முன்னாள் தாய்லாந்து பிரதமரை, பொருளாதார ஆலோசகராக நியமிக்க இலங்கை தயாராவதாக தகவல்!
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சின்வாத்ராவை, பொருளாதார ஆலோசகராக நியமிக்க இலங்கை அரசாங்கம், தயாராகி வருவதாக பேங்கொக் போஸ்ட் தெரிவித்துள்ளது. தக்சின் சின்வாத்ரா இலங்கையில் அரசியல் அடைக்கலம் கோரவுள்ளார் என வெளியான தகவலின் பின்னரே இந்த பொருளாதார ஆலோசகர் பதவி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தக்சின் சின்வாத்ரா ஏற்கனவே கம்போடியாவுக்கான பொருளாதார ஆலோசகராகப் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தக்சின் சின்வாத்ரா, நிலவழக்கு ஒன்றில் இருவருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விஜயம் செய்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். 2001ம் ஆண்டுமுதல் 2006ம் ஆண்டுவரை தாய்லாந்தில் பிரதமராக இருந்த வர்த்தகரான சின்வாத்ரா, இராணுவப் புரட்சியின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார். சின்வாத்ராவின் அரசாங்கம் ஊழல், மனிதஉரிமை மீறல் மற்றும் வன்முறைகளுக்குப் பெயர்போன அரசாங்கமாக விளங்கியது. இந்நிலையில், இலங்கை அரசாங்கம் அவரை பொருளாதார ஆலோசகராக ஏற்றுக் கொள்ளப் போகிறதா? எனப் பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகமவை கேட்டபோது, அவ்வாறான முனைப்புக் குறித்து தமக்குத் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
0 Response to "முன்னாள் தாய்லாந்து பிரதமரை, பொருளாதார ஆலோசகராக நியமிக்க இலங்கை தயாராவதாக தகவல்!"
แสดงความคิดเห็น