நத்தார் ஆராதனையில் பாப்பரசரை வீழ்த்திய இளம் பெண்ணால் பரபரப்பு
வத்திக்கான் சிட்டி புனித பீட்டர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்புப் பிரார்த்தனையின்போது இளம் பெண் ஒருவர் புனித பாப்பரசர் மீது மோதி அவரைக் கீழே வீழ்த்தினார். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கிறிஸ்தவர்களின் தலைமை பீடமான வத்திக்கானில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி போப்பாண்டவர் சிறப்பு பிரார்த்தனை நடத்தி நற்செய்தி வெளியிடுவது வழக்கம். இந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க வத்திக்கான் சிட்டி புனித பீட்டர் தேவாலயம் பகுதியில் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் திரண்டிருந்தனர்.
நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைக்காக போப்பாண்டவர் 16 ஆம் பெனடிக்ட் வந்தார். அவர் தங்க, வெள்ளை நிற அங்கி அணிந்திருந்தார். 82 வயதான அவரை பலத்த பாதுகாப்புடன் தேவாலய பாதுகாவலர்கள் அழைத்து வந்தனர்.
புனித பீட்டர் தேவாலயத்துக்குள் அவர் வந்த போது இரு பக்கமும் திரண்டிருந்த கிறிஸ்தவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் இளம் பெண் ஒருவர் தடுப்பு கம்பியை தாண்டி குதித்தார். பிறகு அதேவேகத்தில் போப்பாண்டவர் மீதி மோதினார். அப்போது போப் அணிந்திருந்த அங்கியை பிடித்துக் கொண்டார்.
இதில் போப்பாண்டவர் பெனடிக்ட் நிலை குலைந்து கீழே விழுந்தார். போப்பாண்டவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த மதகுருக்களும் கீழே விழுந்தனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் புனித பீட்டர் தேவாலயத்திற்குள் பரபரப்பு எற்பட்டது.
பாதுகாவலர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை பிடித்துச் சென்றனர். கீழே விழுந்து கிடந்த போப்பாண்டவரை தூக்கி விட்டனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால் போப்பாண்டவரை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த 87 வயதான பிரான்சு நாட்டு கத்தோலிக்க மதகுரு ரோஜர் கிட்கரே கீழே விழுந்து காயம் அடைந்தார். அவர் காலில் முறிவு ஏற்பட்டது. அவர் ஏற்கனவே உடல் நலக் குறைவுடன் இருந்தார். அவரை சக்கர நாற்காலியில் அமரச் செய்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதையடுத்து சிறிது நேரத்தில் பரபரப்பு ஓய்ந்து சகஜநிலை திரும்பியது. பதட்டம் இல்லாமல் காணப்பட்ட போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் பிறகு சுமார் 2 மணி நேரம எந்தவித பரபரப்பும் இன்றி சிறப்பு பிரார்த்தளை நடத்தினார்.
போப்பாண்டவர் மீது மோதிய பெண் சிவப்பு நிற மேலாடை அணிந்திருந்தார். அவரிடம் வத்திக்கான் நகரப் பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண் யார் என்ற விபரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.
வத்திக்கான் புனித பீட்டர் தேவாலய செய்தித் தொடர்பாளர் பெட்ரிகோ லம்பார்டி கூறிகையில், கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்றும் இதே பெண் தடுப்பை தாண்டி போப் அருகில் வரமுயற்சி செய்தார். பாதுகாவலர்கள் அப்போது தடுத்து விட்டனர். இந்த ஆண்டு அந்த பெண் மீண்டும் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்றார்.

0 Response to "நத்தார் ஆராதனையில் பாப்பரசரை வீழ்த்திய இளம் பெண்ணால் பரபரப்பு"
แสดงความคิดเห็น