jkr
แสดงบทความที่มีป้ายกำกับ அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் แสดงบทความทั้งหมด

பிரதேச அரசியல்வாதி ஒருவரின் தவறான செயல்களினால் வடக்கு கிழக்கில் ஆளும் கட்சி தோல்வியடைந்தது: முரளிதரன்

பிரதேச அரசியல்வாதி ஒருவரின் தவறான செயற்பாடுகளினால் வடக்கு கிழக்கில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறைந்த வாக்குகளைப் பெற்றுக்கொள்ள நேர்ந்ததாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேச அரசியல்வாதி ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்த போதிலும், தமது ஆதரவாளர்களை சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கும் முனைப்புக்களில் ஈடுபடுத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

போலியான வாக்குறுதிகளை அளித்து வடக்கு கிழக்கு மக்களை குறித்த அரசியல் தலைவர் ஏமாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முகஸ்துதிக்காக ஜனாதிபதியையும், பசில் ராஜபக்ஷவையும் பாராட்டிப் பேசிய குறித்த அரசியல் தலைவர், ஜெனரல் சரத் பொன்சேகாவின் பின்னால் சென்றதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கில் அதிக எண்ணிக்கையிலானோர் ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களிக்க வில்லை எனவும், அவர்கள் இப்போது வருந்துவதாகவும் முரளிதரன் தெரிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கருணாகுழுவினர் பொத்துவில்லில் கப்பம்கோரி வருகின்றனர் -சிங்கள ஊடகம் தெரிவிப்பு!


பொத்துவில் பகுதியில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவின் சகாக்களான இளம்பரிதி போன்றவர்கள் கப்பம் கோரி வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது மக்களிடம் கப்பம்கோரும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவி;க்கப்படுகிறது. தேர்தலின் போது வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து ஆராயும் நோக்கில் அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த விடயம் அம்பலமாகியுள்ளது ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகள் பூரணமாக இல்லாதொழிக்கப் படவில்லை எனவும் அந்த சிங்கள ஊடகம் மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பாரிய சவால்கள் இல்லை - அமைச்சர் முரளீதரன்


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் எந்தச் சவாலையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும் ஜனாதிபதியின் அமோக வெற்றிக்கு தாம் கடுமையாக உழைத்து வருவதாகவும் தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

" முப்பது வருட யுத்தத்தில் அழிந்துபோன எம் மண்ணை நாம் கட்டியெழுப்ப வேண்டும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தான் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதியையே ஆதரிக்க வேண்டும் : அமைச்சர் கருணா


வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க வேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் தம்முடன்தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் செய்யக்கூடாது" என தேச நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கு மக்கள் குறிப்பாக குடாநாட்டு மக்களுக்குத் தாம் இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வேரூன்றச் செய்வதுடன், கிழக்கு பகுதி மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கச் செய்யும் விதத்தில் சூறாவளி பிரசாரங்களை செய்துவரும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கிழக்கில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்பார்கள் என உறுதியுடன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துதல், மற்றும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்திகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று முன்னெடுத்து வருகிறார்.

குடாநாட்டுடன் தென்பகுதியை இணைக்கும் ஏ-9 வீதி அபிவிருத்தி செய்யப்படுகிறது. யாழ். குடாநாட்டுக்கான ரயில் பாதைகளை அமைக்கும் வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மீன்பிடி, சுகாதாரம், கல்வி, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வடபகுதி மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தருணத்தில் நாம் உங்களுடன்தான் இருக்கிறோம். உங்களுக்கே எமது ஆதரவு என்பதை உணர்த்த வேண்டும். ஒரு வரலாற்றுத் தவறை மீண்டும் தமிழ் மக்கள் செய்துவிடக்கூடாது என வடக்கு மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர். அவர் நல்லதொரு அரசியல் பின்னணியைக் கொண்டவர். சரத் பொன்சேக்கா போன்றோர் முற்றிலுமாக இராணுவப் பின்னணியைக் கொண்டவர். இதனை தமிழ் மக்கள் எவரும் அனுமதிக்க மாட்டார்கள்" என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates