ஊர்காவற்துறை பிரதேச செயலகப் பிரிவில் மீளக்குடியேறிய மக்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன!
.jpg)
இன்றைய தினம் ஊர்காவற்றுறை பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நலன்புரி நிலையங்களில் இருந்து சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் தேவைகள் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் அம் மக்களுடன் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.
ஊர்காவற்றுறை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஸ்ரீமோகன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் அமைச்சின் ஊடகச் செயலாளர் நெல்சன் எதிரசிங்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச பொறுப்பாளர் மித்திரன் தீவக அமைப்பாளர் கந்தசாமி வதிமகன் ஊர்காவற்றுறை பிரதேச பொறுப்பாளர் காந்தன் மற்றும் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய பொதுமக்கள் உட்பட அப் பகுதி ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கி இருந்து தற்போது ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவை சொந்த இடமாகக் கொண்ட 741குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒரு தொகுதியினருக்கான மீள்குடியேற்ற உடனடிக் கொடுப்பனவான 5ஆயிரம் ரூபா நிதியானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிலையில் ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அவ்வாறு வழங்கப்படாத ஏனைய 622குடும்பங்களுக்கான உடனடிக் கொடுப்பனவான 5ஆயிரம் ரூபா நிதியானது அமைச்சர் அவர்களினால் நேரடியாகச் சென்று இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதுடன் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக அரச பொதுக் காணிகளில் குடியிருந்த தற்காலிக காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்த 26 குடியிருப்பாளர்களுக்கான அரச பதிவு காணி உறுதி பத்திரங்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் குறித்த குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 Response to "ஊர்காவற்துறை பிரதேச செயலகப் பிரிவில் மீளக்குடியேறிய மக்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன!"
แสดงความคิดเห็น