ஜனாதிபதி வேட்பாளர்களான மகிந்த ராஜபக்சவும் சரத் பொன்சேகவும் சைபர் யுத்தத்திற்குத் தயாராகி விட்டார்கள்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்டியில் உள்ள ஜனாதிபதி இல்லத்தில் வைத்து தனது தேர்தல் பிரச்சாரத்திற்கான www.mahinda2010.lk என்ற இணையத் தளத்தை ஆரம்பித்து வைத்தார்.
அந்த ஆரம்ப வைபவத்தின் போது உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தாய் நாட்டை எல்லோரும் நேசிக்க வேண்டும். எல்லாவற்றையும் விட இது முக்கியமானது. அப்போது தான் நாடு உலகில் உயர்ந்த இடத்தில் வைக்கப்படும். புடைவீரர்களால் நாடு எவ்வாறு கௌரவிக்கப்பட்டதென்பதற்கு நானே சாட்சி.
சிலர் வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களைப் படையினர் கொன்றதாகச் சொல்கிறார்கள். பிரபாகரனின் பெற்றோர் மீட்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்செல்வனின் மனைவியும் பிள்ளையும் முகாமிலிருக்கிறார்கள். கடற்புலித் தலைவர் சூசையின் பிள்ளைகளும் மனைவியும் மீட்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளரான சரத் பொன்சேகா www.sarathfonseka.com என்ற தனது இணையத்தளத்தை கொழும்பில் ராஜகீய மாவத்தையில் உள்ள தனது அலவலகத்தில் வைத்து ஆரம்பித்து வைத்தார். இந்த நவீன தொடர்பூடகம் எமது கொள்கைகளையும் நிலைப்பாட்டையும் மக்களிடம் எடுத்துச் செல்லும். எமது வெளிப்படைத்தன்மையைப் பறைசாற்றும் என்றும் அதன் போது தெரிவித்தார்
0 Response to "ஜனாதிபதி வேட்பாளர்களான மகிந்த ராஜபக்சவும் சரத் பொன்சேகவும் சைபர் யுத்தத்திற்குத் தயாராகி விட்டார்கள்."
แสดงความคิดเห็น