தமது கட்சி வீணைச் சின்னத்தில் மக்களைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த ஜனாதிபதித் தேர்தலில் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ அவர்களை ஆதரிப்பதாகவும் இன்றைய அச்சமற்ற சூழ்நிலையை தமிழ் பேசும்மக்களுக்கு பெற்றுத்தந்த ஜனாதிபதி எதிர்காலத்தில் எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு இணக்கப்பாடு கண்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் சுபீட்சம் நிறைந்ததாகவும் பாதுகாப்பானதாகவும் அமைவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ அவர்களின் வெற்றியை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார். இம் மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று ஈ.பி.டி.பி.யின் கொடியை அசைத்து என்னை வரவேற்க முற்பட்டுள்ளமைக்கு கடந்த காலத்தில் தொடர்ச்சியாக மக்கள் நலன்சார்ந்து நாம் கடைப்பிடித்து வந்த கொள்கையே காரணமாகும் என்றும் தற்போது தமிழ் மக்கள் எமது கட்சியின் அர்ப்பணிப்பு உணர்வுகளையும் மக்களின் நலன்சார்ந்து மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கூர்ந்து அவதானித்து வருவதாக தெரிவித்ததுடன் உங்கள் அனைவரையும் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் தொடர்ந்தும் எமது கட்சியின் பணிகளை முன்னெடுத்துச் செல்வோம் எனவும் தெரிவித்தார். |
0 Response to "வவுனியா பாரதிபுரம் விளையாட்டு மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பெரும் ஆரவாரத்துடன் வரவேற்பு!"
แสดงความคิดเห็น