புலிகள் இயக்கத்திலிருந்து தாம் பிளவடைவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி காரணமல்ல-வி.முரளிதரன் எம்.பி (கருணாஅம்மான்)
புலிகள் இயக்கத்திலிருந்து தாம் பிளவடைவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி காரணமல்ல என தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி எனப்படும் கருணா தெரிவித்துள்ளார். புலிகளிடமிருந்து பிளவடைந்து வந்தபோது ஐக்கிய தேசியக் கட்சியே தமக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடமிருந்து பிளவடைய வேண்டும் என்பது தமது தனிப்பட்ட தீர்மானம் எனவும், அதில் எவரும் அழுத்தம் செலுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், அப்போது ஆட்சி நடத்திய ஐக்கிய தேசியக் கட்சி தமக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளிடமிருந்து பிளவடைந்த காலத்தில் ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன தம்மை புகழ்ந்து பாராட்டியதாகவும், தற்போது ஜனாதிபதிக்கு ஆதரவளித்து வருகின்ற காரணத்தினால் ஒர் கொலைகாரனாகவும், தேசத்துரோகியாகவும் குறித்த கட்சிகள் பிரச்சாரம் செய்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கிழக்கில் 500 பொலிஸ் உத்தியோகத்தர் படுகொலை மற்றும் அரந்தலாவை பௌத்த பிக்கு படுகொலைச் சம்பவங்களுடன் தமக்கு தொடர்பில்லை எனவும், அந்தப் படுகொலைகளை பொட்டு அம்மான் மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உறவினர்கள் கொல்லப்பட்ட காரணத்தினால் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதாகவும், யுத்தம் அர்த்தமற்றதென உணர்ந்து கொண்டதனால் அமைப்பிலிருந்து விலகியதாக அவர் தெரிவித்துள்ளார். பிரபாரகன் புத்திஜீவிகளின் கருத்துக்களுக்கு முக்கியத்தும் அளிக்காது தான்தோன்றித் தனமாக செயற்பட்டு வந்தாக அவர் தெரிவித்துள்ளார்.
0 Response to "புலிகள் இயக்கத்திலிருந்து தாம் பிளவடைவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி காரணமல்ல-வி.முரளிதரன் எம்.பி (கருணாஅம்மான்)"
แสดงความคิดเห็น