ஐக்கிய தேசியக் கட்சி மேலும் எட்டு வருடங்கள் எதிர்க்கட்சியாக இருக்க நேரிடும்: எஸ்.பி திஸாநாயக்க
ஐக்கிய தேசியக் கட்சி மேலும் எட்டு வருடங்கள் எதிர்க்கட்சியாக இருக்க நேரிடும் என கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு ஏழு முதல் எட்டு வரையிலான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதாகவும், பசில் ராஜபக்ஷவுடன் முறுகல் ஏற்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மங்கள சமரவீரவின் பேச்சைக் கேட்டதனால் தாம் சந்திரிக்காவுடன் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டமைக்கு வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உயர் பதவிகளை வகிக்க தாம் உத்தேசிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கே ஆதரவளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட நிலைப்பாடுகளை உற்று நோக்கினால் இந்த வெளிப்படை உண்மை புலனாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Response to "ஐக்கிய தேசியக் கட்சி மேலும் எட்டு வருடங்கள் எதிர்க்கட்சியாக இருக்க நேரிடும்: எஸ்.பி திஸாநாயக்க"
แสดงความคิดเห็น