பத்மநாதன் விரைவில் ஊடக சந்திப்பொன்றில் கலந்துக் கொள்வார் -லக்பிம தெரிவிப்பு!
பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை விரைவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொள்ளவுள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது எதிர்வரும் வாரமளவில் குமரன் பத்மநாதன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொள்வர் எனவும் பாதுகாப்பு அமைச்சு வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன முதல்தடவையாக இவ்வாறான ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டப்பட்ட விதம் கப்பம் கோரப்பட்ட விதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அவர் அம்பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது
0 Response to "பத்மநாதன் விரைவில் ஊடக சந்திப்பொன்றில் கலந்துக் கொள்வார் -லக்பிம தெரிவிப்பு!"
แสดงความคิดเห็น