பருத்தித்துறை பகுதியில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன!
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு தற்போது பருத்தித்துறை பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுகான முதற்கட்ட கொடுப்பனவு டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (24) பருத்தித்துறை பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நலன்புரி நிலையங்களில் இருந்து சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் தேவைகள், பிரச்சினைகள் மற்றும் எதிர்கால வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் அம் மக்களுடன் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.
பருத்தித்துறை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் 321குடும்பங்களுக்கான உடனடிக் கொடுப்பனவான 5ஆயிரம் ரூபா நிதி அமைச்சர் அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது.
இம் மக்களுக்கு இவற்றினை வழங்கி அம்மக்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தற்போது மீளக் குடியமர்த்தப்பட்ட யாழ் குடாநாட்டை சொந்த இடமாகக் கொண்ட அனைவருக்கும் முதற் கட்ட கொடுப்பனவான 5ஆயிரம் ரூபா நிதியானது வழங்கப்பட்டு வருவதுடன் தொடர்ந்தும் கட்டங்கட்டமாக 50 000ரூபா பொறுமதியான நிதி வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் இந் நிதியானது எமது மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு போதாது என்பதை நாம் நன்கு உணர்ந்துள்ளதால் அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் கட்டியெழுப்ப வீட்டுத்திட்ட மற்றும் சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.
.jpg)

0 Response to "பருத்தித்துறை பகுதியில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன!"
แสดงความคิดเห็น