இறுதி யுத்தத்தின் பின்னர் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 738 தமிழ் கைதிகள் இந்தவாரம் விடுதலை!
இறுதி யுத்தத்தின் பின்னர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுத் தடுத்து வைக்ககப்பட்டுள்ளவர்களுள் 738 பேர் இவ்வார இறுதிக்குள் விடுதலை செய்யப்படுவார்களென சட்ட மாஅதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்தார். நிவாரணக் கிராமங்களில் இருந்த போது விசாரணைக்கென கொண்டு செல்லப்பட்டவர்களுள்700 பேரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் 38 பேருமே இவ்வாறு விடுவிக்கப்படுவதாக சட்ட மாஅதிபர் கூறினார்.
சி. ஐ. டி.யினரால் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளவர்களுள் 55 பேர் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விடுவிக்கப்பட்டவர்கள் எவ்வித குற்றச் செயல்களிலும் சம்பந்தப்படாதவர்கள் என்பது நிரூபணமாகியிருப்பதாகவும் ஏற்கனவே 100 பேர் இவ்வாறு விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் சட்ட மாஅதிபர் கூறினார்.
தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுபவர்களைத் துரிதமாக விடுவிப்பதோடு ஒரு மாதத்தில் குறைந்தது 100 பேரையாவது விடுவிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
புலிகள் இயக்க உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் 11,500 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது.
இவர்கள் தவிர இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களுக்கு வந்து சேர்ந்தவர்களுள் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களுள் சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் 700 பேர் இவ்வாரம் விடுதலையாகின்றனர்.
இவர்களை மீளக்குடியர்த்த நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிட த்தக்கது
0 Response to "இறுதி யுத்தத்தின் பின்னர் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 738 தமிழ் கைதிகள் இந்தவாரம் விடுதலை!"
แสดงความคิดเห็น