சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் ஒளி விழா!
சாவகச்சேரி பிரதேசத்திற்குட்பட்ட கிறிஸ்தவ மக்களும் இராணுவத்தினரும் இணைந்து மிக பிரமாண்டமான ஒளி விழா நிகழ்வொன்று புனித லிகோரியார் ஆலயத்தில் நேற்று முன் தினம் (29) நடைபெற்றுள்ளது. நத்தார் தின பண்டிகை கொண்டாட்டங்களை முன்னிட்டு 52வது படைப் பிரிவினரும் சாவகச்சேரி பிரதேச மக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ் ஒளி விழா நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் ஒளியேற்றலுடன் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர். ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு வந்த இவ் ஒளிவிழாவில் ஒளிவழிபாடு நடைபெற்றதுடன் பாலன் பாடலினை தொடர்ந்து பங்குத் தந்தையின் ஆசியுரை நடைபெற்றது. தெடர்ந்து தமிழ் மக்களின் கலாச்சாரத்தை ஒட்டியதான கும்மி கோலாட்டம் தும்பு நடனம் உட்பட பிரதேச ஆலய மாணவர்கள் மறையாசிரியர்களின் நாடகம் நடனம் கவிதை போன்ற இன்னோரண்ன நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இராணுவத்தினரின் சிங்கள கிறிஸ்மஸ் கரோல் கீத இசை நிகழ்ச்சி மக்களை இனிமைப்பட வைத்தது. அத்துடன் கிறிஸ்மஸ் நிகழ்வுகளை சிறப்பிக்கும் வகையில் படையினரால் பரிசில் பொதிகளும் தீன் பண்டங்களும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் பங்குத் தந்தை தயாகரன் அடிகள் 52வது படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சேனநாயக்கா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட பிரதி அமைப்பாளர் சூசைமுத்து அலெக்ஸ்சாண்டர் சாள்ஸ் சாவகச்சேரி வர்த்தக சங்க தலைவர் பாலா சாவகச்சேரி றிபேக் கல்லூரி பிரதி அதிபர் உட்பட பல்வேறு சமய சமூக பிரமுகர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. |
0 Response to "சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் ஒளி விழா!"
แสดงความคิดเห็น