ஆழிப்பேரலை ஜந்தாவது ஆண்டு நினைவு தினம்!
நாம் அனைவரும் சுனாமி பேரழிவிற்கு முகம் கொடுத்த டிசம்பர் 26ம் திகதியான இன்றைய நாளை தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தியிருப்பது பேரழிவென்ற சவாலை ஒன்றிணைத்து வெற்றிகொண்ட அனைவருக்கும் வழங்கும் கெளரவமாகவே கருதுகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். எம்மை கடந்து செல்லும் 2009 ம் ஆண்டு சில அனுபவங்களையும் நினைவுகளையும் எமக்கு விட்டுச் செல்கிறது.
குறிப்பாக 30 வருடகாலமாக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த பிரதானமான மானூட இடராகக் கருதப்பட்ட பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டது என்பது அதில் ஒன்றாகும்.
அடுத்ததாக. இயற்கை பேரழிவுகளுக்கு இடர்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய முன் ஏற்பாடுகளை செய்யக்கூடியவர்களாக எம்மை பலப்படுத்திக் கொண்டுள்ளோம்.
இதன்படி, இடர்கள் தொடர்பாகத் தொழில்படுகின்ற சர்வதேச நிறுவனங்கள் அமைப்புகள் என்வற்றுடனான தொடர்பு களை பலப்படுத்துவதுடன் நாட்டில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடி முழு மையான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளுக்கான ஒரு பலமான கட்டமைப்பு உருவாக் கப்பட்டுள்ளது. அபிவிருத்தி முன்னெடுப் புகளுடன் இடர்களை வெகுவாக குறை க்கவும் தடுக்கவும் கூடியவாறான வேலைத் திட்டங்களை ஒன்றிணைத்துக் கொண்டு மேற்கொள்ளக்கூடியவர்களாக இருப்பது நாம் பெற்றுள்ள வெற்றியாகவே கருது கிறேன்.
இடர்கள் குறிப்பாக மக்களை தெளிவு படுத்துவதும், ஆர்வம் காட்டச் செய்வதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவது போன்ற குறிக்கோள்களை மையமாகக் கொண்டு நினைவு கூரப்படும் இன்றைய தேசிய பாதுகாப்பு தினம் 2004 டிசம்பர் 26ம் திகதி நாம் எதிர்கொண்ட சுனாமி போன்ற பேரழிவுகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய பலம் அதிகரிக்க வழிவகுக்கும் எனவும் ஜனாதிபதி தனது செய்தியில் குறிப் பிட்டுள்ளார்.
0 Response to "ஆழிப்பேரலை ஜந்தாவது ஆண்டு நினைவு தினம்!"
แสดงความคิดเห็น