20 வருடங்களின் பின்பு யாழ்-மட்டக்களப்பு இ.போ.ச. பஸ் சேவை ஆரம்பம்!
சுமார் 20 வருடங்களின் பின்பு யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்குமிடையில் இ.போ.ச. பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இ.போ.ச. டிப்போக்கள் இணைந்து தினமும் குறித்த பஸ் சேவையை நடத்தி வருகின்றன.
ஏற்கனவே திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையிலான பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.எதிர்வரும் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கும் கல்முனைக்குமிடையிலான பஸ் சேவையும் கல்முனை இ.போ.ச டிப்போவினால் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கிழக்கு பிராந்திய போக்குவரத்து சபை அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார்
0 Response to "20 வருடங்களின் பின்பு யாழ்-மட்டக்களப்பு இ.போ.ச. பஸ் சேவை ஆரம்பம்!"
แสดงความคิดเห็น