ஏப்ரல் முதல் யாழ்தேவி ரயில் சேவை ஓமந்தை வரை நீடிப்பு : அரசு தகவல்
ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக யாழ்தேவி ரயில் சேவையை ஓமந்தை வரையான குறுகிய தூரத்துக்கு நீடிக்கவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி ஓமந்தை வரையில் யாழ்தேவி ரயில் சேவை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நீடிக்கப்படும் என ரயில் சேவை பொது முகாமையாளர் பி.பி. விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதற்காகத் தாண்டிக்குளத்தில் இருந்து 10 கிலோமீற்றர் நீளமான ரயில் பாதைகளை மீளமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், ஓமந்தை ரயில் நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பணிகள் 400 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, யாழ்தேவி ரயில் சேவையை யாழ்ப்பாணம் வரையில் நீடிப்பதற்கான ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா வரையிலான ரயில் பாதை பாரிய சீர்கேடுகளுடன் காணப்படுவதாக முறைபாடுகள் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 Response to "ஏப்ரல் முதல் யாழ்தேவி ரயில் சேவை ஓமந்தை வரை நீடிப்பு : அரசு தகவல்"
แสดงความคิดเห็น