அரசகட்டுப்பாடற்ற பகுதிளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு உதவ விசேட திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அரச கட்டுப்பாடற்ற பகுதிகளில் நீண்டகாலம் பணியாற்றிய தொண்டராசியர்களின் பதவி நியமனத்துக்காக விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி பூநகரி சந்தைப்பகுதிக்கு முன்பாகவுள்ள மைதானத்தில் நேற்று இரவு (21) மீள் குடியமர்ந்த பொதுமக்களை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்த ஆசிரியர்களின் நியமனத்துக்காக அமைச்சரவையில் விசேட அமைச்சரவைப் பத்திரமொனறை சமர்ப்பித்து தொண்டராசியர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாணவுள்ளதாகவும் குறிப்பிட்டார். பூநகரி பகுதியில் மீள்குடியமர்ந்த மக்களின் சார்பாக அங்கு உரையாற்றிய பூநகரி பகுதி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் நீண்டகாலம் செப்பனிடப்படாத நிலையில் அங்குள்ள வீதிகள் குன்றும் குழியுமாக குறிப்பாக பாடசாலை செல்லும் வீதியை உடன் திருத்தியமைக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் அவர்களிடம் எடுத்து கூறினார். கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களில் பலரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளின் விடுதலைக்கு உதவுமாறும் அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகள் பற்றிய விடயம் தலையாய பிரச்சனையாக இருப்பதால் அவர்களது விடுதலை நடைபெறவுள்ள தேர்தல்களில் சாதகமான நிலையினை ஏற்படுத்து மென்றும் தெரிவித்தார். தனிப்பட்டதும் மற்றும் பொதுவான அபிவிருத்திக்குமான கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கையளித்த மாஜர்களைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குடாநாட்டு மக்களின் பிரச்சனைகளை மட்டுமன்றி வன்னி மாவட்டங்களில் மீள்குடியமரும் மக்களது பிரச்சனைகளையும் கவனத்தில் கொண்டு செயற்படவேண்டிய நிலையில் தாம் இருப்பதாகவும் அடுத்த மாதம் நேரடியாக வந்து மக்களைச் சந்தித்து அவசியமான பணிகளை உடனடிக் கவனத்திற்குட்படுத்தவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார். |
0 Response to "அரசகட்டுப்பாடற்ற பகுதிளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு உதவ விசேட திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா"
แสดงความคิดเห็น