ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பாரிய சவால்கள் இல்லை - அமைச்சர் முரளீதரன்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் எந்தச் சவாலையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும் ஜனாதிபதியின் அமோக வெற்றிக்கு தாம் கடுமையாக உழைத்து வருவதாகவும் தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
" முப்பது வருட யுத்தத்தில் அழிந்துபோன எம் மண்ணை நாம் கட்டியெழுப்ப வேண்டும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தான் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.







0 Response to "ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பாரிய சவால்கள் இல்லை - அமைச்சர் முரளீதரன்"
แสดงความคิดเห็น